"இலவசக் கல்வியைப் போலவே, இலவச சுகாதாரமும் தனியார்மயமாக்கலை நோக்கித் தள்ளப்படுகிறது" என இலங்கை அரச மருத்துவர் கூறுகிறார்

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

பல கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 23 அன்று தொடங்கிய அரச மருத்துவர்களின் பிரச்சாரம், தற்போது மூன்று வாரங்களை கடந்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தால் (GMOA) அழைப்பு விடுக்கப்பட்ட இந்தப் பிரச்சாரத்தில் சுமார் 20,000 உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். பெப்ரவரி 11 அன்று, அனைத்து சுகாதார ර්තාකරුවන්மருத்துவர்கள் மற்றும் மேலதிக மருத்துவ அதிகாரிகளுடன் நடைபெற்ற ර්තාකරුවන්கலந்துரையாடலைத் தொடர்ந்து, தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவதாக GMOA அறிவித்துள்ளது.

வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களுக்கு எதிராக 27 பெப்பிரவரி 2025 அன்று, கண்டி போதனா வைத்தியசாலைக்கு வெளியே தாதிமார் மறியல் போராட்டம் செய்த போது

சுகாதார தொழிலறிஞர்களின் கூட்டமைப்பு மற்றும் அரசாங்க தாதி உத்தியோகத்தர் சங்கம் உட்பட சுகாதார தொழிற்சங்க கூட்டணி (HTUA), வைத்தியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தொழில்துறை போராட்ட நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகக் குறிப்பிட்டுள்ளன. GMOA மற்றும் HTUA தலைவர்களின் போராட்ட அச்சுறுத்தல்கள் ஒருபுறம் இருக்க, அவர்களின் உண்மையான நோக்கம், இலவச சுகாதாரத்தைப் பாதுகாக்க மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களின் உண்மையான போராட்டம் ஒன்று அபிவிருத்தியடைவதைத் தடுப்பதாகும்.

மருத்துவர்களின் கோரிக்கைகளை அரசாங்கம் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. ஜனவரி 5, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மருத்துவர்களின் கொடுப்பனவுகளுக்கான கோரிக்கைகளை வழங்க முடியாது என்று கூறிய அதே நேரம், பெப்ரவரி 6 அன்று கண்டியில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக, 2027 வரை அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படாது என்று வலியுறுத்தினார்.

அவர் அங்கு கூறியதாவது:

“குறிப்பிடத்தக்க சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டுள்ள போதிலும், சில தொழிற்சங்கங்கள் பல கொடுப்பனவுகளை அதிகரிக்க வேண்டும் என்று கோருகின்றன. அது நடக்காது. மூன்றாவது தவணை சம்பள உயர்வு வழங்கப்பட்டு, வரவு-செலவுத் திட்டத்தில் சம்பள அதிகரிப்பின் தாக்கம் மதிப்பிடப்பட்ட பின்னரே மற்ற கொடுப்பனவுகளை பற்றி நாங்கள் பரிசீலிப்போம். 2027 ஜனவரியில் சம்பள உயர்வு வரவிருக்கும் போது கொடுப்பனவுகளுக்காக போராடுவது நியாயமில்லை.”

அரச துறையில் ஊதியக் கோரிக்கைகளை நிராகரிப்பதானது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கட்டளையின் கீழ், மக்கள் விடுதலை முன்னணி / தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி./தே.ம.ச.) அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சிக்கன நடவடிக்கை திட்டத்தின் கீழ் தொழிலாள வர்க்கத்தின் தொழில்கள், ஊதியங்கள் மற்றும் வேலை நிலைமைகள் மீது முன்னெடுக்கப்படும் தாக்குதலின் ஒரு பகுதியாகும். எனவே, அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதன் மூலமோ அல்லது வேண்டுகோள் விடுப்பதன் மூலமோ மருத்துவர்களோ அல்லது அரச ஊழியர்களின் எந்தவொரு பிரிவினரோ தங்கள் ஊதியக் கோரிக்கைகளை வெல்ல முடியாது.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சுகாதார ஊழியர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்யும் வைத்தியர்கள் மத்தியில் தலையிட்டு, அரசாங்கம் கோரிக்கைகளை நிராகரிக்கின்றமை, இலவச சுகாதார சேவையை அழிக்கும் திட்டங்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் பிற்போக்கு வகிபாகம் பற்றியும் தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் முதலாளித்துவக் கட்சிகளிலிருந்து சுயாதீனமான நடவடிக்கைக் குழுக்களைக் கட்டியெழுப்புவதன் மூலம் போராட்டத்தை ஒழுங்கமைப்பதற்கான பொறுப்பை தொழிலாளர்கள் தங்கள் கையில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடி வருகின்றனர்.

வட மாகாணத்தில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார சிகிச்சை மையத்தில் பணிபுரியும் ஒரு மருத்துவர், சுகாதார சேவைகளின் சரிவு மற்றும் அவர் எதிர்கொள்ளும் வேலை நிலைமைகளை விளக்கினார்:

'நான் இங்கு வந்தபோது, ​​இந்த சிகிச்சை மையம் முற்றிலும் பாழடைந்திருந்தது. ஒரு பெயர்ப்பலகை கூட இருக்கவில்லை. பல தொண்டு நிறுவனங்களின் உதவியுடன், தேவையான பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளோம். நோயாளர் பரிசோதனை அறை மழையில் நனைகிறது. மழை பெய்யும்போது, ​​நோயாளிகள் தண்ணீரில் அமர்ந்திருப்பதைக் காணலாம். இது போன்ற மருத்துவ மையத்திற்கு இரண்டு மருத்துவர்கள், ஒரு செவிலியர், ஒரு சிற்றூழியர் மற்றும் ஒரு மருந்தாளர் தேவை. பொதுவாக, ஒவ்வொரு சிகிச்சைப் பிரிவுக்கும் ஒரு வைத்தியர் மட்டுமே இருப்பார். செவிலியர் இல்லை. ஒரு சிற்றூழியர் மட்டுமே இருக்கிறார். ஆண் நோயாளிகளைப் பராமரிக்க ஒரு ஆண் சிற்றூழியர் இருக்க வேண்டும். ஆனால் இல்லை. மருத்துவரும் ஒரு சிற்றூழியரும் ஒரு தாதி செய்ய வேண்டிய வேலையையும் சேர்த்து செய்ய வேண்டியுள்ளது. மருத்துவ மையங்களில் வார்டுகள் இல்லாததால், மேலதிக நேரக் கொடுப்பனவுகளும் குறைவாகவே உள்ளன.'

தொற்றாத நோய்களுக்கான சிகிச்சைக்கும் வெளிநோயாளர் பிரிவுக்கும் தினமும் கிட்டத்தட்ட 150 நோயாளிகள் இந்த மருத்துவ மையத்திற்கு வருவதால், விடுமுறை எடுப்பது மிகவும் கடினம் என்றும், வேறு மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவர் வரவில்லை என்றால், மையத்தை மூடிவிட்டு விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

'அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான வசதிகளோ, அல்லது வேறு மருத்துவமனைக்கு அனுப்ப அம்புலன்ஸ் வாகனமோ ஊழியர்களோ இல்லை. மருத்துவர்களின் தொழிற்சங்கப் போராட்டத்தில் இருந்து நான் எதிர்பார்ப்பது கட்டிடங்கள், ஊழியர்கள் மற்றும் மருந்துகளின் பற்றாக்குறை இல்லாமல் தேவையான வசதிகளைப் பெறுவதாகும். ஆனால் GMOA அதற்காகப் போராடவில்லை. குறைந்தபட்சம் கூட்டங்களில் இது குறித்து எங்களிடம் கேட்கப்படுவதில்லை. நாங்கள் எதிர்கொள்ளும் நிலைமை குறித்து தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாக நிறுவனங்கள் உட்பட அனைவருக்கும் நான் கூறியுள்ளேன். எந்த பதிலும் இல்லை. இந்தப் போராட்டத்தில் GMOA முன்வைத்த கோரிக்கைகள் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க போதுமானதாக இல்லை,' என்று அவர் கூறினார்.

கண்டி பகுதியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையின் மயக்க மருந்துப் பிரிவில் உள்ள ஒரு மருத்துவர், தான் வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற போதிலும், GMOA அது குறித்து எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்று கூறினார்.

'கோரிக்கைகள் எங்களால் முன்மொழியப்பட்டவை அல்ல. அவை தொழிற்சங்க அதிகாரிகளால் உறுப்பினர்கள் மீது திணிக்கப்பட்டவை. அது குறித்து எந்த கலந்துரையாடலும் நடக்கவில்லை. வேலைநிறுத்தத்தில் மிகவும் நிலையற்ற தன்மையை உள்ளது,' என்று அவர் கூறினார்.

“நீங்கள் விளக்கியது போல், சர்வதேச நாணய நிதியம் சம்பள உயர்வுக்கு இடம் கொடுக்கப் போவதில்லை. சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்ட பணம் மிகக் குறைவு என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். கல்வி மற்றும் சுகாதாரம் படிப்படியாக தனியார்மயமாக்கப்படுவதாகத் தெரிகிறது.”

நோயாளிகளைப் போலவே மருத்துவர்களும் அரச மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்று உதாரணங்களுடன் அவர் கூறினார். “நான் ஒரு MRI ஸ்கேன் எடுக்க வேண்டியிருந்தது. பெரும் சிக்கல்களுக்கு மத்தியில் திகதி பெற்றுத்தான் ஸ்கேன் செய்துகொண்டேன். ஆகவே பொது மக்கள் எதிர்கொள்ளும் நிலைமை பற்றி என்ன சொல்வது?”

2022 வெகுஜன எழுச்சியைப் பற்றி அவர் கூறியதாவது: “2022 இல் தொழிலாளர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியிருக்கலாம் என்பது மிகவும் தெளிவாகிறது. ஆனால் அதற்கு எந்தத் தலைமையும் இருக்கவில்லை. எனவே, நீங்கள் சொல்வது போல், தொழிலாள வர்க்கத்தை அரசியல் ரீதியாகப் பயிற்றுவிக்காமல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. சோசலிசம் AIயும் அதற்கு ஒரு பலமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.”

மருத்துவர் சேவையை பிரத்தியேக சேவைப் பிரிவாக நிறுவுவதற்கான கோரிக்கையை ஆரம்பத்தில் தான் ஆதரித்ததாகக் கூறிய அவர், சுகாதார ஊழியர்கள் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள் விளக்கமளித்த பின்னர், அது மருத்துவர்களுக்கும் ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்தும் ஒரு பிளவுவாத கோரிக்கையாகும் என்பதை புரிந்துகொண்டதாக, அந்த வைத்தியசாலையின் மனநலத் துறையில் பணிபுரியும் ஒரு மருத்துவர் குறிப்பிட்டார்.

“சமீபத்தில் நான் சுகாதார முகாம்களுக்குச் சென்றிருந்தேன். டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மத்திய மலைநாட்டு வாழ் மக்களின் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க அவை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அது பொய். உணவு மற்றும் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகளை வழங்காமல் அவர்களின் மனநலத்தை ஒருபோதும் மேம்படுத்த முடியாது.”

“நீங்கள் கூறியது போல், சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளின் கீழ், சுகாதாரம் உட்பட சமூக நலனுக்கான அரசாங்கத்தின் ஒதுக்கீடு நாளுக்கு நாள் குறைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினை, உற்பத்தி சாதனங்களின் தனியார் உடமையும் மற்றும் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பிலேயே வேரூண்றியுள்ளது என்பது தெளிவாகிறது. சுகாதார சேவையில் உள்ள கடுமையான குறைபாடுகள் அதன் விளைவாகும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.”

நோயாளிகள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள் என்றும், அவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் மருத்துவர்கள் உட்பட மருத்துவமனை ஊழியர்கள் பெரும் அழுத்தத்தில் உள்ளனர் என்றும் அவர் கூறினார். 'நீங்கள் சொன்னது போல், ஆட்சிக்கு வரும் எந்த முதலாளித்துவ அரசாங்கமும் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காது. எனவே, ஒரு மாற்று ஆட்சி முறை தேவைப்படுகிறது. அதற்காக, நீங்கள் முன்மொழியும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சோசலிச அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பவும், அதை நிதி ரீதியாக ஆதரிக்கவும் உங்களுடன் சேரவும் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் எனக்கு இன்னும் பல கேள்விகள் தெளிவுபடுத்தப்பட வேண்டும். அவற்றைத் தீர்க்க முயற்சிப்பேன். அதற்காக, நான் நிச்சயமாக சோசலிசம் AI செயற்கை அறிவுநுட்பத்தைப் பயன்படுத்துவேன்.'

கண்டியில் உள்ள மற்றொரு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் கீழ் வருமாறு கூறினார்:

'எங்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையைப் படித்தேன். இது எனக்குப் புதியது. அது இந்தப் பிரச்சினையை வேறு கோணத்தில் இருந்து பார்ப்பது. இந்தப் பிரச்சினைகளை நாம் இவ்வளவு பரந்த அளவில் நோக்கவில்லை. உண்மையில், மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகளைப் பற்றி மட்டும் சிந்திக்க முடியாது. மற்றவர்களின் பிரச்சினைகளையும் பார்த்து ஒன்றாகப் போராட வேண்டும். நீங்கள் சொல்வது போல், தொழிற்சங்க முன்னணிகளை உருவாக்குவது உண்மையான போராட்டத்திற்கு வழிவகுக்காது. தொழிலாள வர்க்கம் ஒன்றுபட வேண்டும். அரசாங்கம் கோரிக்கைகளுக்கு உடன்படாததற்கு முக்கிய காரணம் சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுகளே என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இப்போது அரசாங்கம் அதற்கு வெளியே நிதி சம்பந்தமான முடிவுகளை எடுக்க முடியாது.'

GMOA மருந்துகளை வெளியில் வாங்குவதற்கான மருந்துச் சீட்டுகளை எழுத மறுப்பது மற்றும் வெளிப்புற பரிசோதனைகளை பரிந்துரைக்க மறுப்பது போன்ற இரண்டு நிபந்தனைகளைப் பற்றி குறிப்பிட்ட அவர், மருத்துவமனைகளில் இந்த வசதிகள் வழங்கப்பட வேண்டும் என்று கோரி, ஏனைய சுகாதார ஊழியர்களுடன் இணைந்து போராடுவதே நாம் செய்ய வேண்டியது என்று அவர் கூறினார்.

“நாங்கள் அவ்வாறு செய்தால், ஏனைய தொழிலாளர்களும் இந்த வேலைநிறுத்தத்தை ஆதரிப்பார்கள். ஊதிய உயர்வு அனைவருக்கும் கிடைக்க வேண்டும். பணவீக்கத்துடன் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. அனைவருக்கும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ற சம்பளம் கண்ணியமான கிடைக்க வேண்டும். நீங்கள் சொல்வது போல், ஒவ்வொரு தொழிலாளிக்கும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க கூடிய கண்ணியமான ஊதியம் கிடைக்க வேண்டும். எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது தொழிற்சங்கமோ அத்தகைய கோரிக்கையை முன்வைக்கவில்லை.”

வெளிநாட்டுக் கடன்களை அடைக்க மறுக்க வேண்டும் என்ற சுகாதார ஊழியர் நடவடிக்கைக் குழுவின் கோரிக்கையை பற்றி அவர் கேள்வி எழுப்பினார்:

“நாங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்க முடியுமா? நாங்கள் அவ்வாறு செய்தால், நாங்கள் திவாலான நாடாக அறிவிக்கப்படுவோம் அல்லவா? இறக்குமதிகள் நிறுத்தப்படாதா? எனவே தவணைத் தொகையை தாமதப்படுத்தி பின்னர் கடனை செலுத்த வேண்டியிருக்கும், இல்லையா?”

சுகாதார ஊழியர் நடவடிக்கைக் குழுவின் உறுப்பினர்கள், 21 நவம்பர் 2024 அன்று உலக சோசலிச வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட, 'இலங்கைத் தொழிலாளர்கள் ஏன் அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும் எனக் கோர வேண்டும்?' என்ற தலைப்பீலான கட்டுரையின் பின்வரும் பகுதியை மேற்கோள் காட்டி விளக்கமளித்தனர்.

'ஏகாதிபத்திய சக்திகளும் சர்வதேச நாணய நிதியம் போன்ற அவற்றின் முகவர் அமைப்புகளும் நிதி ரீதியாகவும் பொருளாதாரத் தடைகளை திணிப்பதன் மூலம் பிற அடக்குமுறைகளையும் மேற்கொண்டு இலங்கையில் அத்தகைய அரசாங்கத்தின் கழுத்தை நெரிக்க முயற்சிக்காதா? நிச்சயமாக அவர்கள் செய்வார்கள். ஆனால் இலங்கையில் உள்ள தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கம், கட்டாயமாக அறைகூவல் விடுக்க வேண்டிய ஒரு பெரிய சமூக சக்தி உள்ளது -அதுதான் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும்.'

சர்வதேச தொழிலாள வர்க்கம் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுக்கக்கூடும் என்பதை உணர்ந்த அவர், கூறியதாவது:

“பெரும்பான்மையானவர்களுக்கு இந்த விஷயங்கள் பற்றி உண்மையில் தெரியாது. தொழிலாளர்கள் அந்த உண்மையைப் புரிந்து கொண்டால், அது ஒரு பொதுவான கோரிக்கையாக ஆகும். இலங்கையின் தொழிலாளர்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்த மறுப்பதை தனியாக செய்ய முடியாது. அதற்கு, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்பதையும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஆதரவு அவசியம் என்பதையும் நான் உணர்ந்தேன். உங்கள் விளக்கங்களிலிருந்து நான் பல விஷயங்களைப் புரிந்துகொண்டேன். உலக சோசலிச வலைத் தளத்தில் உள்ள கட்டுரைகளை நான் தொடர்ந்து படிப்பேன்.”

Loading