கொரோனா வைரஸ் அதிகரிக்கும் ஆபத்து அதிகமாக இருக்கும்போது பிரான்சில் மீண்டும் திறத்தல் தொடர்கிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கொரோனா வைரஸ் பூட்டுதல் கட்டுப்பாடுகளை ஜூன் மாத இறுதிக்குள் மீண்டும் திறந்து முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரெஞ்சு அரசாங்கம் தனது கால அட்டவணையுடன் தொடர்கிறது. வைரஸின் குறிப்பிடத்தக்க பரவல் மற்றும் இந்தியாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு (Delta Variant) போன்ற கொடிய மாறுபாடுகளின் தோற்றம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பொருளாதார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்கான நோக்கத்துடன் மட்டுமே இது இயக்கப்படுகிறது. தற்போதைய நிலைமை 2020 ஆம் ஆண்டின் இறுதியில் இரண்டாவது பூட்டுதலின் முடிவைப் போலல்ல. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டதானது 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து மாறுபாட்டை பெருமளவில் பரவ அனுமதித்தது.

புதன்கிழமை மாலை, தினசரி ஊரடங்கு உத்தரவு இரண்டு மணி நேரம் இரவு 11:00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. உணவகங்கள் மற்றும் மதுபானக்கடைகளின் முன்னரங்குகள் 100 சதவீதம் முற்றாக மீண்டும் திறக்கப்பட்டு, உட்புற இருக்கைகள் 50 சதவீதம் அனுமதிக்கப்பட்டன. அருங்காட்சியகங்கள், சினிமாக்கள் மற்றும் திரையரங்குகளில் அதிகமான மக்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். விளையாட்டு நடவடிக்கைகள் உள்ளரங்குகளிலும் வெளியரங்குகளிலும் சில கட்டுப்பாடுகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன; பார்வையாளர்கள் மீண்டும் விளையாட்டு அரங்கங்களுக்கு அழைக்கப்படுகிறார்கள். 1,000 க்கும் மேற்பட்ட நபர்களின் நிகழ்வுகளுக்கு ஒரு கொரோனா வைரஸ் அனுமதிச்சீட்டு பயன்படுத்தப்படும். இது சுற்றுலாப் பயணிகளின் உள்வரவுக்கும் உதவும்.

தொழிலாளர் மந்திரி எலிசபெத் போர்ன் லு பாரிசியன் பத்திரிகைக்கு “100 சதவிகிதம் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான தடைகள் முடிவுக்கு வரும்” என்று கூறினார். தனியார் துறையில், தொழிற்சங்கங்களால் ஆதரிக்கப்படும் முதலாளிகள் இப்போது அவர்கள் விரும்புவதை அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்ய முடியும்: “நாங்கள் முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் பொறுப்பை அவர்களிடம் கொடுக்கின்றோம், இதனால் அவர்கள் வாரத்திற்கு பொருத்தமான நாட்களைத் தீர்மானிக்க முடியும்”. 100 சதவீதம் வேலைத்தலங்களில் இருந்து பணிபுரிவது மட்டுமே இந்த “நெறிமுறையை மீறும்.” பொது சேவையில், “வீட்டிலிருந்து வேலைசெய்யும் நாட்களின் எண்ணிக்கை மூன்றாகக் குறைக்கப்படும்.”

2021, மே 21, வெள்ளிக்கிழமை, மத்திய பிரான்சின் நெவர்ஸில், கோவிட்-19 தொற்றுநோய்களின் போது மூடப்பட்ட பின்னர் கலாச்சார நடவடிக்கைகள் மீண்டும் திறக்கப்பட்டதைக் குறிக்கும் பயணத்தின் போது பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் கடைக்காரர்களுடன் ஒரு பானத்தைப் பகிர்ந்து கொள்கிறார். (AP Photo / Thibault Camus, Pool)

2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் பள்ளிகளில் வைரஸ் பரவ வேண்டுமென்றே அனுமதித்ததால், கல்வி அமைச்சர் ஜோன்-மிஷேல் புளோங்கேர் விடுமுறை இடைவேளையின் பின்னர் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது வைரஸ் பரவுவதை குறைப்பதற்கான வரையறுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒருதொற்று கண்டறியப்படும்போது வகுப்புகள் மூடப்பட வேண்டும், பல வகுப்புகளில் கண்டறியப்படும்போது பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி 5,000 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன, கடந்த ஏழு நாட்களில் சுமார் 1,000 ஆசிரியர்கள் மற்றும் 11,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீபத்திய வாரங்களில் மீதமுள்ள சனத்தொகையில் தொற்றுக்களில் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க கீழ்நோக்கிய போக்கு காணப்படவில்லை.

பொதுமக்களைப் பொறுத்தவரை, ஜூன் 6 அன்று தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை 7,000 க்கும் குறைந்துள்ளது. மனித உயிர்களைப் பொறுத்தவரை தொற்றுநோயால் ஏற்பட்ட பேரழிவு ஜூன் 3 இல் ஏழு நாள் சராசரி தினசரி இறப்புகளின் எண்ணிக்கை 100 க்கும் குறைந்தது என்பதன் மூலம் விளக்கப்படுகிறது. 2020 அக்டோபர் 18 முதல் ஒரு நாளைக்கு சராசரியாக 100 க்கும் குறைவான மக்கள் இறப்பது இதுவே முதல் முறை. ஜூன் 7 அன்று பிரான்ஸ் 110,000 இறப்புகளின் மைல்கல்லை தாண்டியது.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து வைரஸின் புழக்கத்தில் ஏற்பட்ட அதிகரிப்பை மதிப்பாய்வு செய்தால், வைரஸின் அலைகளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போக்கை அடையாளம் காண முடியும். ஆனால் தினசரி இறப்புகளைப் பொறுத்தவரையில், மக்ரோன் பின்பற்றிய கொள்கை, விஞ்ஞான ஆலோசனையைப் புறக்கணித்தல், வைரஸ் பரவுவதற்கு அனுமதிப்பது, பூட்டுதல்களை மிகவும் தாமதமாகவும் ஓரளவுக்கு பகுதியளவில் மற்றும் பூட்டுதல்களை மிக விரைவாக முடிவுக்குக் கொண்டுவருதல் ஆகியவற்றின் விளைவாக, செப்டம்பர் 2020 தொடங்கிய இறப்புகளின் ஒரு தனி அலை இன்று வரை தொடர்கிறது.

புகழ்பெற்ற மருத்துவ இதழ் BMJ (முன்னர் பிரிட்டிஷ் மெடிக்கல் ஜேர்னல்) தொற்றுநோய்க்கு இங்கிலாந்து அரசாங்கத்தின் பிரதிபலிப்பை “சமூக படுகொலை” என்று விவரிக்கப்படலாம் என பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு முறை எழுதியது. இத்தகைய ஒரு விளக்கம் பிரெஞ்சு அரசாங்கத்தின் கொள்கைக்கும் மிகவும் பொருத்தமானது.

ஜூன் 4 நிலவரப்படி, 2,571 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர், 14,801 கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் உள்ளனர். தீவிர சிகிச்சை படுக்கைகள் ஏறக்குறைய 50 சதவீதமாக நிரம்பியுள்ளது. இதில் பிராந்தியங்களுக்கு இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன. பாரிஸைச் சுற்றியுள்ள இல்-டு-பிரான்ஸ் (Île-de-France) பிராந்தியத்திலும் வடக்கிலும் மருத்துவமனையில் தங்கியிருக்கும் விகிதம் கணிசமாக அதிகமாக உள்ளது.

13.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அல்லது மக்கள்தொகையில் 20 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளார்கள். கிட்டத்தட்ட 28 மில்லியனுக்கும் அதிகமானோர் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளார்கள். மே 31 அன்று அனைத்து பெரியவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவது விரிவுபடுத்தப்பட்டது. ஜூன் 15 முதல், 12 தொடக்கம் 18 வயது வரையிலான இளம் பருவத்தினரும் தடுப்பூசி பெற்றுக்கொள்ளலாம்.

தடுப்பூசிகளின் "எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான" விருப்பம் வயதுமுதிர்ந்த மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை பாதுகாப்பதற்கு முன்னுரிமை வழங்குவதற்கான அவசியத்துடன் முரண்படத் தொடங்குகிறது. ஆகவே, முழுமையான மற்றும் பகுதி தடுப்பூசிகளைக் கணக்கிடும்போது, ஒரு 75 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 82 சதவீத தடுப்பூசிகளையும், 65-74 வயதுடையவர்களில் 81.5 சதவீதத்தினரையும் கொண்ட உயர்மட்டம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. பல வயதானவர்களுக்கு அவர்கள் விரும்பினாலும் கூட, தடுப்பூசி பெறுவதில் சிரமம் உள்ளது.

இதேபோல், மே 1 முதல் தடுப்பூசி பெறுவதற்கு உரிமையுள்ள வேறு நோய்களின் ஆபத்துக்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. குறிப்பாக கொரோனா வைரஸால் பாதிக்கப்படக்கூடிய அதிக எடை கொண்டவர்கள், தடுப்பூசி போடப்பட்டவர்கள் 50 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளனர். , , .

0.75 ஆகக் குறைந்துவிட்டிருந்த வைரஸ் இனப்பெருக்கம் விகிதம் (R0), மே நடுப்பகுதியில் இருந்து 0.8 முதல் 0.9 வரை உயர்ந்துள்ளது. இதன் பொருள் வைரஸ் மீண்டும் அதிகரிக்கின்றது, ஆனால் முன்பை விட மெதுவாக. 1 க்கும் மேற்பட்ட விகிதம் அதிவேக விரிவாக்கத்தைக் குறிக்கிறது. மேலும், நிலைமை பிராந்தியங்களுக்கும், பிரதேசத்திற்கும் இடையில் வேறுபடுகிறது.

அரசாங்க செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால் ஜூன் 2 ம் தேதி “எச்சரிக்கை அறிகுறிகள்” இருப்பதாக அறிவித்தார், குறிப்பாக நியூ அக்கிடன் மற்றும் ஒக்ஸிடேனியாவில், இனப்பெருக்கம் விகிதம் “1 க்கு மேல் உயர்ந்துள்ளது. அதாவது தொற்றுநோய் மீண்டும் ஆதிக்கம் அடைகிறது.” இந்த எழுச்சி பிரனீஸ்-அட்லாண்டிக்ஸில் அதிகமாக காணப்பட்டது. ஆனால் சாரண்ட்-மரிடிம், லுவார்-எ-கரோன், சாரெண்ட், லேண்ட் மற்றும் ஜிரோண்ட் ஆகியவற்றிலும் காணப்பட்டது.

கூடுதலாக, ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் ஆரம்பத்தில் அடையாளம் காணப்பட்ட டெல்டா மாறுபாடு, இங்கிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது. இது லேண்டஸ் உட்பட பல பிரதேசங்களில் பரவியுள்ளது. அங்கு 'சுமார் 50 நோயாளிகள்' உள்ளனர் என்று பிராந்திய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரான்சில் மூலங்கள் அறியப்படாத சுமார் 100 தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சனிக்கிழமையன்று, கிராண்ட் எஸ்ட் பிராந்தியத்தின் பிராந்திய சுகாதார நிறுவனம், ஸ்ட்ராஸ்பேர்க்கில் அமைந்துள்ள Superior Academy of the Arts ரின்னில் “டெல்டாவின் திரள்வு (இந்திய வகை என்றழைக்கப்படுவது) மாறுபாட்டைக் கண்டுபிடித்ததாக அறிவித்தது. நான்கு தொற்றுகள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளன, 43 பேர்களில் தொற்றுக்கள் அங்கே உள்ளன.

இதனால், வைரஸ் மாறுபாடு ஏற்கனவே கண்டறியப்படாமல் கணிசமாக புழக்கத்தில் உள்ளது. அதிகாரிகள் மற்றும் பெரும்பாலான ஊடகங்கள் டெல்டா மாறுபாட்டைப் பற்றி பெரிதுபடுத்தாமல் இருக்கின்றன, அல்லது இந்த விஷயத்தை முழுவதுமாக தவிர்ப்பது, மற்றும் நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாக மக்களை நம்ப வைக்கிறது.

உண்மையான நிலைமை இங்கிலாந்தின் உள்ள நிலமைகளால் விளக்கப்படுகிறது. பிரிட்டிஷ் மாறுபாட்டை (ஆல்பா) விட இந்திய மாறுபாட்டின் தொற்றுக்கள் ஏற்கனவே உள்ளன. இது ஏற்கனவே மாற்றப்பட்ட கொரோனா வைரஸின் திரிபை விட தொற்றுகூடியதாக அறியப்படுகிறது. டெல்டா மாறுபாட்டிலிருந்து ஏற்படும் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகள் ஆரம்பத்திலிருந்து சிறிய எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகளிலிருந்து படிப்படியாக அதிகரித்து வருகின்றன.

லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணரான நீல் ஃபெர்குசனின் கூற்றுப்படி, புதிய மாறுபாடு 30 முதல் 100 சதவிகிதம் வரையில் உள்ளது. இது ஏறக்குறைய 60 சதவிகிதமாகும். இது ஆல்பா மாறுபாட்டை விட அதிகமாக பரவக்கூடியது.

Public Health England நடத்திய ஆய்வின்படி, இந்திய மாறுபாடு வைரஸ் உள்ளவர்களை மருத்துவமனையில் அதிகரிக்க வழிவகுக்கும். வைரஸின் கிட்டத்தட்ட 38,000 நோயுள்ளவர்களை ஆராய்ந்த பின்னர், டெல்டா மாறுபாடு ஆல்பா மாறுபாட்டை விட மருத்துவமனையில் அனுமதிக்க 2.61 சதவீதம் அதிக ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

இறுதியாக, டெல்டா மாறுபாடு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தளவில் மீறி செல்வதற்கான திறனை கொண்ட வகைகளில் ஒன்றாகும். எனவே தடுப்பூசி முற்றாக பெற்றுக்கொள்ளாத நபர்கள் பாதிக்கப்பட்டு வைரஸ் பரவுவதில் பங்கேற்கலாம்.

மீண்டும் திறக்கும் பிரச்சாரத்தின் துரிதப்படுத்தலால் 20 சதவிகிதத்தினர் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர். ஆதிக்கம் செலுத்தும் ஆல்பா திரிபு மற்றும் புதிய டெல்டா மீதமுள்ளவர்களுக்கு திரிபு பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறிப்பிடத்தக்கவை.

கடந்த நத்தார் பண்டிகை வேளையில் ஆல்பா திரிபு வரும்போது செய்ததைபோலவே, மக்ரோனும் அவரது அரசாங்கமும் விஞ்ஞானத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, கோடைகாலத்தில் நான்காவது அலை தொற்று ஆபத்தை விளைவிக்கும் ஒரு சுகாதாரக் கொள்கையை பின்பற்றுகிறார்கள்.

Loading