உக்ரேனில் அமெரிக்கா போரை விரும்புகிறது என ஐ. நா. சபை விவாதத்தில் ரஷ்யா குற்றம்சாட்டுகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கிழக்கு ஐரோப்பாவில் பெருகிவரும் நெருக்கடி குறித்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு குழுவில் நடந்த விவாதத்தில், அமெரிக்கா 'பதட்டங்களைத் தூண்டி' மற்றும் உக்ரேனில் ரஷ்ய படையெடுப்பை தூண்ட முயற்சிப்பதாக ரஷ்ய தூதர் வசிலி நெபென்சியா குற்றம் சாட்டினார்.

ரஷ்யாவின் ஐ.நா. தூதர் வசிலி நெபென்சியா(இடதுபுறம்) ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு குழுவில் வாக்கெடுப்புக்கு முன் உரையாற்றுகிறார். அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட் (வலதுபுறம்) அதை கேட்டுக்கொண்டிருக்கின்றார். ஜனவரி 31, 2022(AP Photo/Richard Drew)

'போர் அச்சுறுத்தல் பற்றிய விவாதம் ஆத்திரமூட்டும் வகையில் உள்ளது,' என்று அவர் கூறினார். அமெரிக்க தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்டினை நோக்கி அவர் தொடர்ந்து, “நீங்கள் கிட்டத்தட்ட இதற்காக இழுக்கிறீர்கள். அது நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் கூறியவற்றை உண்மையாக்க விரும்புவது போல், அது நடக்கும் வரை நீங்கள் காத்திருக்கிறீர்கள்” எனக் கூறினார்.

உள்நாட்டில் உள்ள சமூக பதட்டங்களைத் திசைதிருப்ப, உருவாக்கப்பட்ட போர் பயத்தைப் பயன்படுத்த வேண்டும் என்ற பைடென் நிர்வாகத்தின் வெளிப்படையான விருப்பத்தை நெபென்சியா குறிப்பிடுகின்றார். ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையை உந்தும் உள்நாட்டு அரசியல் நோக்கங்கள் பற்றி அவர் எதுவும் கூறவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொற்றுநோய் வெடித்ததில் இருந்து 900,000 க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் கோவிட்-19 இனால் இறந்துள்ளனர். மேலும் தொழிலாள வர்க்கத்திலிருந்து பிழிந்தெடுக்கப்படும் இலாபத்தை அதிகரிக்க பள்ளிகளையும் தொழிற்சாலைகளையும் மீளத்திறப்பதற்கான பெருநிறுவன அமெரிக்கா மற்றும் அதன் இரண்டு அரசியல் கட்சிகளின் தொடர்ச்சியான உந்துதல் மீது மக்கள் கோபம் அதிகரித்து வருகிறது.

அவர் தொடர்ந்து, உக்ரைனின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ள உடனடி போர் பற்றிய அமெரிக்க அதிகாரிகளின் அறிக்கைகளை விமர்சித்தார். 'இந்த காலகட்டம் முழுவதும் எந்த ரஷ்ய அரசியல்வாதி அல்லது பொது நபரின் உதடுகளிலிருந்தும் உக்ரேனில் திட்டமிடப்பட்ட படையெடுப்பு அச்சுறுத்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. எவ்வித அச்சுறுத்தலும் விடப்படவில்லை. இதுபோன்ற திட்டங்களை நாங்கள் திட்டவட்டமாக நிராகரித்து வருகிறோம், இப்போதும் அதைத்தான் செய்யப் போகிறோம். இதற்கு நேர்மாறாக கூறும் எவரும் உங்களை தவறாக வழிநடத்துகிறார்கள்”.

மேற்கத்திய சக்திகள் உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான மோதலை தூண்டிவிட்டதாக அவர் வாதிட்டார். அவர்கள் '2014 இரத்தக்களரியான அரசியலமைப்பிற்கு எதிரான சதியை தூண்டி ஆதரித்து தேசியவாதிகள், ரஷ்ய எதிர்ப்பாளர்கள், பாசிஸ்டுகள், நாஜிக்கள் ஆகியோரை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர். யூதர்கள், போலந்தினர், உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களை அழித்த ஹிட்லரின் பக்கம் போராடிய நபர்களை அவர்கள் வீரர்களாக ஆக்குகிறார்கள்.

“எங்கள் அமெரிக்க சகாக்கள் இன்று எங்களைக் இங்கு கூட்டியுள்ளதால், ரஷ்யா உக்ரேனை தாக்க உத்தேசித்துள்ளது என்ற இந்தக் கட்டுக்கதையை தவிர வேறு எந்த ஆதாரத்தையும் காட்டட்டும் என அவர் அமெரிக்க தூதுக்குழுவிற்கு சவால் விடுத்தார். ஈராக்கில் பேரழிவுக்குரிய ஆயுதங்கள் இருப்பதற்கான ஆதாரம் என்று அழைக்கப்படும் அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கொண்ட குப்பியை இந்த அறையில் இருந்த முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் கொலின் பௌல் சுற்றி காட்டியதை நாங்கள் நினைவுகூருகிறோம். அவர்கள் எந்த ஆயுதத்தையும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால் அந்த நாட்டில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்”.

தூதர் நெபென்சியா அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் பாசாங்குத்தனத்தை குற்றஞ்சாட்டினார். அவர்கள் ரஷ்யாவின் சொந்த மண்ணில் அதனது துருப்புக்களின் நகர்வை விமர்சிக்கையில், அதே நேரத்தில் உலகம் முழுவதும் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் குறித்து மௌனமாக இருக்கின்றார்கள் என்றார். 'அமெரிக்கர்கள் தங்கள் எல்லைக்கு வெளியே துருப்புக்கள் வைத்திருப்பதற்காக சாதனை படைத்துள்ளனர்,' என்று அவர் கிண்டலாக கூறினார். 'அமெரிக்க துருப்புக்கள், ஆலோசகர்கள் மற்றும் அணு ஆயுதங்கள் உட்பட ஆயுதங்கள் அடிக்கடி ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் அவர்கள் சமாதானத்தை கொண்டு வருவதாக கூறிக்கொண்ட இடங்களில் அமெரிக்க இராணுவ மையங்கள் நூறாயிரக்கணக்கான குடிமக்களை கொன்றுள்ளன என்ற உண்மையைப் பற்றி நாங்கள் பேசுவதுகூட இல்லை' என்றார்.

பாதுகாப்பு குழுவின் அங்கீகாரம் இல்லாமல் மற்ற நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா படையை பயன்படுத்துவதையும், உலகெங்கிலும் அமெரிக்க இராணுவப் படைகளை பரவலாக நிலைநிறுத்துவதையும் அவர் மேற்கோள் காட்டினார்: “உலகத்தில் 80க்கும் மேற்பட்ட நாடுகளில் 750 அமெரிக்கத் தளங்கள் உள்ளன என்பதற்கு இணையத்தில் மறுக்க முடியாத சான்றுகள் உள்ளன. வெளிநாட்டில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க துருப்புக்களின் மொத்த எண்ணிக்கை 175,000 க்கு அண்மித்ததாக உள்ளது.

அமெரிக்கத் தூதர் லிண்டா தோமஸ்-கிரீன்ஃபீல்ட், பாதுகாப்பு குழுவில் ரஷ்ய தூதர் 'தவறான ஒப்பீட்டில்' ஈடுபட்டுள்ளார் என்று வாதிட்டபோது அவர் தற்காப்பான நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார். 'ரஷ்யாவைப் பலவீனப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை' என்று அவர் கூறினார். இருப்பினும் அத்தகைய திட்டங்கள் அமெரிக்க ஊடகங்களிலும் அமெரிக்க காங்கிரஸிலும் வெளிப்படையாக விவாதிக்கப்படுகின்றன.

இது ரஷ்ய துருப்புக்களின் நடமாட்டம் மற்றும் உக்ரேன் நேட்டோவில் சேராது மற்றும் வெளிநாட்டு துருப்புக்களை வைத்திருக்காது என்ற உறுதிமொழி போன்ற பாதுகாப்பு உத்தரவாதங்களுக்கான ரஷ்யாவின் கோரிக்கைகளே ஆத்திரமூட்டும் வகையில் இருந்த தவிர போருக்கான வெறித்தனமான அமெரிக்க பிரச்சாரம் அல்ல என்று தோமஸ்-கிரீன்ஃபீல்ட் கூறினார்.

ஈராக் ஆக்கிரமிப்பு அல்லது அதன் பாரிய சர்வதேச இராணுவ ஈடுபடுத்தலில் அமெரிக்காவின் பொய்கள் பற்றிய நெபென்சியாவின் ஒப்பீடுகளை மறுதலிக்க தோமஸ்-கிரீன்ஃபீல்ட் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏனெனில் உண்மைகள் அழிக்கமுடியாதவையும் மற்றும் மற்றொரு அரசாங்கத்தை தூக்கி எறியவோ அல்லது சர்வதேச எல்லைகள் மீண்டும் வரையவோ எந்த நாட்டிற்கும் உரிமை இல்லை என்ற அமெரிக்க அறிவிப்புகளை முட்டாள்தனமாக்குகிறது.

சீனாவின் தூதர் உக்ரேன் மீதான பாதுகாப்பு குழுவின் அமர்விற்கு தனது அரசாங்கத்தின் எதிர்ப்பை மீண்டும் தெரிவித்து மற்றும் ரஷ்ய துருப்பு நடமாட்டங்கள் 'சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது' என்ற அமெரிக்காவின் கூற்றை நிராகரித்தார். இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் எதுவும் இல்லை என்று ரஷ்ய உறுதிமொழிகள் மற்றும் உக்ரேனின் வலியுறுத்தல்களின் அடிப்படையில், 'இப்போது நமக்கு அவசரமாகத் தேவைப்படுவது அமைதியான இராஜதந்திரமே தவிர ஒலிபெருக்கி இராஜதந்திரம் அல்ல' என்றார்.

இரண்டு மணி நேர விவாதத்தில் பாதுகாப்பு குழுவின் அனைத்து 15 உறுப்பினர்களும் பேசியபோது, உக்ரேனுக்கு எதிரான உடனடி ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றிய அமெரிக்க குற்றச்சாட்டுகளை ஒரு சிலரே எதிரொலித்தனர். பேசியவர்களில் பெரும்பாலோர் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்துடன் மற்றும் நோர்மண்டி திட்டம் என்று அழைக்கப்படுவதை ஆதரித்தனர். இதில் பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் உக்ரேன் தலைவர்கள் 2014 ஆம் ஆண்டு கியேவில் வலதுசாரி ஆட்சிக்கவிழ்ப்புடன் தொடங்கிய மோதல் பற்றி விவாதித்து வருகின்றனர்.

உக்ரேன் மீதான பாதுகாப்பு குழுவின் விவாதத்தை ஜனவரி 31 அன்று நடத்த அமெரிக்காவும் பிரிட்டனும் அழுத்தம் கொடுத்தன. ஏனெனில் ரஷ்யா பிப்ரவரி மாதம் குழுவின் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. மேலும் மின்ஸ்க் திட்டம் மூலம் நடந்துகொண்டிருக்கும் பேச்சுவார்த்தைகளை மறுஆய்வு செய்ய ஏற்கனவே திட்டமிட்டுள்ளது. இது கிழக்கு உக்ரேனில் ரஷ்ய சார்பு பிரிவினைவாதிகளுக்கும் உக்ரேனிய அரசாங்கப் படைகளுக்கும் இடையே சுமார் எட்டு ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போர் நிறுத்தம் பற்றியதாகும்.

சபை விவாதத்தை திட்டமிடுவதற்கு வாக்களித்தது. இது ஐந்து நிரந்தர உறுப்பினர்களின் வீட்டோவிற்கு உட்பட்டது அல்ல. வாக்கெடுப்பில் 10-2 என வாக்களிக்கப்பட்டது. மூன்று உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. சீனாவும் ரஷ்யாவும் விவாதத்தை நடத்துவதை எதிர்த்தன. கென்யா, இந்தியா மற்றும் காபோன் ஆகியவை வாக்களிக்கவில்லை. தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு ஒன்பது வாக்குகள் தேவைப்பட்டன.

உக்ரேன், பெலாருஸ், போலந்து மற்றும் லித்துவேனியா ஆகிய நான்கு நாடுகள் பாதுகாப்பு குழுவின் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்ற அழைக்கப்பட்டபோது, தொடர்ச்சியான பதட்டங்கள் வெளிப்பட்டன. மூவர் வெறித்தனமான ரஷ்ய-எதிர்ப்பு உரைகளை நிகழ்த்தினர். அதே நேரத்தில் பெலாருஸ் மாஸ்கோவுடன் இணைந்துள்ளது. உக்ரேனிய தூதர் செர்ஜி கிஸ்லிட்சியா பேசத் தொடங்கியவுடன் நெபென்சியா சபை அறையை விட்டு வெளியேறினார்.

அமெரிக்க பாசாங்குத்தனம் மற்றும் அதன் ஐ.நா. தூதரால் வழங்கப்பட்ட பொய்கள் என்ற வெடிக்கும் குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம் அமெரிக்காவிற்கு எதிராக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியை நிறுத்தி ஏகாதிபத்திய சக்திகளுடன் ஒருவித அனுசரணையை நாடுவதைத் தவிர வேறு எந்த கொள்கையும் கொண்டிருக்கவில்லை. சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் பின்னர் அரசு வளங்களை பாரியளவில் திருடுவதன் மூலம் தங்கள் சொந்த செல்வத்தை கட்டியெழுப்பிய முற்றிலும் ஊழல் நிறைந்த ரஷ்ய பில்லியனர் தன்னலக்குழுக்களின் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தும் புட்டினால் அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ அல்லது உக்ரேன் மற்றும் ரஷ்யாவிற்குள்ளோ போர் எதிர்ப்பு உணர்வுக்கு மக்களிடம் வேண்டுகோள் விடுக்க முடியாது.

அமெரிக்க-ரஷ்யா பேச்சுவார்த்தைகள் செவ்வாயன்று தொடரும். வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளிங்கென் மற்றும் ரஷ்ய வெளியுறவு மந்திரி சேர்ஜி லாவ்ரோவ் இடையே தொலைபேசி கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. உக்ரேனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே நோர்மண்டி கட்டமைப்பிலும், பின்கதவு விவாதங்களிலும் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோ இராணுவ பயிற்சிகள் துரித வேகத்தில் தொடர்கின்றன. இதில் அமெரிக்க விமானப்படை வடக்கு பின்லாந்தில் மேலாக எரிபொருள் நிரப்பும் நடைமுறையும், கருங்கடலில் ரஷ்ய கடற்படை பயிற்சிகளும் அடங்கும்.

உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் அறிக்கைகள் தளத்தில் போர் வெறி பிரச்சாரத்தை அது அவரது நாட்டின் பொருளாதாரத்தை சேதப்படுத்துகிறது மற்றும் அது பீதியை ஏற்படுத்துகிறது என்று விமர்சித்ததை அடுத்து அவரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என ரஷ்யாவிலும் பிற இடங்களிலும் பத்திரிகை செய்திகள் உள்ளன. இதற்கு அமெரிக்க அரசாங்கம் அல்லது அஷோவ் படைப்பிரிவு போன்ற பொலிஸ் மற்றும் இராணுவப் படைகளுக்குள் இருக்கும் பாசிசக் கூறுகள் காரணம் என்று கூறப்பட்டது.

Loading