இலங்கை: வெலிக்கடை சிறைச்சாலை கைதியின் மரணம் பாரதூரமான கேள்விகளை எழுப்புகிறது
நம்பகத்தன்மை வாய்ந்த, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படும் வரை, அவரது மரணத்தைச் சூழ்ந்துள்ள தீவிரமான சந்தேகங்கள் தொடரும்—தொடர வேண்டியதுமாகும்.
நம்பகத்தன்மை வாய்ந்த, வெளிப்படையான மற்றும் சுயாதீனமான விசாரணை நடத்தப்படும் வரை, அவரது மரணத்தைச் சூழ்ந்துள்ள தீவிரமான சந்தேகங்கள் தொடரும்—தொடர வேண்டியதுமாகும்.
2015 முதல் 2026 வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கிய இந்தத் தொகுதி, ட்ரம்ப் அதிகாரத்திற்கு வந்ததையும், ஜனவரி 6 அன்று அவர் நடத்திய சதிப்புரட்சி முயற்சியையும், அவரது இரண்டாவது பதவிக்காலத்தையும் பெருநிறுவன-நிதித் தன்னலக்குழுவோடு தொடர்புபடுத்திக் காட்டுவதுடன், பாசிச அச்சுறுத்தலைத் தடுப்பதற்கான சோசலிச மூலோபாயத்தையும் முன்வைக்கிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான எதிர்ப்பை ஒடுக்கி வந்த ஆசிரியர் தொழிற்சங்கங்கள், ஆகஸ்ட் 4 அன்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.
செனட் சபையில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியினர் இணைந்து நடத்திய வாக்கெடுப்பில் பெறப்பட்ட 86-11 என்ற வாக்குப் பதிவானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் இலக்கு வைக்கப்பட்டுள்ள ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிக்கும்.
ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW-அமெரிக்கா) சர்வதேச அமைப்பிலிருந்து ஊதியம் பெற்றுவரும் அமைப்பாளரான ஜென்சனுக்கு எதிரான தடைகள், லெஹ்மனின் பிரச்சாரத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் கிடைத்த ஒரு வெற்றியாகும்.
கடந்த மாதம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மஹர சிறைச்சாலையில் நிராயுதபாணி கைதிகளுக்கு எதிராக இந்த வன்முறை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
ஒரு தொழில்துறை கொலை சம்பவமான கட்டுவானை தொழிற்பேட்டையில் ஏற்பட்ட இந்த பயங்கர தீ விபத்து, மனித உயிர்களை இலாப வெறிக்கு இடையறாது கீழ்ப்படுத்தும் முதலாளித்துவ முறைமையின் நேரடியானதும் தவிர்க்க முடியாததுமான விளைவாகும்.
யாழ்ப்பாணத்திற்கு அருகே மீனவர்களின் போராட்டத்தைத் தொடர்ந்து, அரசியல்வாதிகளும் தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளும் தூண்டிவிட்ட தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தை எதிர்த்ததன் பின்னர், WSWS நிருபர் தினேஷ் ஹேமாலை பொலிசார் கைது செய்வதாக அச்சுறுத்தினர்.
ஊழல் நிறைந்ததும், வீங்கிப் பருத்ததுமான தொழிற்சங்க எந்திரத்தின் தலைமைப் பொறுப்பில் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள முனையும் வேட்பாளர்களுக்கு முற்றிலும் மாறாக, லெஹ்மன் சாமானியத் தொழிலாளர்களின் அதிகாரம், சர்வதேசியவாதம் மற்றும் UAW எந்திரத்தை ஒழித்தல் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வேலைத்திட்டத்தை முன்வைத்தார்.
இலங்கையில் போதைப்பொருள் பெருந்தொற்றானது யுத்தம், வேலையின்மை, நிலங்களும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டமை மற்றும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை திட்டமிட்டு சீரழித்தமை போன்ற முதலாளித்துவ சமூக அமைப்பின் விளைவே அன்றி, கொள்கைத் தோல்விகளின் விளைவு அல்ல.
60,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஸ்பானியப் பிராந்தியமான செயூட்டாவிற்குள் (Ceuta) நுழைய முயன்றபோது நிகழ்ந்த டஜன் கணக்கிலான உயிரிழப்புகள் எதேச்சையானவை அல்ல. ஐரோப்பிய அரசாங்கங்கள் அகதிகளின் உரிமைகளைத் நடைமுறையில் ரத்து செய்துவிட்டு, ட்ரம்ப்பே பெருமைப்படும் அளவிலான வெளிப்புற எல்லைகளைக் கட்டியெழுப்பியுள்ளன. புலம்பெயர்ந்தோர் ஐரோப்பியக் கண்டத்தை வந்தடைவதற்கு அனுமதிப்பதை விட, பெருந்திரளான மக்கள் மரணமடைவதையே ஐரோப்பியத் தலைவர்கள் விரும்புகின்றனர்.
அமெரிக்காவின் ஆயுதக் கையிருப்புகள், குறிப்பாக ஏவுகணைத் தற்காப்பு அமைப்புகளுக்கான வெடிமருந்து கையிருப்புகள் குறைந்து வரும் நிலையில், ஈரானிய இலக்குகள் மீது 13 இரவுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட அமெரிக்க வான்வழித் தாக்குதல்களை இடைநிறுத்துமாறு வெள்ளிக்கிழமை ட்ரம்ப் உத்தரவிட்டார். இருப்பினும், அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் கூட்டாளிகளும் போரைத் திட்டமிட்ட வகையில் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன என்பதை அண்மைய நாட்களின் நிகழ்வுகள் தெளிவாக எடுத்துக்காட்டியுள்ளன.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் 28 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்ட மேலும் இரண்டு கைதிகள் விளக்கமளிக்கப்படாத சூழ்நிலைகளில் உயிரிழந்துள்ளனர்.
ட்ரம்ப்பின் போர்கள், பணவீக்கம் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், அத்துடன் ஜனநாயகக் கட்சியின் போராட மறுக்கும் போக்கு ஆகியவற்றிற்குப் பதிலாக, உழைக்கும் மக்களிடையே இடது நோக்கி ஏற்பட்டுள்ள விரைவான மாற்றத்தை அண்மைக்காலக் கருத்துக்கணிப்புகள் வெளிப்படுத்துகின்றன.
வட இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற மீனவர்கள் காணாமல் போதல், உயிரிழப்பு மற்றும் உயிர்தப்பிய சம்பவங்கள், ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் எதிர்கொள்ளும் மோசமான சமூக நிலைமைகளை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன.
அடக்குமுறை நிறைந்த பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் ஆசாத் ஜம்மு மற்றும் காஷ்மீர் கூட்டு அவாமி (பொது மக்கள்) நடவடிக்கைக் குழுவை அரசாங்கம் தடைசெய்தமையும், அதன் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்தமையுமே தற்போதைய வெகுஜன போராட்டத்தின் உடனடி தூண்டுதலாக அமைந்தது.
அமெரிக்க செனட்டிலுள்ள குடியரசுக் கட்சியினரால் பௌசி மீது நடத்தப்படும் இந்த நாடகத்தனமான விசாரணை, இரு பெருநிறுவனக் கட்சிகளின் கீழ் மருத்துவ ஆராய்ச்சிக்கும், பொதுச் சுகாதாரத்திற்கும் எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள தாக்குதல்களின் அடுத்தகட்டத் தீவிரமடைதலைக் காட்டுகிறது.
நாடாளுமன்றக் கட்டிடங்களை நோக்கி பேரணியாகச் செல்ல அரசாங்கம் விதித்த தடையை மீறி, பத்தாயிரக்கணக்கானோர் இந்த வாரம் தெருக்களில் இறங்கியபோது, இந்தப் போராட்ட இயக்கம் மேலும் முக்கியத்துவம் பெற்றது. தனது வன்முறை மற்றும் சர்வாதிகாரப் போக்கிற்கு உண்மையாகவே, மோடி ஆட்சி கொடூரமான பொலிஸ் அடக்குமுறையால் பதிலளித்தது.
உள்துறை அமைச்சர் லோரண்ட் நுனெஸ் தெரிவித்தபடி, பிரான்ஸ் தனது வரலாற்றிலேயே "சாத்தியமான வகையில்" மிகப்பெரிய அமைதிக்கால பொதுமக்கள் வெளியேற்றத்தைச் சந்தித்துள்ளது.
தொழிலாளர்கள் இப்பிரச்சினைக்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதிற்கு தேவையான வளங்களுக்காகத் போராட வேண்டும். ஆனால், இத்தகைய பேரிடர்களை உருவாக்கும் சமூக அமைப்பு முறையை எதிர்த்துப் போராடாமல் அத்தகைய நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வது என்பது, ஒரு எரிமலையின் சரிவில் நின்று கொண்டு தீயை அணைக்க முயல்வதைப் போன்றதாகும்.
ஈரான் மீதான போரானது, இழைக்கப்பட்ட ஒரு குற்றமாக அல்லாமல், தோல்வியடைந்த ஒரு கொள்கையாகவே அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
தற்போது ஐந்தாவது மாதத்தை எட்டியுள்ள இந்தப் போரின் தர்க்கம், ட்ரம்ப் நிர்வாகத்தை போரை தீவிரப்படுத்தும் திசையை நோக்கி உந்துகிறது.
மிகவும் மேம்பட்ட அமெரிக்க அமைப்புகளுக்கு ஈடான இரு சீனத் திறந்த-எடை AI மாதிரிகள் வெளியிடப்பட்டது, வாஷிங்டனிலும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளதோடு, முழு அமெரிக்கப் பங்குச்சந்தையும் சார்ந்துள்ள ஊகக் குமிழியின் பலவீனத்தையும் அம்பலப்படுத்தியுள்ளது.
மிகவும் பலவீனமான சூழ்நிலைச் சான்றுகளின் அடிப்படையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 12 பேரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்யக் கோரி தொழிலாளர்களும் இளைஞர்களும் குரலெழுப்ப வேண்டும் என சோ.ச.க. மற்றும் IYSSEயும் அழைப்பு விடுக்கின்றன.
2022 வெகுஜன எழுச்சியின் போது தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களின் அபிலாஷைகள் ஏன் நிறைவேறவில்லை என்பது இந்தப் பிரச்சாரத்தின் போதான கலந்துரையாடல்களின் மையக் கேள்வியாக இருந்தது.
தொடர்ந்து ஒன்பது இரவுகளாக ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்கப் படைகள், இராணுவத் தளங்களை மட்டுமே இலக்காகக் கொண்டிருந்த தாக்குதல்களை, பாலங்கள், இரயில்பாதைகள், துறைமுகங்கள், மின்சார விநியோக வலையமைப்பு ஆகியவற்றின் மீதும் விரிவுபடுத்தியுள்ள அதேவேளை, ஏவுகணைத் தாக்குதல்களின் மூலம் கடற்படை முற்றுகையையும் அமுல்படுத்தி வருகின்றன.
வில் லேமேனுக்கு எதிரான இந்த வன்முறை தூண்டுதலைக் கண்டிக்குமாறும், UAW தொழிற்சங்கம் இதற்குத் தெளிவான முறையில் பகிரங்க மறுப்பு தெரிவிக்கக் கோருமாறும், சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC) தொழிலாளர்களுக்கும் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கும் அனைத்துப் பாதுகாவலர்களுக்கும் அழைப்பு விடுக்கிறது.
இந்த ஆபத்தான போர்த் தீவிரப்பாடானது, ஈரானிய ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்கப் போரின் தோல்விக்குக் காட்டப்படும் ஒரு விரக்தியான பதிலாக இருக்கும்
டிட்வா புயல் நாட்டைப் பேரழிவுக்கு உள்ளாக்கி ஏழு மாதங்களின் பின்னர், வீட்டு வசதி மற்றும் ஏனைய அடிப்படைத் தேவைகளுக்கான ஆதரவின்மை குறித்து எஸ்க்டேல் தோட்டத் தொழிலாளர்கள் WSWS நிருபர்களுன் பேசினர்.
வெறித்தனமானதாகவும், சில சமயங்களில் சற்றும் தொடர்பற்றதாகவும் இருந்த ட்ரம்பின் உரை, பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஒரு நிர்வாகம் மற்றும் ஆளும் வர்க்கத்தின் வெளிப்பாடாக இருந்தது.
இந்த விரிவுரையில், ஜே.வி.பி./தே.ம.ச. அரசின் IMF சிக்கன வெட்டுக்கள், சர்வாதிகார நடவடிக்கைகள் மற்றும் விரிவடைந்து வரும் உலகப் போருக்கும் எதிராகப் போராட்டங்களில் ஈடுபடும் உழைக்கும் மக்கள், இலங்கையின் வெகுஜன எழுச்சியிலிருந்து பெறவேண்டிய படிப்பினைகள் குறித்து கலந்துரையாடப்படும்.
அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈரானைப் பணிய வைக்க வெளிநாட்டில் போரை நடத்துகிறது. அதேவேளை, உள்நாட்டில் அந்தப் போருக்கான விலையைச் செலுத்த வேண்டிய மற்றும் தனது எதிர்ப்பை உடைக்க வேண்டிய வர்க்கத்திற்கு எதிராகவும் அது போரை நடத்துகிறது.
இந்தப் பயணத்தின் நோக்கம், இராணுவத்தின் குற்றங்களை பல தசாப்தங்களாக மூடிமறைத்துவரும் அரசுக்கு எதிராக வெகுஜனங்களின் அதிகரித்து வரும் ஆத்திரத்தைத் தணிப்பதே அன்றி, பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு நீதி வழங்குவதல்ல.
ஈரான் ஒரு சுதந்திர நாடாகச் செயல்படுவதை அழிப்பதையும், ஹார்முஸ் நீரிணையைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதையும் இலக்காகக் கொண்ட ஓர் ஆக்கிரமிப்புப் போரின் புதிய கட்டமே இப்போது அரங்கேறி வருகிறது.
தொழிலாளர்கள் தமது கிராமப்புற சகோதரர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணிதிரண்டு, இந்தக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்குத் தேவையான இன்றியமையாத நிலைமைகளை உருவாக்க வேண்டும்.
பெருவணிகம் மற்றும் நிதி மூலதனத்திற்கு எதிராக, கிராமப்புற ஏழைகளுடன் ஒன்றிணைந்து, தொழிலாளர் வர்க்கத்தின் தலைமையின் கீழ் விவசாயிகள் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலமே அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த சில நாட்களாக ஈரானின் அடிப்படை உள்கட்டமைப்பை அழித்தொழிப்பதாகவும், அதன் மக்கள் மீது மரணத்தையும் பேரழிவையும் ஏற்படுத்துவதாகவும் ஹிட்லரிய மிரட்டல்களை மீண்டும் மீண்டும் விடுத்ததைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரை மீண்டும் ஒரு புதிய கட்டத்தில் தொடங்கியுள்ளார்.
இலங்கையின் சிறைச்சாலைகள் போதிய வளங்களின்றி அளவுக்கு மீறி கைதிகளால் நிரம்பியுள்ளதுடன், பதற்றங்கள் எளிதில் வன்முறையான மோதல்களாக வெடிக்கக்கூடிய நடைமுறையில் ஒரு நரகத்தை ஒத்தவையாக உள்ளன.
துருக்கியில் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக எர்டோகன் அரசாங்கம் போர்ப் பிரகடனம் செய்துள்ள சூழ்நிலைகளுக்கு மத்தியில், அங்காராவில் நேட்டோவின் போர் உச்சிமாநாடு தொடங்குகிறது. .
தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட உலகப் போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பும் போராட்டத்தில் இளைஞர்களும் மாணவர்களும் வகிக்க வேண்டிய பாத்திரத்தை இக்கூட்டத்தின் பேச்சாளர்கள் விளக்குவார்கள்.
அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தின் 250வது ஆண்டு விழாவிற்கு முந்தைய நாள் ட்ரம்ப் ஆற்றிய உரை, முதலாளித்துவ தன்னலக் குழுவின் ஆட்சியைப் பீடித்திருக்கும் பீதியையும், இடைக்காலத் தேர்தல்களுக்கு முன்னதாக இருக்கும் அரசியல் சதியையும் ஒருசேர வெளிப்படுத்தியுள்ளது.
போட்டியிடும் அதிகார மையங்களால் ஒழுங்குபடுத்தப்படும் அமைதியான முதலாளித்துவம் பற்றிய போலி-இடது அமைப்புகளினதும் கல்வியாளர்களினதும் கற்பனைகளுக்கு மாறாக, சமூக சமத்துவம், ஜனநாயகம் மற்றும் உலக அமைதியுடன் முதலாளித்துவ அமைப்பு பொருந்தாது என்பதை சர்வதேச அளவில் தொழிலாளர்களும் இளைஞர்களும் மேலும் மேலும் உணர்ந்து வருகின்றனர்.
அமெரிக்கப் புரட்சியின் ஸ்தாபக ஆவணத்தின் 250வது ஆண்டு நிறைவு, அதன் மூல ஜனநாயகக் கொள்கைகளின் அதிர்ச்சியூட்டும் நெருக்கடி மற்றும் சிதைவுக்கு மத்தியில் குறிக்கப்படுகிறது.
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தின் சில அரசியல்வாதிகளும் ஊடகங்களின் சில பிரிவுகளும் கூறியதற்கு மாறாக, சங்கீத்சன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நீக்கப்படவில்லை. குற்றவியல் சட்டத்தின் 120வது பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், இரண்டு ஆண்டுகள் வரை அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு எதிரான தற்காப்புப் போராட்டத்திலிருந்து, அதன் மூலக் காரணமான இலாபத்திற்காக இயங்கும் தனியார் உற்பத்தி முறைக்கு எதிரான, தாக்குதல்மிக்க போராட்டத்திற்கு மாறுவதற்குத் தேவையான போராட்டத்தின் பிரம்மாண்டமான, புரட்சிகரமான மற்றும் சோசலிசத் தன்மையை இந்த நிகழ்வு தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
வீட்டு வசதிகளின் சீர்குலைந்த நிலை, சுகாதார அமைப்பின் சரிவு, எந்தவொரு அர்த்தமுள்ள அவசரகால நிவாரண நடவடிக்கையையும் ஒழுங்கமைக்க அரசின் இயலாமை ஆகியவை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் வெனிசுவேலா நீண்டகாலமாக ஒடுக்கப்பட்டதன் விளைவாகும்.
ரஷ்யாவின் தொலைதூரப் பகுதிகளுக்குள் ஊடுருவி நடத்தப்படும் தாக்குதல்கள் மாஸ்கோவை பதிலடி கொடுக்க தூண்டும் என்றும், அதன்பின் ரஷ்யாவின் எந்தவொரு எதிர்த் தாக்குதலையும் இன்னும் பரந்த நேட்டோ தலையீட்டை நியாயப்படுத்தப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐரோப்பிய வல்லரசுகள் கணக்குப்போடுகின்றன. இதுதான் ஆத்திரமூட்டலின் தர்க்கம் ஆகும். இந்தத் தர்க்கமே அணுஆயுதம் ஏந்திய வல்லரசுகளுக்கு இடையே ஒரு நேரடிப் போருக்கு வழிவகுக்கிறது.
இலங்கை சோ.ச.க. மற்றும் IYSSE அமைப்பும், சர்வதேச சோசலிசத்தின் ட்ரொட்ஸ்கிசக் கோட்பாடுகளுக்காக தோழர் கீதானந்த ஜயசேகர முன்னெடுத்த கொள்கை ரீதியான போராட்டத்திற்கு புகழஞ்சலி செலுத்துவதுடன் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றன.
அமெரிக்கப் புரட்சியின் 250-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் உலக சோசலிச வலைத்தளம் (WSWS) நடத்திய இணையவழி கருத்தரங்கு, பெருகிவரும் சர்வாதிகாரப் போக்கில், புரட்சியின் புரட்சிகர மரபைப் பாதுகாப்பதற்காக முன்னணி வரலாற்றாசிரியர்களை ஒன்றிணைத்தது.
இலங்கையில் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பு, ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதற்கான ட்ரொட்ஸ்கிச வேலைத்திட்டத்தைப் பற்றி கலந்துரையாடுவதற்காக, ஜூலை 8 புதன்கிழமை மாலை 7.00 மணிக்கு பகிரங்க நிகழ்நிலை கூட்டம் ஒன்றை நடத்துகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) இணையக் கருத்தரங்கின் கருத்துக்கள், அமெரிக்கப் புரட்சியை ஒரு உலக வரலாற்று முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியாக நிலைநிறுத்தி, உள்நாட்டுப் போர் வழியாக அதன் வளர்ச்சியைப் பின்தொடர்ந்து, அதன் ஜனநாயக மரபின் மீதான தற்காலத் தாக்குதலை ஆய்வு செய்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிற ஏகாதிபத்திய போர்க் குற்றவாளிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கத் தயாராகி வரும் நிலையில், எர்டோகன் அரசாங்கம் போர், இனப்படுகொலை மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு எதிரான அனைத்து எதிர்ப்புகளையும் ஒடுக்க முற்படுகிறது.
டோரி அரசாங்கத்திற்கு எதிராக வெடித்த முக்கிய வேலைநிறுத்தங்களை ஒடுக்கி, காட்டிக்கொடுத்த கோர்பினவாதிகளும், தொழிற்சங்க அதிகாரத்துவமும், ஸ்டார்மரின் தொழிற் கட்சிக்கு எதிராக ஒரு தொழிலாள வர்க்க, சோசலிச எதிர்ப்பை கட்டியுழுப்புவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் முடக்கியுள்ளனர்.
திங்களன்று, பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் லித்துவேனியாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) 45-வது கவசப் படைப்பிரிவின் முதலாவது பெரிய கூட்டுப் பயிற்சியில் பங்கேற்க அங்கு விஜயம் செய்தார்.
தொழிலாள வர்க்கத்துடன் ஒன்றிணைந்து முதலாளித்துவத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலம் மட்டுமே விவசாய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்.
இரண்டாம் உலகப் போரின் போது போலந்து-எதிர்ப்பு நாஜி ஒத்துழைப்புவாத சக்திகளை உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி ஊக்குவித்து வருபது தொடர்பான இராஜதந்திர நெருக்கடியானது, நேட்டோ ஏகாதிபத்திய சக்திகள் உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான தங்களின் பினாமி போரை மூடிமறைத்திருந்த அரசியல் பொய்களைத் தவிடுபொடியாக்குகிறது.
தொழிலாளர்கள் அவரது பிரச்சாரத்தை ஆதரித்தனர், ஏனெனில் அது UAW எந்திரத்துடனான அவர்களது சொந்த அனுபவங்களை வெளிப்படுத்தியது: காட்டிக்கொடுப்பு ஒப்பந்தங்கள், எதிர்ப்பை ஒடுக்குதல், பெருநிறுவன இலாபத்தைப் பாதுகாத்தல் மற்றும் தொழிலாளர்களின் போராட்டங்களை ஜனநாயகக் கட்சிக்கும் அரசுக்கும் கீழ்ப்படுத்துதல் ஆகியவையே இந்த அனுபவங்களாகும்.
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரானியப் பேச்சுவார்த்தையாளரை அனுப்ப ஈரான் மறுத்ததை அடுத்து, சுவிட்சர்லாந்தில் தொடங்கவிருந்த முதற்கட்ட அணுசக்தி பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பே ரத்து செய்யப்பட்டன.
ஐரோப்பிய அதிகாரிகள் ரஷ்யாவுடனான போரைப் பற்றி "இந்த தசாப்தத்தின் இறுதிக்குள்" அல்லது "சில ஆண்டுகளுக்குள்" என்று குறிப்பிடுகிறார்கள்; இது மனிதகுலத்திற்கேற்படும் ஒரு பேரழிவு அல்ல, மாறாக நாம் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டிய வாழ்வின் ஒரு துரதிர்ஷ்டவசமான யதார்த்தம் என்பதைப் போல அவர்கள் பேசுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், மிகச் சிறிய சம்பவம்கூட மிக விரைவாகப் போர் தீவிரமடைவதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக மாறிவிடக்கூடும்.
பிரான்சின் எவியான் (Évian) நகரில் நடைபெற்ற G7 உச்சிமாநாடு, போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் வீழ்ச்சியிலும், தற்போது ஒரு மூன்றாம் உலகப் போரை நோக்கிய சரிவிலும் மேலும் ஒரு படியைக் குறிக்கிறது.
அமெரிக்கா 3,000-க்கும் மேற்பட்ட ஈரானிய மக்களைக் கொன்ற போதிலும், உலகளாவிய உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடியைத் தூண்டிய போதிலும், தான் எதற்காகப் போருக்குச் சென்றதோ அந்த நோக்கங்களை அடைவதில் அது படுதோல்வியடைந்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், ஒன்று மட்டும் ஏற்கனவே தெளிவாகத் தெரிகிறது: டிரம்ப் நிர்வாகம் எந்தவொரு நோக்கத்திற்காகப் போருக்குச் சென்றதோ, அதில் எதையுமே அது சாதிக்கவில்லை.
ஐக்கிய வாகனத் துறை தொழிலாளர் சங்கத்தின் (UAW) அரசியலமைப்பு மாநாட்டிற்கு முன்னதாக, அமெரிக்க முதலாளித்துவம் தனது முதல் ட்ரில்லியனரை உருவாக்கியுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று, எலோன் மஸ்க் உலகின் முதல் டிரில்லியனர் ஆனார். முதலீட்டு வங்கிகளின் கூட்டமைப்பு ஒன்று, வியாழக்கிழமை இரவு நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) பங்கின் விலையை 135 டாலராக நிர்ணயித்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகம் தொடங்கியபோது 150 டாலராக எகிறிய பங்கின் விலை, அன்றைய வர்த்தகத்தின் இடையே 30 சதவீதம் வரை உயர்ந்து, இறுதியில் சுமார் 19 சதவீத வளர்ச்சியுடன் 161 டாலராக நிலைபெற்றது. இது நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பை தோராயமாக 2.1 டிரில்லியனாக உயர்த்தியது.
சி.என்.என் நிறுவனத்தின் கணக்கீட்டின்படி, ஈரானுடனான ஒரு ஒப்பந்தம் மிக விரைவில் ஏற்படும் என்று, கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்த பாசிச ஜனாதிபதி குறைந்தது 38 முறையாவது கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று அமெரிக்கா தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக ஈரான் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளது. கிழக்கு நேரப்படி மாலை 5:15 மணிக்கு ஈரானில் உள்ள "பல இலக்குகளை" தாக்கத் தொடங்கியதாக அமெரிக்க இராணுவம் அறிவித்துள்ளது. இந்த இலக்குகளில் ஆயுதக் கிடங்குகள், கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் ஆயுத சேமிப்புக் கிடங்குகள் ஆகியவை அடங்கும் என்று இரண்டு அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக சிபிஎஸ் நியூஸ் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இலங்கையின் மோசமடைந்து வரும் சென்மதி நிலுவை நெருக்கடி, விண்ணை முட்டும் எண்ணெய் இறக்குமதிச் செலவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளி வருகின்றன.
தொழிலாளர்கள் தன்னிச்சையாகத் தங்களது போராட்டத்தைத் தொடங்கிய அதேவேளை, இலங்கை வர்த்தக, கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம் (CMU) நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஐரோப்பிய நாடாளுமன்றமும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், அகதிகள் தஞ்சம் கோரும் அடிப்படை உரிமையை ஒழித்து, பாசிசக் கட்சிகளுடனான ஒத்துழைப்பை இயல்பாக்கும் ஒரு புதிய திருப்பி அனுப்பும் ஒழுங்குமுறைக்கு ஒப்புக்கொண்டுள்ளன.
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும், கருத்துச் சுதந்திரத்தின் மீதான அப்பட்டமான தாக்குதலான சங்கீத்சன் கணேஸ்குமாரின் கைதை கண்டிப்பதுடன், அவரை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும் என கோருகின்றன.
இந்தப் போர் இரண்டு முக்கிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது: அவை, ஆழமடைந்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையின் உலகளாவிய நெருக்கடி, மற்றும் உலக அளவில், குறிப்பாக அமெரிக்காவில், மிகப்பெரிய அளவில் தீவிரமடைந்து வரும் வர்க்கப் போராட்டம்.
தீவிரமடைந்து வரும் மோதலின் விளைவுகள் குறித்து கவலைகொள்ளாத பேராசிரியர் கணேசலிங்கம், ஏகாதிபத்தியப் போரையோ, அது சாதாரண மக்களுக்கு ஏற்படுத்தும் பேரழிவு விளைவுகளையோ எதிர்க்கவில்லை. மாறாக, தமிழீழத் திட்டத்திற்கான வாய்ப்புகளைக் கண்டறிவதிலேயே அவர் அக்கறை காட்டுகிறார்.
ரஷ்யப் பகுதிக்குள் உக்ரேன் சமீபத்தில் நடத்திய ஆழ ஊடுருவல் தாக்குதல்கள், பால்டிக் கடலில் நேட்டோவின் இராணுவப் பயிற்சிகள், மற்றும் ஜேர்மன்-உக்ரேன் ஆயுத ஒத்துழைப்பு ஆகிய அனைத்தும் காட்டுவது என்னவென்றால், நேட்டோ நடைமுறையில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்திக் கொண்டிருப்பதுடன், ஓர் அணுஆயுதப் பேரழிவு ஆபத்தை எற்படுத்தி வருகிறது.
வெள்ளிக்கிழமை தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பேர் கொல்லப்பட்டனர்; மேலும், சிடோன் (Sidon) மாவட்டத்தில் உள்ள மேலும் ஒன்பது நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்தும் மக்களைக் கட்டாயமாக வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்டது.
கியூபா, அமெரிக்கா மற்றும் அமெரிக்கக் கண்டம் முழுவதிலும் உள்ள தொழிலாளர்கள், ட்ரம்ப்பின் முற்றுகை மற்றும் போர்த் திட்டங்களுக்கு எதிராக அவசரமாக அணிதிரள வேண்டும். ஆனால், ஏகாதிபத்தியத்திற்கு எதிரான பயனுள்ள எதிர்ப்பு என்பது காஸ்ட்ரோயிசம் மற்றும் கியூபப் புரட்சி பற்றிய வரலாற்று ரீதியான மதிப்பீடு அவசியமாகிறது.
அடுத்த 10 நாட்களுக்குள், எலோன் மஸ்க் தனது கட்டுப்பாட்டில் உள்ள விண்வெளி ஏவுதல் ஏகபோக நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), வரலாற்றிலேயே மிகப்பெரிய ஆரம்ப பொதுப் பங்கு வெளியீட்டை (IPO) மேற்கொள்ளும்போது, உலகின் முதல் டிரில்லியனர் (இலட்சம் கோடி அதிபர்) ஆக உள்ளார்.
"மேற்கு வங்காளத்தில் அமைந்துள்ள புதிய பாஜக அரசு, தொழிலாளர்களைப் பிரிப்பதற்கும், தற்போது ஈரான் போரினால் மேலும் மோசமடைந்துள்ள பொருளாதார நெருக்கடியின் சுமையைத் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்துவதற்கும் மதவாதம், ஒடுக்குமுறை மற்றும் ஏழைகளுக்கு எதிரான ஆக்கிரமிப்பு வெளியேற்றும் நடவடிக்கைகளைப் பயன்படுத்தி வருகிறது."
அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது தொடுத்துள்ள சட்டவிரோதப் போரினால் ஏற்பட்டு வரும் பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், இந்தியர்கள் தங்களின் எரிசக்தி மற்றும் உரப் பயன்பாட்டைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்திய சில நாட்களிலேயே, இந்தியாவின் தீவிர வலதுசாரி பாஜக ஆட்சி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ளது.
சுகாதார ஊழியர்கள் குழுவொன்றின் போராட்டத்திற்கு எதிரான ஜே.வி.பி.யின் குண்டர் மிரட்டல்களை குறைத்து மதிப்பிட வேண்டாம் என நாம் தொழிலாள வர்க்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த அத்துமீறலானது, தொழிலாளர் போராட்டங்களை சட்டத்தினாலும் பொலிஸ்-இராணுவ பாய்ச்சலினால் மாத்திரமன்றி, குண்டர் பலத்தைப் பயன்படுத்தியும் ஒடுக்கப் போவதாக விடுக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாகும்.
இலத்தீன் அமெரிக்கக் கடற்பரப்பில் ட்ரம்ப் நிர்வாகம் நடத்திய சட்டத்திற்குப் புறம்பான கொலைவெறித் தாக்குதலில் 200-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இது, பாரிய படுகொலையை ஏகாதிபத்தியக் கொள்கையாக இயல்பாக்குவதில் ஜனநாயகக் கட்சி மற்றும் அனைத்து பிராந்திய அரசாங்கங்களின் உடந்தையை அம்பலப்படுத்தியுள்ளது.
சேவைகள் மற்றும் ஊதியங்களைப் பெறுவதற்கான தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அரச அச்சக ஊழியர்கள் நடத்தும் இந்தப் போராட்டம், அரசின் கொடூரமான சிக்கனத் திட்டத்திற்கு எதிராகத் தொழிலாள வர்க்கத்தினர் மத்தியில் ஆழமாக வேரூன்றியிருக்கும் எதிர்ப்பைப் பிரதிபலிக்கிறது.
உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகளையும் மோசமடைந்துவரும் சமூக நிலைமைகளையும் எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் போருக்கு எதிரான எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
இலாப வேட்கை கொண்ட பெருநிறுவனங்களின் பேராசைக்கு, உலகெங்கிலும் உள்ள சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஏனைய தொழிலாளர்களின் உயிரும் ஆரோக்கியமும் அடிபணியச் செய்யப்படுவதால் அவர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகளுக்கு இந்த சுரங்க வெடிப்பு மற்றுமொரு கண்கூடான உதாரணமாகும்.
கடந்த வெள்ளிக்கிழமை காலையன்று, இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் மூன்றாவது முறையாக, ஐக்கிய வாகன தொழிலாளர் சங்க (UAW) எந்திரத்தால் முன்வைக்கப்பட்ட, நிறுவனத்திற்கு ஆதரவான தற்காலிக ஒப்பந்தத்தை, அந்த வாகன உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் ஆலையின் 1,300 தொழிலாளர்கள் வாக்கெடுப்பு மூலம் தோற்கடித்துள்ளனர்.
"ஆ. லிங்கன்" என்று கையொப்பமிடப்பட்ட, ஆனால் அனுப்புநர் முகவரியோ அல்லது தலையங்கமோ இல்லாத பின்வரும் கடிதம், இன்று காலை எனது மின்னஞ்சலுக்கு வந்தது. நான் அக்கடிதத்தின் ஒரு நகலை எடுத்த அடுத்த கணமே அது எனது மின்னஞ்சலில் இருந்து மறைந்துவிட்டது. அதன் விசித்திரமான மற்றும் விளக்கப்படாத தோற்றம் இருந்தபோதிலும், அந்தக் கையொப்பமே இந்தக் கடிதத்தின் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இந்தக் காரணத்திற்காகவே, நாங்கள் இதை உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) வாசகர்களுக்குக் கிடைக்கச் செய்கிறோம்.
பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி, சோ.ச.க.யை வெளிநாட்டு நிதியைச் சார்ந்த அரச சார்பற்ற அமைப்பு (NGO) எனச் சித்தரிக்க முயன்றதுடன், தாக்குதல் தொடர்பான முறைப்பாடு வெளிநாட்டு நிதியைப் பெறும் நோக்கத்தால் உந்தப்பட்டதாகவும் கூற முயன்றார்.
அமெரிக்கா மற்றும் சர்வதேச ஊடகங்கள் டரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரானுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நிபந்தனைகளில் கவனம் செலுத்தி வரும் வேளையில், இஸ்ரேல் மத்திய கிழக்கு முழுவதும் தனது அட்டூழியத்தை பெருமளவில் விரிவுபடுத்தி வருகிறது. மேலும் காஸாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்கவும், லெபனான் மீதான தனது குண்டுவீச்சை தீவிரப்படுத்தவும் அது நகர்ந்து கொண்டிருக்கிறது.
தொழிலாளர் சுரண்டல் மற்றும் இனப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட ஓர் அமைப்புக்கு அச்சுறுத்தலாக விளங்கும் தமிழ் மற்றும் சிங்களத் தொழிலாளர்களின் அரசியல் ஒற்றுமையை முதலாளித்துவ அரசால் சகித்துக்கொள்ள முடியாது.
இத்தாலிய பிரதம மந்திரி மெலோனியைத் தோற்கடிப்பதற்கு, தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகளிடமிருந்து அரசியல் சுயாதீனத்திற்காகப் போராடும் தொழிலாளர்களின் முயற்சியை, சாமானிய தொழிலாளர் குழுக்களை அமைப்பதன் மூலம் மேலும் ஆழப்படுத்தப்பட வேண்டும்.
இந்த எழுச்சி, தொழிலாள வர்க்கத்தின் மகத்தான புரட்சிகர ஆற்றலை அடிக்கோடிட்டுக் காட்டும் அதேநேரம், புரட்சிகரத் தலைமைத்துவத்தின் தீர்க்கமான முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியது.
துருக்கியில் கட்டவிழ்ந்து வருவது முற்றிலும் ஒரு தேசிய நிகழ்வு அல்ல. மாறாக, ஆழமடைந்து வரும் முதலாளித்துவ அமைப்பு முறையின் நெருக்கடியில் வேரூன்றிய ஒரு சர்வதேச செயல்முறையின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாகும்.
ஸ்டார்மர் அரசாங்கத்தின் நெருக்கடி என்பது நீண்டகால மற்றும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்ட இரு செயல்முறைகளின் விளைவாக ஏற்பட்டதாகும்: உலக முதலாளித்துவத்தின் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சர்வதேச வீழ்ச்சி, மற்றும் தொழிற் கட்சியின் தொழிலாள வர்க்க ஆதரவுத் தளத்தில் ஏற்பட்டுள்ள முழுமையான வீழ்ச்சி ஆகியவையே அவையாகும்.
ராவுல் காஸ்ட்ரோவுக்கு எதிரான குற்றச்சாட்டு என்பது, பத்து மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட ஒரு வறிய தேசத்திற்கு எதிராகத் திட்டமிடப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்கான ஒரு அருவருப்பான நயவஞ்சகச் செயலும், ஏகாதிபத்திய பிரச்சாரமுமாகும்.
ஜனாதிபதி திசாநாயகவால் அவசரகால நிலை கட்டளைகள் மூலம் இராணுவத்தையும் பொலிசையும் விசேட அதிகாரங்களுடன் நிலைநிறுத்தி, கூட்டங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதித்து, சாதாரண நீதித்துறை நடைமுறைகள் இன்றி தனிநபர்களைக் கைது செய்ய அனுமதி கொடுத்து, தணிக்கையை அமுல்படுத்தி மற்றும் வேலைநிறுத்தங்களைத் தடை செய்வதன் ஊடாக ஆட்சிசெய்ய முடியும்.
"தொழிலாளர் அரசாங்கத்திற்கு" தலைமை தாங்குவதாக ஜனாதிபதி திசாநாயக்க கூறும் கூற்றுகள் அபத்தமானவை. ஜே.வி.பி./தே.ம.ச. ஆட்சியானது தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது அதிக வரிகள், அதிக விலைவாசி அதிகரிப்பு மற்றும் முழுமையான தனியார்மயமாக்கல் உட்பட கடுமையான தாக்குதல்களை நடத்தும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தை வழிநடத்துகிறது.
ட்ரம்பின் குண்டர்தனமான அச்சுறுத்தல்கள், உலக ஏகாதிபத்தியத்தின் உண்மையான குரலாகும். ஏற்கனவே நன்கு முன்னேறியுள்ள பெரும் வல்லரசுகளுக்கு இடையிலான உலக மறுபங்கீட்டின் ஒரு பகுதியாக, ஈரானின் மீதும் ஒட்டுமொத்த பிராந்தியத்தின் மீதும் காலனித்துவச் சங்கிலிகளைப் பூட்டுவதற்கு உலக ஏகாதிபத்தியம் உறுதியாக உள்ளது.
2022 எழுச்சியில் பங்கேற்ற தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளை அச்சுறுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தத் தண்டனைகளையும் மரண தண்டனைகளையும் சோசலிச சமத்துவக் கட்சி திட்டவட்டமாக எதிர்க்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெய்ஜிங்கிலிருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஈரானுக்கு எதிரான ஒரு புதிய தாக்குதலை நடத்துவதற்கான தீவிர தயாரிப்புகளில் வெள்ளை மாளிகை ஈடுபட்டு வருகிறது.
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குயழுவினாலும் ஏற்பாடு செய்யப்பட்ட 2026 மே தின இணையவழிப் பேரணியில் ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவருக்கான வேட்பாளரும், தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியின் (IWA-RFC) உறுப்பினருமான வில் லெஹ்மன் இந்த உரையை ஆற்றினார்.
மே 3, ஞாயிற்றுக்கிழமையன்று, அடிபணியாத பிரான்ஸ் (LFI) கட்சியின் ஜோன்-லூக் மெலோன்சோன் TF1 தொலைக்காட்சியில் தனது வேட்புமனுவை அறிவித்தார். இது சிக்கன நடவடிக்கைகளுக்கும் ஈரானுக்கு எதிரான போருக்கும் எதிராகத் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்காக அல்ல, மாறாக அந்த அணிதிரட்டலை பிரெஞ்சு முதலாளித்துவ நிறுவனங்களை நோக்கிய ஒரு தேசியவாத நோக்குநிலைக்குள் நசுக்குவதற்காகவே ஆகும்.
உலக சோசலிச வலைத் தளமும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்திருந்த 2026 மே தின இணையவழிப் பேரணியில், சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலம் (Socialist Eşitlik Partisi – Dördüncü Enternasyonal) அமைப்பின் தலைவர் உலாஸ் செவின்ச் இந்த உரையை ஆற்றினார்.
பிரெஞ்சு முடியாட்சி அல்லது ரஷ்ய ஜார் மன்னர், புரட்சியின் மூலம் தூக்கியெறியப்படுவதுக்கு முந்தைய காலகட்டத்தில் காட்டிய அதே அலட்சியப் போக்கையே, அமெரிக்க ஜனாதிபதியும் வெளிப்படுத்துவது போல் தோன்றுகிறது.
மாத்தறைக் கூட்டம் மே 24, ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணிக்கு மாத்தறை அஞ்சல் அலுவலக கேட்போர் கூடத்திலும், யாழ்ப்பாணக் கூட்டம் ஜூன் 9, செவ்வாய்க்கிழமை அன்று பிற்பகல் 4:00 மணிக்கு யாழ்ப்பாணம் கச்சேரியடியில் உள்ள வை.எம்.சி.ஏ. மண்டபத்திலும் நடைபெறும்.
கடந்த செவ்வாயன்று சீனாவுக்குப் புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஜனாதிபதி ட்ரம்ப், ஈரானுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா ஒரு "நல்ல ஒப்பந்தத்தை" மட்டுமே ஏற்கும் என்றும், இல்லையெனில் அந்த நாடு "அழிக்கப்படும்" என்றும் கூறினார். மேலும், "எப்படியாவது, நாமே வெற்றி பெறுவோம்" என்றும் அவர் குறிப்பிட்டார்.
மே 4, திங்கட்கிழமை அன்று அறிவிக்கப்பட்ட ஐந்து இந்திய மாநில மற்றும் பிராந்திய சட்டமன்றத் தேர்தல்களின் முடிவுகள், முதலாளித்துவ ஆட்சியின் நெருக்கடி ஆழமடைந்து வருவதையும், ஒரு புரட்சிகர சோசலிச வேலைத்திட்டம் மற்றும் மூலோபாயத்துடன் தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதன் அவசரத்தையும் சுட்டிக்காட்டுகின்றன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர் நோக்கங்களை அடையத் தவறிய, ஈரானுக்கு எதிரான ஒரு தொடர்ச்சியான போருக்கு மத்தியிலும், கடும் நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு இடையேயும் ட்ரம்ப் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்கிறார்.
புது தில்லிக்கு அருகில் சமீபத்தில் நடந்த தொழிலாளர் போராட்டங்களில் கலந்துகொண்ட ஒரே காரணத்திற்காக, அரசியல் ஆர்வலர்களைக் கைது செய்வதற்காக உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறையினர் மாநிலம் முழுவதும் தேடி வருகின்றனர்.
பிரித்தானியாவில் டோனி பிளேயரின் காலத்திலிருந்தே தொழிற் கட்சி தனது ஆதரவை பெருமளவில் இழந்து வருகிறது. ஆனால், ஒரு இடதுசாரி மாற்றீட்டிற்காக தொழிலாளர்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் மீண்டும் மீண்டும் சீர்குலைக்கப்பட்டதால்தான், தீவிர வலதுசாரி சீர்திருத்த யுகே கட்சி (Reform UK) இவ்வளவு தூரம் தலைதூக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாகவும், போரின் சமீபத்திய தீவிரமயமாக்கலாகவும், அமெரிக்க கடற்படை விமானங்கள் வெள்ளிக்கிழமை ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட இரண்டு எண்ணெய் தாங்கிக் கப்பல்களைத் தாக்கின.
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, பொதுச் சுகாதார நிறுவனங்கள் முற்றிலுமாகச் சிதைக்கப்பட்டுவிட்டதால், இந்த நோய்ப்பரவல் எவ்வளவு தூரம் பரவியுள்ளது என்பதை ஆளும் வர்க்கம் இனி அறியும் நிலையில் இருப்பதுமில்லை, அல்லது அது அறிய விரும்பப்போவதுமில்லை.
சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக விரிவடைந்து வரும் மிகப் பரந்த மோதலின் ஒரு பகுதியாக, மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களில் ஆதிக்கம் செலுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முயற்சிகளின் அங்கமே ஈரான் மீதான இராணுவத் தாக்குதல் என்று சோ.ச.க. பேச்சாளர்கள் விளக்கினர்.
ஈரான் மீதான போரினால் உருவான பொருளாதார அதிர்ச்சிகளைப் பயன்படுத்தி, ஆளும் வர்க்கமானது கடந்த அரை நூற்றாண்டுகாலமாக தொழிலாள வர்க்கத்தின் மீது இரு கட்சிகளின் (ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி) ஆதரவுடன் தொடுத்து வரும் தொடர்ச்சியான தாக்குதலைத் தீவிரப்படுத்துகிறது.
2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்குள் எரிசக்தி செலவுகள் சீரடைந்தாலும் கூட, இந்த ஆண்டில் G7 நாடுகளிலேயே பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் மிகக் கடுமையான சரிவைச் சந்திக்கும் என்றும், அந்நாட்டின் பணவீக்க விகிதம் மிக அதிக அளவிலேயே (கூட்டு உயர்வு) இருக்கும் என்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது
ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் “தேசிய ஒற்றுமை” என்ற போர்வையில் தமிழ் எழுத்தாளர்களைத் தணிக்கை செய்கின்ற அதேநேரம் சிங்களப் பேரினவாத மற்றும் இராணுவவாதப் பிரச்சாரங்கள் சுதந்திரமாகப் புழங்க அனுமதிக்கின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியச் செயலாளர் ஜோசப் கிஷோர், மே 1, வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்ற 2026 சர்வதேச மே தின இணையவழிப் பேரணியில் இந்த உரையை ஆற்றினார்.
35 ஆண்டுகால தடையற்ற ஆக்கிரமிப்புப் போர்களுக்குப் பின்னர், அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொள்ளும் மூலோபாயப் பேரழிவை, அதன் பெருகிவரும் அவநம்பிக்கையான நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
உலக சோசலிச வலைத் தளமும் (WSWS) நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் ஏற்பாடு செய்த, 2026 மே தின இணையவழிப் பேரணியைத் தொடங்கி வைத்து, WSWS சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நார்த் ஆற்றிய உரை.
மே தினப் பேரணியில் உரையாற்றியவர்கள், ஈரானுக்கு எதிரான போரை 35 ஆண்டுகால முதலாளித்துவ நெருக்கடியின் உச்சக்கட்டமாகப் பகுப்பாய்வு செய்ததோடு, உலகளாவிய போராட்டத்தின் புதிய காலகட்டத்தில் நுழையும் சர்வதேசத் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புரட்சிகரமான வேலைத்திட்டத்தையும் முன்வைத்தனர்.
ஈரான் மீதான ட்ரம்பின் முற்றுகையால் அச்சுறுத்தப்படும் பொருளாதாரப் பேரழிவைப் புறக்கணித்துவிட்டு, பிரெஞ்சு மக்களால் ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதை நியாயப்படுத்துவதற்காக, எரிசக்தி நெருக்கடியைப் பயன்படுத்துவதிலேயே மக்ரோன் கவனம் செலுத்தி வருகிறார்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் எங்களது 13-வது வருடாந்தர சர்வதேச மே தின இணையவழிப் பேரணியை அமெரிக்க கிழக்கு நேரப்படி (EDT) மாலை 3:00 மணிக்கும் (இலங்கை நேரப்படி மே 2 ஆம் தேதி அதிகாலை 12:30 மணிக்கும்) நடத்துகின்றன.
ட்ரம்ப்பின் ஆதரவுடன், பில்லியனர்கள் மற்றும் ஜனநாயகக் கட்சியினர் முன்னிலையில் மூன்றாம் சார்ல்ஸ் அமெரிக்க காங்கிரசில் ஆற்றிய உரையானது, 1776-ஆம் ஆண்டின் ஜனநாயகக் கொள்கைகளை நிராகரிப்பதில் முடியாட்சியும், தன்னலக்குழுவும் ஒன்றிணைந்திருப்பதை அம்பலப்படுத்துகிறது.
போரானது இந்தியாவின் திரவ பெட்ரோலிய எரிவாயு விநியோகத்தில் உடனடித் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், போரின் விளைவுகள் பொருளாதாரம் முழுவதும் பரவி, பணவீக்கத்தை, குறிப்பாக உணவு மற்றும் போக்குவரத்துச் செலவுகளை அதிகரிக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளன.
உயர்ந்து வரும் வாடகை, பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் உணவுச் செலவுகளைச் சமாளிக்க, பல்லாயிரக்கணக்கான அமைப்புசாரா தொழிலாளர்கள் கணிசமான ஊதிய உயர்வைக் கோரி வருகின்றனர்.
2025-ஆம் ஆண்டில் உலகளாவிய இராணுவச் செலவினம் இதுவரை இல்லாத சாதனையாக 2.887 டிரில்லியன் டாலர்களை எட்டியுள்ளது. இது தொடர்ந்து 11-வது ஆண்டாக உயர்ந்து வரும் ஒரு போக்காகும் என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று தெரிவித்துள்ளது.
“அரசியலில் வன்முறைக்கு இடமில்லை” என்ற போலித்தனமான பல்லவிக்குள் மறைந்திருக்கும் ஊடகங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தின் பிரதிபலிப்பு, மலைக்க வைக்கும் நயவஞ்சகத் தன்மையைக் கொண்டுள்ளது.
இந்தத் தீர்மானம், UAW தொழிற்சங்க எந்திரத்தால் ஆதரிக்கப்படும் இந்தப் போருக்கு எதிராக, தொழிலாளர்களிடையே பரந்த அளவில் வளர்ந்து வரும் எதிர்ப்பை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்கா, ஈரான் மீதான தனது கடற்படை முற்றுகையை, எந்தவொரு கடற்பரப்பிலும் கப்பல் போக்குவரத்திற்கு எதிரான ஒரு உலகளாவிய நடவடிக்கையாக விரிவுபடுத்தி வருவதாக பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உலகின் மிக முக்கியமான எரிசக்தி உற்பத்தி பிராந்தியங்களில் ஒன்றான மத்திய கிழக்கின் மீது தனது பூகோள மூலோபாய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதில் அமெரிக்க ஏகாதிபத்தியம் கொண்டுள்ள உறுதி, ஏற்கனவே ஆயிரக்கணக்கான ஈரானியர்களின் உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. ஆனால் அமெரிக்காவால் தூண்டப்பட்ட இந்தப் போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை முற்றுகையினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகள் இன்னும் பயங்கரமான உயிரழப்புக்களை ஏற்படுத்தக்கூடும்.
மே ஃபீல்டில் தங்கள் சக வர்க்கத் தொழிலாளர்களுக்கு எதிராக, தோட்ட நிர்வாகத்தால் தூண்டிவிடப்படும் பொலிஸ் துன்புறுத்தல்களை அனைத்து தோட்டத் தொழிலாளர்களும் எதிர்ப்பதோடு அதிகப்படியான வேலைச் சுமைக்கு எதிராகவும் போதுமான ஊதியத்திற்காகவும் அவர்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்.
பலர் ஈரானிய மக்கள் மீது அனுதாபம் தெரிவித்ததோடு, இந்த மோதலின் ஆழமான அரசியல் மற்றும் வரலாற்று வேர்களைப் புரிந்துகொள்ளவும் முயன்றனர்.
ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்காவின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரும் வரை பேச்சுவார்த்தைக்குத் திரும்பப் போவதில்லை என்று ஈரானிய அதிகாரிகள் கூறியதுடன், ட்ரம்ப் தங்கள் நாட்டின் மீது இரண்டாவது திடீர் தாக்குதலுக்குத் தயாராகி வருவதாகவும் எச்சரித்தனர்.
கடந்த திங்கள்கிழமையன்று, பேர்லினில் உள்ள ரஷ்ய தூதரை ஜேர்மன் அரசாங்கம் நேரில் ஆஜராகுமாறு கட்டளையிட்டதன் மூலம் மாஸ்கோ உடனான இராஜதந்திர மோதலை ஒரு புதிய நிலைக்கு உயர்த்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் பார்சிலோனாவில் நடைபெற்ற இந்த மாநாடு, தாங்கள் எதிர்ப்பதாகக் கூறிக்கொள்ளும் பாசிச அச்சுறுத்தலின் வளர்ச்சிக்குத் துணைபோன கட்சிகள் மற்றும் அரசாங்கத் தலைவர்களால் ஜனநாயகத்தை பாதுகாப்பது என்ற பேரில் நடத்தப்பட்ட ஒரு போலியான நிகழ்ச்சியாகும்.
இப்பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இரண்டு கூட்டாளிகளுக்கு இடையே நிலவும் இந்தப் போட்டியானது, முதன்மையாக கிழக்கு மத்திய தரைக்கடல் மற்றும் மத்திய கிழக்குப் பகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் தத்தமது பங்குகள் குறித்தே நிலவுகிறது.
நிதி கண்காணிப்பு அறிக்கை, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களின் மீது தீவிரமடைந்து வரும் வாழ்க்கைச் செலவுச் சுமைகளைத் தணிக்கும் நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியது
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் (IYSSE) சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.), பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் முன்னெடுத்துள்ள இந்த அப்பட்டமான ஜனநாயக விரோத நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு, மாணவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோருகின்றன.
சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை காலை ட்ரூத் சமூக வலைத் தள பதிவுகளில், ஈரான் தனது நிபந்தனைகளை ஏற்காவிட்டால், "அமெரிக்கா ஈரானில் உள்ள ஒவ்வொரு மின் நிலையத்தையும், ஒவ்வொரு பாலத்தையும் தகர்க்கப் போகிறது" என்று ட்ரம்ப் எழுதியிருந்தார்.
சமூகத்தில் அனைத்து செல்வங்களையும் உருவாக்கும் ஒரே சமூக சக்தியான சர்வதேச தொழிலாளர் வர்க்கத்திற்கு மட்டுமே, காட்டுமிராண்டித்தனத்தை நோக்கி இழுத்துச் செல்லப்படுவதைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது.
தெஹ்ரானுடன் ஒரு "பெரிய பேரம்பேசலை" வாஷிங்டன் எதிர்நோக்குவதாக அமெரிக்கத் துணை ஜனாதிபதி வான்ஸ் செவ்வாயன்று கூறிய கருத்துக்கள், அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது அனைத்து எதிரிகளின் செலவிலும், மத்திய கிழக்கை தனது நலன்களுக்காக முழுமையாக மறுசீரமைப்பதையே விரும்புகிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
போரினால் தூண்டப்பட்ட விலையேற்றத்தின் விளைவாக, உலகளாவிய எண்ணெய் நிறுவனங்கள் ஒரு மணி நேரத்திற்கு 30 மில்லியன் டாலர் என்ற விகிதத்தில் கூடுதல் இலாபத்தை ஈட்டி வருகின்றன.
மக்ரோன் அரசாங்கத்தின் மீதான ட்ரம்பின் கண்டனங்கள், ஈரான் மீதான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்புப் போருக்குக் காரணமான முக்கிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே சமரசம் செய்ய முடியாத முரண்பாடுகள் நிலவுவதை வெளிப்படுத்துகின்றன.
மத்திய கிழக்கில் மோதல்கள் தீவிரமடைந்து வருவது மற்றும் ஈரானுக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள வெளிப்படையான அழித்தொழிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், உக்ரேன் போரிலும் இப்போது அனைத்து பாசாங்குகளும் கைவிடப்படுகின்றன.
சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான பரந்த போர்களுக்குத் தயாராகும் வகையில், வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கை மறுஒழுங்கமைத்து கட்டுப்படுத்துவதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பரந்த அரசியல் மற்றும் இராணுவ நிகழ்ச்சி நிரலின் ஒரு பகுதியாக, ஒரு அகண்ட இஸ்ரேல் கொள்கையை முன்னெடுப்பதற்கான உள்நாட்டுத் தேவையாக இந்த சர்வாதிகார நடவடிக்கைகள் உள்ளன.
ஒரு பரந்த உலகளாவிய மோதலாக விரிவடைய அச்சுறுத்தும் ஈரான் மீதான ஏகாதிபத்தியத் தாக்குதலுக்கு எதிராக ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டியெழுப்ப வேண்டியதன் அவசரத் தேவை குறித்து, சோ.ச.க. கொழும்பில் நடத்திய பொதுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. இக்கூட்டம் சூம் மற்றும் கட்சியின் முகநூல் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டதுடன், அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர்.
ஏப்ரல் 26 அன்று ஹட்டனில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உண்மையான நோக்கங்கள், விரிவடைந்து வரும் போரில் இலங்கை ஆளும் வர்க்கத்தின் உடந்தை மற்றும் போரை எதிர்த்துப் போராடுவதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சோசலிச மூலோபாயம் பற்றியும் கலந்துரையாடப்படும்.
இந்த முற்றுகையானது ஒரு போர் நடவடிக்கையாகும் மற்றும் சர்வதேசக் கடல் கொள்ளைக்கு நிகரான செயலாகும். ஈரானுக்கு எதிராகவும், ஒட்டுமொத்த உலகத் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும் தொடுக்கப்பட்டுள்ள இந்தத் குற்றவியல் நடவடிக்கையை உலக சோசலிச வலைத் தளம் (WSWS) வன்மையாகக் கண்டிக்கிறது.
நியூ யோர்க் டைம்ஸ் பத்திரிகை ஜனநாயகக் கட்சி சார்பாகப் பேசுகிறது. மேலும், அது விவாதத்திற்குத் தேவையில்லாத அளவுக்கு மிகவும் வெளிப்படையானது என்று கருதும் ஒரு முன்முடிவிலிருந்து தொடங்குகிறது: அதாவது, போரின் நோக்கங்களை அடைவதில் ஏற்படும் தோல்வியானது முதல்தர மூலோபாயப் பேரழிவாக அமையும் என்பதே அந்த முன்முடிவாகும்.
ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து கடல்வழிப் போக்குவரத்தையும் திங்கட்கிழமை காலை 10:00 மணிக்கு (கிழக்கு நேரம்) அமெரிக்கப் போர்க்கப்பல்கள் முற்றுகையிடத் தொடங்கும் என்று அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
சோசலிச சமத்துவக் கட்சி (SEP) மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பு, அமெரிக்கா முழுவதிலும் உள்ள தொழிலாளர்களையும் இளைஞர்களையும் எச்சரிக்கின்றன: அமெரிக்க ஆளும் வர்க்கம், கட்டாய இராணுவ ஆட்சேர்ப்பை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான அடித்தளத்தை அமைத்து வருகிறது. பெருநிறுவனத் தன்னலக்குழு தனது சட்டவிரோதமான மற்றும் விரிவடைந்து வரும் ஆக்கிரமிப்புப் போர்களுக்கு இளைஞர்களைப் பீரங்கி இரையாகப் பயன்படுத்த விரும்புகிறது.
அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகளின் (DSA) உத்தியோகபூர்வ பத்திரிகையானது, போர் மற்றும் ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் இனப்படுகொலை அச்சுறுத்தல்களால் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியின் ஆழத்தை மூடிமறைக்க முயல்கிறது.
துருக்கிய அலைவரிசை TV5 உடனான நேர்காணலில், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த், ஈரானின் மீதான அமெரிக்க குண்டுவீச்சில் ஏற்பட்டுள்ள இரண்டு வார கால இடைநிறுத்தம் என்பது வெறும் ஒரு இடைவேளை மட்டுமே என்று எச்சரிப்பதுடன், தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்தின் அடிப்படையில் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஓர் இயக்கத்தைக் கட்டியெழுப்புமாறு சர்வதேச அளவில் தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.
கூறப்பட்ட ஒரு சில கருத்துக்களில் வெளிப்படுவது போல், இந்தக் கட்சிகளின் மௌனமானது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் போருக்கும் அவை அளித்து வரும் தொடர்ச்சியான ஆதரவை மூடி மறைக்க முடியாது.
கடந்த புதன்கிழமையன்று 250-க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற லெபனான் மீதான இஸ்ரேலின் பாரிய தாக்குதல், ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் போரின் விளைவை அமெரிக்காவின் இரு அரசியல் கட்சிகளின் பிரிவுகளும் ஒரு பேரழிவு என்று கண்டித்துள்ள நிலையிலும், அந்தப் போர் ஈரானை மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டில் விட்டுச் சென்றுள்ள நிலையிலும் நடந்துள்ளது.
மார்ச் 2 அன்று, மோதல் தொடங்கியதிலிருந்து நடந்த தாக்குதல்களிலேயே மிகக் கடுமையானதான, தெற்கு லெபனானில் பொதுமக்கள் மீது இஸ்ரேல் நடத்திய காட்டுமிராண்டித்தனமான வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல், ஈரானுக்கு எதிரான போரில் செவ்வாயன்று ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த இரண்டு வார கால "போர்நிறுத்தத்தின்" மோசடித் தன்மையை அம்பலப்படுத்தியது.
அனைத்து இடங்களிலும் வறுமைக்குள் தள்ளப்பட்ட புலம்பெயர்ந்தோர், மூடப்பட்ட எல்லைகளையும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட அரக்கத்தனமான பிரச்சார சித்தரிப்பையும் எதிர்கொள்கின்றனர். இந்தச் சித்தரிப்பு, வறுமை, வேலையின்மை மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளில் செய்யப்படும் வெட்டுக்கள் மீதான சமூகக் கோபத்தை, இவ்வுலகைச் சூறையாடிவரும் மிகவும் கொழுத்த வசதிபடைத்த தன்னலக்குழு ஆட்சியின் மீதிருந்து திசைதிருப்புவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
93 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் நாகரிகத்தை பூண்டோடு அழித்துவிடுவேன் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலும் —இதுவே ஒரு போர்க்குற்றமாகும்— மற்றும் ஒட்டுமொத்தப் போரும் சேர்ந்து, வரலாற்று ரீதியிலான ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
அமெரிக்கா ஒரு ஒழுக்கநெறி மற்றும் அரசியல் பேரழிவின் விளிம்பில் நிற்கிறது. திங்கள்கிழமை அன்று டொனால்ட் ட்ரம்ப் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலிருந்து பெறப்படும் தவிர்க்க முடியாத முடிவு இதுவே.
ஈரானிய நாகரீகத்தை “இன்றிரவு அழிந்துபோகச் செய்வேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் விதமாக, உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் செவ்வாய்க்கிழமை காலை பின்வரும் அறிக்கையை வெளியிட்டார்.
ட்ரம்ப், சர்வதேச சட்டத்தின் கட்டமைப்பு, ஜனநாயக மரபுகள் மற்றும் அடிப்படை சட்டபூர்வத்தன்மை ஆகியவற்றுக்கு முற்றிலும் அப்பாற்பட்டே செயல்பட்டு வருகிறார். விண்ணைத் தொடும் சமூக சமத்துவமின்மை, முடிவில்லாத போர் மற்றும் சுழன்று கொண்டிருக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளின் அழுத்தத்தினால், அமெரிக்க ஜனநாயகம் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்து போயுள்ளதற்கு அவரது கூற்றுகளும் செயல்களுமே ஒரு சாட்சியமாகும்.
“தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்தால், அவர்கள் விறகு கட்டு போல் இருப்பார்கள். அந்தக் கட்டு பிரிக்கப்பட்டால், அவை உடைந்துவிடும். நாம் செய்ய வேண்டியது, அந்தக் கயிற்றைக் கட்டுவதுதான்—தொழிலாளர் வர்க்கத்தை ஒன்றிணைப்பது.”
ஏப்ரல் 7 அன்று ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிராக நடைபெறவுள்ள ஒரு பொதுக் கூட்டத்திற்கு முன்னதாக, இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பும் பிரச்சாரம் செய்து வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று, இராணுவச் செலவினங்களை பெருமளவில் அதிகரிப்பதை மையமாகக் கொண்ட வரவு செலவுத் திட்ட வரைவை ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 2027 நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டக் கோரிக்கையில், "பாதுகாப்பிற்காக" — அதாவது இராணுவ ஆக்கிரமிப்பிற்காக — சுமார் 1.5 டிரில்லியன் டாலர்களை அங்கீகரிக்குமாறு வெள்ளை மாளிகை காங்கிரஸிடம் கேட்டுள்ளது. இது நவீன வரலாற்றிலேயே மிக உயர்ந்த இராணுவச் செலவினமாக இருக்கும்.
விரிவடைந்து வரும் இந்தப் போர், மனிதகுலத்தையே அழிக்கும் ஒரு கொடூரமான அணு ஆயுதப் போரின் அபாயத்தை முன்கொணர்ந்துள்ளது.
கடந்த புதன்கிழமை இரவு டொனால்ட் ட்ரம்ப் ஆற்றிய உரையில் இருந்து பெறப்பட வேண்டிய தவிர்க்க முடியாத முடிவு என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி ஒரு அரசியல் குற்றவாளி என்பதாகும்.
ஜேர்மனியின் நூரம்பேர்க்கில் உள்ள பிரெட்ரிக்-அலெக்சாண்டர் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய ஒரு சக்திவாய்ந்த விரிவுரையில், ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போர் என்பது, நூரம்பேர்க் விசாரணைகளில் நிறுவப்பட்ட சட்டத் தர நிலைகளின்படி அமைதிக்கு எதிரான ஒரு குற்றம் என்பதை டேவிட் நோர்த் நிரூபித்துக் காட்டினார்.
வேலைவாய்ப்புகள், ஊதியங்கள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீதான தாக்குதல்களை எதிர்த்துப் போராடும் தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு எதிரான பொலிஸ் அடக்குமுறை பெருகி வருகிறது.
முன்னிலை சோசலிசக் கட்சியானது, தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சர்வதேசப் போர் எதிர்ப்பு இயக்கத்திற்கு அன்றி, “உலக மக்கள் சக்தி” என்ற போர்வையில் சந்தர்ப்பவாதக் குழுக்களின் ஒரு சர்வதேசக் கூட்டணிக்கே அழைப்பு விடுக்கிறது.
கடந்த புதன்கிழமை அன்று தொலைக்காட்சியில் ஆற்றிய முதன்மை நேர உரையில், ஈரான் போரில் அமெரிக்காவின் இலக்கு ஈரானிய சமூகத்தை அழிப்பதே என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்தப் போர், ஈரானில் 80 ஆண்டுகளுக்கும் மேலான அமெரிக்க ஏகாதிபத்தியத் தலையீட்டின் உச்சக்கட்டமாகும்; அந்த வரலாற்றைத் தவிர்த்து இந்தப் போரைப் புரிந்துகொள்ள இயலாது.
நெர்தீன் கிஸ்வானியைக் கொலை செய்யத் தீட்டப்பட்ட சதி என்பது ஒரு தனிப்பட்ட செயலல்ல. மாறாக, இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்பு குற்றமாக்கப்பட்டு, ஜனநாயக உரிமைகள் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு அரசியல் சூழலின் விளைவாகும்.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரின் 30வது நாளான திங்களன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது கோரிக்கைகளுக்கு ஈரான் அடிபணியவில்லை என்றால், அந்த நாட்டின் அனைத்து எரிசக்தி உற்பத்தி நிலையங்களையும் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையங்களையும் அழித்துவிடுவேன் என்று அச்சுறுத்தியுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்கப் போரின் குற்றவியல் தன்மை குறித்து, நூரம்பேர்க் நீதி அரண்மனைக்கு வெளியே சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரையின் காணொளி, சமூக ஊடகத் தளங்களில் சுமார் 2,00,000 முறை பார்க்கப்பட்டுள்ளது; மேலும் இது மக்களிடையே ஒரு மிகப்பெரிய ஆதரவு அலையை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 28 அன்று நடைபெற்ற மூன்றாவது சுற்று "மன்னர்கள் வேண்டாம்" போராட்டங்களில், அமெரிக்கா முழுவதிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கினர். இது, அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இடம்பெற்ற மிகப்பெரிய போராட்டமாகும்.
போர், பாசிசம் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான தாக்குதல்களுக்கு எதிரான எதிர்ப்பின் பரந்த தன்மையை எடுத்துக்காட்டும் வகையில், முக்கிய நகரங்களிலும் கிராமப்புற சமூகங்களிலும் பெருந்திரளான மக்கள் கூடினர்.
ஈரானுக்கு எதிரான போர், அமெரிக்க மக்கள் மற்றும் ஒட்டுமொத்த உலக மக்களுக்கு எதிரான ஒரு குற்றவியல் சதியாகவே நடத்தப்படுகிறது.
உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியரும், அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த் உட்பட பல பேச்சாளர்கள் இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினர். அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியாக இருந்த அமெரிக்க தொழிலாளர் கழகத்தின் (Workers League) தலைவராக இருந்த டேவிட் நோர்த், தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) தலைமையின் அரசியல் சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் முதன்மையான பாத்திரத்தை வகித்திருந்தார்.
ட்ரம்ப் நிர்வாகம் ஆயிரக்கணக்கான தரைப் படையினர்களை பாரசீக வளைகுடா நோக்கி அனுப்பி வரும் நிலையில், அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்காவிட்டால், அந்நாட்டின் மீதான ஆக்கிரமிப்புப் போரை மிகப்பெரிய அளவில் தீவிரப்படுத்தப்போவதாக வெள்ளை மாளிகை புதன்கிழமை அன்று அச்சுறுத்தியுள்ளது.
ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய போர் தொடங்கி ஒரு மாதமாகிவிட்ட நிலையில், அமெரிக்கா வேகமடைந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பால் அதிர்ந்து போயுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு எதிரான தனது அறிவிக்கப்படாத மற்றும் சட்டவிரோதமான போரில் அமெரிக்கா "வெற்றி" பெற்றுவிட்டதாக" அறிவித்ததுடன், ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஆனால், ஈரானை இலக்கு வைத்து இடம்பெறும் இராணுவக் குவிப்பு மேலும் விரிவடைந்து வருவதையே அமெரிக்க ஊடக அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
ஈரானுக்கு எதிரான சட்டவிரோத அமெரிக்க-இஸ்ரேல் போர் குறித்த அரசாங்கத்தின் போலியான “நடுநிலையை” திசாநாயகவின் கருத்துக்கள் மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தைகள் என்ற போர்வையில், இராணுவத் தாக்குதல்களை நடத்திய ட்ரம்பின் கடந்தகால வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, ஈரானுடனான "எமது பகைமையை முழுமையாகத் தீர்ப்பது" குறித்த "உரையாடல்கள்" பற்றிய அவரது கூற்று நம்பமுடியாதது மட்டுமல்ல, அது ஆபத்தான தீய நோக்கத்தையும் கொண்டிருக்கிறது.
சோசலிசக் கொள்கைகளின் அடிப்படையில், சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் ஐக்கிபட்ட போர் எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்காக, உலகத் தொழிலாளர் வர்க்கக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ள சர்வதேசப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக IYSSE இந்தக் கூட்டத்தை நடத்துகிறது.
அரசியல் ரீதியாகப் அடிபணிய வைக்க வேண்டும் என்பதற்காக, ஒட்டுமொத்த சாதாரண மக்கள் தொகையின் அடிப்படை வாழ்வாதார கட்டமைப்புகளை அழித்தொழிப்போம் என்று இவ்வளவு வெளிப்படையாக, மிரட்டலை விடுத்த வேறெந்த அரசாங்கமும் நவீன வரலாற்றில் இல்லை.
கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆக்ஸியோஸ் வெளியிட்ட செய்தியின்படி, ஈரானில் தரைப்படைகளை நிலைநிறுத்துவது குறித்து "தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக" வெள்ளை மாளிகையைச் சேர்ந்த மூன்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் கார்க் தீவை கைப்பற்றுவதே அவர்களின் மிகவும் சாத்தியமான திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
புதுதில்லியால் கண்டிக்கப்பட்ட ஒரே நாடு ஈரான் மட்டுமே. அதுவும் ஈரான் தன்னை தற்காத்துக் கொள்ளத் துணிந்ததற்காக கண்டிக்கப்பட்டது.
ஈரானுக்கு எதிரான போருக்கு நிதியளிப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகம் 200 பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை கோருவதாக வாஷிங்டன் போஸ்ட் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமையன்று, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் அரசு மற்றும் அரசாங்கத்தின் தலைவர்கள், ஹோர்முஸ் நீரிணையைத் திறந்து வைக்கப் போவதாக உறுதியளித்து, ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதியின் கூற்றுக்களுக்கு மாறாக, ஈரானுக்கு எதிரான அழித்தொழிப்புப் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இராஜதந்திர மற்றும் மூலோபாய நோக்கங்களுக்காக கொழும்பு ஒரு இணக்கமான இடைத்தரகராக செயல்படுகிறது.
புதிய போர் எதிர்ப்பு இயக்கமானது எல்லாவற்றிற்கும் மேலாக, சர்வதேச ரீதியானதாக இருக்க வேண்டும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒன்றுபட்ட உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தின் மாபெரும் சக்தியைத் அணிதிரட்ட வேண்டும்.
20 ஆம் நூற்றாண்டின் சமூக சாதனைகளைத் துடைத்தெறியும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலை, ஒட்டுமொத்த அமெரிக்கக் கண்டங்களிலும் (வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்கா) தொழிலாளர் வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதன் மூலம் மட்டுமே நிறுத்த முடியும்.
1980களின் நடுப்பகுதியில், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிலிருந்து (ICFI) தொழிலாளர் புரட்சிக் கட்சி (WRP) வெளியேற்றப்பட்டதானது, சர்வதேச சோசலிச இயக்கத்தின் வரலாற்றில் ஒரு தீர்க்கமான தருணமாக அமைந்தது. ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட அரசியல் போக்காக இருந்த ட்ரொட்ஸ்கிசத்தின், அதாவது புரட்சிகர மார்க்சிசத்தின் உயிர் வாழ்க்கைக்கே அது பெரும் சவாலாக இருந்தது.
31வது கடற்படை அதிரடிப்படையைச் சுமந்து செல்லும் நீர்நிலம் இரண்டிலும் தாக்குதல் நடத்தக்கூடிய ஹெலிகாப்டர் தாங்கி கப்பலான USS திரிப்போலி, பாரசீக வளைகுடாவை நோக்கிய பயணத்தில் மலாக்கா நீரிணையைக் கடப்பதை செவ்வாயன்று அவதானிக்க முடிந்தது.
ஐரோப்பிய வல்லரசுகள், தங்களால் கட்டுப்படுத்தவோ அல்லது அதன் முடிவில் செல்வாக்கு செலுத்தவோ முடியாத ஒரு போரில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை. அந்தப் போரில் தங்கள் பங்களிப்பிற்காக அவர்கள் ஒரு கடுமையான பேரம் பேசலை விரும்புகிறார்கள்.
அமெரிக்கத் தலைநகரின் மிக முக்கியமான கலைக்கூடத்தின் பின்னணியைப் பயன்படுத்திக் கொண்ட ட்ரம்ப், ஈரான் மீதான தனது இராணுவத் தாக்குதல் குறித்த ஒரு குழப்பமான விளக்கத்தை அளித்து, இரத்தத்தை உறைய வைக்கும் மிரட்டல்களையும், இந்தக் குற்றவியல் போரினால் ஏற்படும் பிரமாண்டமான உயிரிழப்புகள் குறித்த முழுமையான அலட்சியத்தையும் வெளிப்படுத்தினார்.
இலங்கை சோ.ச.க. மற்றும் IYSSE உறுப்பினர்கள் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போருக்கு எதிரான பிரச்சாரத்தில் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
வரலாறு நெடுகிலும், ஆழமான உள்நாட்டு நெருக்கடிகளை எதிர்கொள்ளும் ஆட்சிகள், அவற்றைத் தீர்ப்பதற்கு அல்லது திசைதிருப்புவதுக்கு போரையே ஒரு வழிமுறையாக நாடுகின்றன.
“இந்தப் போர் தீவிரமடைந்தால், மூன்றாம் உலகப் போரின் ஆபத்து அதிகரிக்கும். ஒரு பெரிய சக்தி மற்றொரு சிறிய நாட்டிற்கு எதிராகப் போரை நடத்துகிறது. அது நிறுத்தப்பட வேண்டும்,” என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கூறினார்.
டயஸ்-கனெல்லின் “கலந்துரையாடல்” பற்றிய பேச்சுக்கள், உண்மையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திடம் ஹவானா சரணடைவதற்கான நிபந்தனைகள் குறித்தப் பேச்சுவார்த்தைகளையே சுட்டிக்காட்டுகின்றன.
ஈரான் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்படும் தரைவழித் தாக்குதல் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் முடிந்துவிடாது. அது நீண்டகாலம் நீடிக்கக்கூடிய மற்றும் கொடூரமான இரத்தக் களரியாகவே அமையும்.
சோசலிச சமத்துவக் கட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியமும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராக மேற்கொண்ட சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போரையும் நிராயுதபாணியான ஈரானிய போர்க்கப்பலை மூழ்கடித்ததையும் அப்பட்டமான போர்க்குற்றம் எனக் கண்டனம் செய்கிறது.