வீட்டு முடக்கத்தை நீக்கவேண்டும் என்ற ஸ்பானிய பாசிச வோக்ஸ் கட்சியின் கோரிக்கைக்கு பொடேமோஸ் கீழ்ப்படிகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

ஜனவரி 6 ஆம் திகதி வாஷிங்டனில் டொனால்ட் ட்ரம்ப் முயற்சித்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பு சதி மற்றும் ஸ்பெயினில் ஒரு பிராங்கோவாத சதித் திட்டத்தின் பொது அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், ஸ்பானிய சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி (Partido Socialista Obrero Español - PSOE) - பொடேமோஸ் (‘We can’ - Podemos) அரசாங்கத்திற்கு பாசிச வோக்ஸ் (Voice - Vox) கட்சி நிபந்தனைகளை அதிகரித்த வகையில் ஆணையிடுகிறது.

COVID-19 வைரஸானது ஐரோப்பா முழுவதும் அதிகரித்து வருகிறது, தொற்றுகள் மற்றும் தினசரி இறப்புக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கானதாக அதிகரித்து வருகிறது. ஆயினும்கூட, வோக்ஸ் கட்சி இந்த பெருந்தொற்று நோயைத் தடுக்க வீட்டில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் ஒரு கொள்கையை வெளிப்படையாக கண்டித்தபோது, PSOE-Podemos அரசாங்கம் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டது.

இரண்டாவது இடதில், ஸ்பெயினின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (PSOE), இரண்டாவது வலதில், பொடெமோஸ் தலைவர் பப்லோ இக்லெசியாஸ், மற்றும் இடதில், முதல் துணை பிரதமர் கார்மென் கால்வோ, ஸ்பெயின் மாட்ரிட்டிலுள்ள மாங்லோவா அரண்மனையில், செவ்வாய், ஜனவரி 14 2020. (Image Credit: AP Photo/Manu Fernandez)

வெள்ளியன்று, வோக்ஸ் தலைவர் சாண்டியாகோ அபாஸ்கால் பார்சிலோனாவில் "அமெரிக்கா மற்றும் ஸ்பெயினில் தேசபக்தியின் எதிர்காலம்" என்ற தலைப்பில் கட்சி ஆதரவு நிகழ்வில் தலையிட்டார். மற்றய அதி-வலது பங்கேற்பாளர்களில் இத்தாலியின் சகோதரர்கள் (Fratelli d'Italia) கட்சியின் ஜோர்ஜியா மெலோனியும் அடங்குவார்; அதிவலது சிலி அரசியல்வாதி ஜோஸ் அன்டோனியோ காஸ்; மற்றும் அமெரிக்க குடியரசுக் கட்சி செயற்பாட்டாளர்கள் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன் (Heritage Foundation) சிந்தனைக் குழுவின் டெட் புரோமண்ட் மற்றும் குரோவர் நோர்க்விஸ்ட் (Grover Norquist). பிந்தையவர், ஜனநாயகக் கட்சிக்கும் அதன் "குடியரசுக் கட்சி சகாக்களுக்கும்" இடையே ட்ரம்ப் பின் சதிக்குப் பின்னர்" "ஒற்றுமையின்" அடையாளமாக வரவிருக்கும் பைடென் நிர்வாகத்தால் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்ட டேவிட் நோர்குவிஸ்டின் சகோதரராவார்.

ட்ரம்ப்பின் ஆட்சிக் கவிழ்ப்பு சதி முயற்சியின் போது ட்ரம்பின் கணக்கை மூடியதற்காக அபாஸ்கால் ட்டுவிட்டரை (Twitter) கண்டனம் செய்தார். வோக்ஸ் தலைவர் இது "வெறுப்பின்" விளைவு என்றார், இது "பூகோளமயவாதிகள், இடதுகளின் அச்சத்தை காட்டுகிறது, எதிர்காலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல, அது தேசபக்தர்களுக்கே சொந்தமானது". "இடது"க்கு எதிராக "ஒருங்கிணைக்கப்பட்டு, ஒன்றுபட" வேண்டும், அதாவது தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக" "ஒருங்கிணைந்த மற்றும் ஐக்கியப்பட" வேண்டும் என்று பாசிசவாதிகளுக்கும் அதி-வலது தீவிரவாதிகளுக்கும் அழைப்பு விடுப்பதுடன் அவர் முடித்தார்.

கூட்டத்திற்கு சற்று முன்னர், ஸ்பெயினின் பழமைவாத மக்கள் கட்சி (PP) வீட்டில் பாதுகாப்பாக இருத்தல் ஒரு கொள்கையை செயற்படுத்துவதன் எச்சரிக்கை நிலைக்கு எதிராக தனது எதிர்ப்பை மாற்றக்கூடும் என்ற செய்திக்கு அபாஸ்கல் பகிரங்கமாக விடையிறுத்தார். சுகாதாரக் கொள்கையை மாற்றுவதற்கான எந்த முயற்சியும் இருக்க முடியாது என்பதை அவர் தெளிவுபடுத்தினார்: "ஸ்பெயின் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், ஆனால் ஸ்பெயின் நிறுத்த முடியாது. ஸ்பானியர்களை அவர்களின் வீடுகளில் கைது செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை. பல மாதங்களாக அவர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை, அல்லது அவர்களின் உரிமைகள் தடைசெய்யப்படுகின்றன.”

அபாஸ்காலின் தலையீட்டிற்கு சில மணி நேரங்களுக்குப் பின்னர், சுகாதார எச்சரிக்கைகள் மற்றும் அபாயங்களுக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் (Centre for the Coordination of Health Alerts and Emergencies) இயக்குனரான பெர்னாண்டோ சிமோன், பல வாரங்களாக அவர் செய்ததைப் போல, PSOE-Podemos அரசாங்கம் வீடுகளில் பாதுகாப்பாக இருத்தல் நிலைக்கு பின்வாங்காது என்பதை தெளிவுபடுத்தினார். சிமோன் கூறினார்: "எப்போதும் போல், வீட்டில் பாதுகாப்பாக இருப்பதற்கான பொதுமுடக்கத் தேர்வு உள்ளது. ஆனால், இப்போது அது தேவை என்று தோன்றவில்லை. எதிர்காலத்தில் நாம் பார்ப்போம். நடைமுறைப்படுத்தப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பிரான்ஸ் அல்லது ஜேர்மனியின் நடவடிக்கைகளை ஒத்தவையாக இருக்கின்றன."

ஸ்பெயின் முழுவதிலுமுள்ள பிராந்திய அரசாங்கங்கள் பின்பற்றுகின்ற மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், அத்தியாவசியமற்ற வேலைகள் மற்றும் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப அனுமதிக்கும் அதே நேரத்தில் பார்கள் மற்றும் உணவகங்களை மூடுவது போன்ற மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள், "பொது முடக்கத்தின் பெயரிலில்லை, ஆனால் நடவடிக்கைகளின் தொகுப்பும் மிகவும் ஒத்த விளைவைக் கொண்டிருக்கும்" என்று அவர் பொய்யாகக் கூறினார்.

அடுத்த நாள் காலை, பாசிஸ்ட்டுகளுக்கு மேலும் நம்பிக்கையூட்டுவது போல், சுகாதார அமைச்சர் சல்வடோர் இல்லா ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்: "இந்த நேரத்தில், நாங்கள் எந்த வீட்டுப் பொது முடக்கத்தை சிந்திக்கவில்லை. நாங்கள் வீட்டுப் பொது முடக்கம் இல்லாமல் இரண்டாவது அலை ஆதிக்கம் செலுத்தியது. இந்த மூன்றாவது அலையை இணை கட்டுப்பாடு மற்றும் தற்போதைய எச்சரிக்கையின் நிலை மூலம் தோற்கடிப்போம், இது வேலை செய்கிறது." "நாங்கள் மூன்றாவது அலையில் இருக்கிறோம், நாங்கள் மிகவும் கவலையான புள்ளிவிவரங்களை வெளியிடுகிறோம், ஆனால் நாம் அறிவு, அனுபவம் மற்றும் இந்த அளவு வளைவை எவ்வாறு வளைப்பது என்பதை அறிவோம் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

ஸ்பெயினின் PSOE-Podemos அரசாங்கம் பொய் கூறுகிறது. வசந்த காலத்தில் பொது முடக்க நடவடிக்கைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முடிவுக்கு வந்த பின்னர், இரண்டாவது வைரஸின் மீள்எழுச்சியாக இருந்த இரண்டாவது அலை, பெருந்தொற்று நோயின் தற்போதைய நிலையை ஒரு மூன்றாவது அலையாக வரையறுக்க முடியாது. இந்த வைரஸ் ஸ்பெயின் முழுவதும் பரவி வருகிறது, நாடு முழுவதிலுமுள்ள தீவிர சிகிச்சைப் பிரிவுகள் (ICUs) சரிவை எதிர்கொள்கின்றன.

கடந்த திங்களன்று, ஸ்பெயினில் 61,422 புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கள் என்று தகவல் கொடுத்துள்ளது, இதுவரை இது கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்களின் எண்ணிக்கையில் மிக அதிகமாக உள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில், புதனன்று, புதிய கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கையானது 24 மணி நேரத்தில் 38,869 ஆக இருந்தது. வெள்ளிக்கிழமை வரை இந்த தொற்றுக்கள் இதுவரை பார்த்திராத மோசமானதாக இருந்தது, அதாவது ஸ்பெயின் 40,197 புதிய தொற்றுக்களை அறிவித்தது. வரலாற்று நெறிக்கு மேலாக "அதிகப்படியான இறப்புக்களின்" எண்ணிக்கையாக —பெருந்தொற்று நோய் காரணமாக ஏற்படும் இறப்புக்களின் ஒரு சிறந்த குறியீடாகவும்— இப்போது 84,000 க்கும் மேல் உள்ளது.

முதலாளித்துவ ஸ்தாபகத்தின் ஒரு "முற்போக்கான" கன்னையை அது பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்ற எச்சரிக்கையை அரசாங்கத்தின் பிரதிபலிப்பு உறுதிப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கம், பொடெமோஸ் (Podemos) மற்றும் தொழிற்சங்கங்களில் "இடது ஜனரஞ்சகவாதிகளுக்கு" "அழுத்தம் கொடுக்க" முடியாது, இது குறைந்த காலந்தாழ்த்தும் மற்றும் ஒடுக்குமுறைக் கொள்கையை, அல்லது வைரஸிற்கு எதிராக போராட விஞ்ஞான அடிப்படையிலான அணுகுமுறையைப் பெற முடியாது. இந்த சக்திகள் பெருகிய முறையில் பாசிச ஆளும் ஸ்தாபகத்தின் கொள்கையை செயற்படுத்தும் முக்கிய கருவியாக மாறிவருகின்றன.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எச்சரிக்கைகளை இது உறுதிப்படுத்துகிறது: அதாவது இந்த வைரஸ் கட்டுப்பாடு ஐரோப்பாவிலுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களின் கைகளில் விடப்பட்டால், இதன் விளைவு நூறாயிரக்கணக்கான தேவையற்ற இறப்புக்கள் தான் நேரிடுகிறது. பெருநிறுவன இலாப நலன்களுடன் முரண்படுகின்ற பெருந்தொற்று நோய் மற்றும் தனியார் செல்வக் குவிப்பு உந்துதலுக்கு எந்தவொரு விடையிறுப்பும் நாட்டிலுள்ள முதலாளித்துவ உயரடுக்குகள் நிராகரித்துள்ளன.

ஐரோப்பிய ஒன்றிய பிணையெடுப்பானது பொடேமோஸ் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் இணைந்து நிர்வகிக்கப்பட்டு, 140 பில்லியன் யூரோக்களை பெருநிறுவனங்களுக்கும் வங்கிகளுக்கும் மாற்றுவது, ஆயிரக்கணக்கான தொற்றுக்கள், இறப்புக்கள், சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கை, ஓய்வூதிய மற்றும் தொழிலாளர் சீர்திருத்தங்களுடன் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது, மேலும் சமூக எதிர்ப்பை நசுக்குவதற்கு கொடூரமான பொலிஸ்-அரசு ஒடுக்குமுறை ஆகியவற்றுடன் சேர்த்து வழங்கப்படுகிறது.

இதற்கிடையில், வோக்ஸ் மற்றும் இராணுவத்தின் சில பிரிவுகளின் உயர்நிலையான ஆட்சி கவிழ்ப்பு சதி திட்டங்களை மூடி மறைக்க பொடேமோஸ் தலையீடு செய்து வருகிறது. ஒரு வருடத்திற்கும் மேலாக, இந்த சக்திகள் ஒரு தேசிய PSOE-PP-Vox கூட்டு அரசாங்கம் என்ற போர்வையில் சர்வாதிகாரத்தை திணிக்க சதி செய்தனர்.

வீட்டில் பாதுகாப்பாக இருத்தல் கொள்கையைப் பரிசீலிப்பதற்காக PP மீதான வோக்ஸ் இன் தாக்குதல்கள், இக்கொள்கையின் அடிப்படை வர்க்க நலன்களை வெளிப்படுத்துகின்றன. ட்ரம்ப் அவரது ஆட்சி மாற்றத்தைத் தொடங்கிய அன்றே, ஓய்வு பெற்ற லெப்டினென்ட் ஜெனரல் எமிலியோ பெரெஸ் அலமன், அரசாங்கத்தின் "போக்கை" மாற்றவேண்டும் என்று கோரி, பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் எழுதிய சில நாட்களுக்குப் பின்னர், ஒரு மக்கள் கட்சி உள் விவாதம் பாசிச பிரச்சாரத்துடன் தங்களை இணைத்துக் கொள்வதா வேண்டாமா என்பது தொடர்பாக வெளிப்பட்டது.

இது சமூக ஜனநாயக PSOE மற்றும் "இடது ஜனரஞ்சகவாத" பொடெமோஸ் மற்றும் ஐரோப்பா முழுவதிலுமுள்ள அதன் கூட்டாளிகளை அம்பலப்படுத்துவதாக இருக்கின்றது, வோக்ஸ் இன் தலையீடு செய்வதானது PSOE மற்றும் பொடேமோஸின் கொள்கையை மாற்றுவதற்காக அல்ல, மாறாக அவர்கள் ஏற்கனவே செயற்படுத்தி வரும் கொலைகார கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதி செய்யவதற்காகும்.

PSOE-Podemos அரசாங்கத்தின் "சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும்" கொள்கை மற்றும் முதலாளித்துவ வர்க்கத்திலிருந்து தொழிலாளர்களை பிரிக்கும் ஒரு வளர்ந்து வரும் வர்க்க இடைவெளிக்கு எதிராக தொழிலாள வர்க்க எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்த விவாதம் நடைபெறுகிறது. ஸ்பானியர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர், டிசம்பர் தொடக்கத்தில் அரசு நிதியுதவி பெற்ற சமூக ஆராய்ச்சி மையம் (CIS) நடத்திய ஆய்வின்படி, இந்த வைரஸைக் கட்டுப்படுத்த அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும் என்று நம்புகின்றனர்.

இறப்பும் இலாபங்களுக்கான கொள்கைக்கும் மற்றும் உயிர்களை காப்பாற்றும் கொள்கைக்கும் சோசலிசத்திற்கும் இடையே ஒரு பிளவை அது பிரதிபலிக்கிறது. ஐரோப்பா முழுவதும் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியப்பட்ட போராட்டத்தினால் முதலாளித்துவக் கொள்கை எதிர்கொள்ளப்பட வேண்டும். பள்ளிகள் மற்றும் அத்தியாவசியமற்ற வேலைத் தலங்கள் மூடப்பட வேண்டும், அனைவருக்கும் வாழ்க்கைக்கான ஊதியங்கள் வழங்கப்பட வேண்டும், மற்றும் சிறு வணிகங்களுக்கு முழு இழப்பீடும் வழங்கப்பட வேண்டும்.

தொழிற்சங்கங்களுக்கு போராடுவதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற முட்டுக் கொடுக்கக் கூடிய கொள்கைக்கு எதிராக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் அதன் சோசலிச சமத்துவக் கட்சி பிரிவுகளும், பள்ளிகள் மற்றும் பணியிடங்களில் சுயாதீனமான சாமானியக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.

Loading