இலங்கைத் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு குழி பறிக்கின்றன

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்க காணலாம்.

இலங்கையில் உள்ள தொழிற்சங்க கூட்டணிகளான தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையமும் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் கூட்டணியும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் போராட்டத்துக்கு அழைப்புவிடுத்திருந்தன. “திருடர்களைப் பாதுகாக்கும் அரசாங்கம் வேண்டாம்,” “சட்டவிரோத கைதுகளை நிறுத்து,” “மக்களின் கோரிக்கைகளுக்கு கீழ்படி,” கோடபாய [ராஜபக்ஷ]- ரணில் [விக்கிரமசிங்க] சதியை தோற்கடி!” போன்ற கோசங்களை எழுப்பினார்கள்.

கொடகமவுக்கு அருகில் உள்ள கொழும்பு-அவிசாவெல வீதிக்கு உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் போராட்டக்காரர்கள் எரிபொருளைக் கோரகின்றனர் [Photo: WSWS media]

அத்தியவசிப் பொருட்களின் என்றுமில்லாத விலை உயர்வு மற்றும் அவற்றின் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் இளைஞர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ந்துவரும் கோபத்தை திசைதிருப்பும் முயற்சியிலேயே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்துள்ளன. பெற்றோல், டீசல், மண்ணெண்ணை ஆகியவற்றின் கடுமையான பற்றாக்குறை சம்பந்தமாக நாடு முழுவதிலும் எரிபொருள் வழங்கும் நிலையங்களுக்கு அருகில் ஒவ்வொரு நாளும் போராட்டங்கள் வெடிக்கின்றன.

ஜனாதிபதி கோடபாய இராஜபக்ஷ மற்றும் அவரின் அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலை ஆக்கிரமித்திருக்கும் அரசாங்க-எதிர்ப்பு போராட்டகாரர்கள் மீது மே 9 அன்று நடத்தப்பட்ட குண்டர்களின் தாக்குதலை அடுத்து இந்த அரசாங்க-எதிர்ப்பு இயக்கம் தீவிரமடைந்தது. இந்த் ததாக்குதலானது இராஜபக்ஷவின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினால் (ஸ்ரீ.ல.பொ.ஜ.மு.) ஒழுங்கமைக்கப்பட்டதாகும்.

பாரிய எதிர்ப்புக்கு முகங்கொடுத்து, தனது அமைச்சரவையுடன் பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த இராஜபக்ஷ பதிவி விலகியதோடு கடந்த வாரம் அவரின் இடத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார். சந்தை சார்பு மற்றும் அமெரிக்க சார்பில் நன்கு அறியப்பட்ட முன்னாள் பிரதமரான விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தால் கட்டளையிடப்பட்டுள்ள சிக்கன திட்டத்தைச் செயல்படுத்த தலைமைதாங்குவார்.

தொழிலாளர்களின் அவசரத் தேவைகளுக்காகப் போராடுவதற்காக தொழிற்சங்கங்கள் இந்த வாரம் இந்த மட்டுப்படுத்தப்பட்ட போராட்டத்தை ஒழுங்கமைக்கவில்லை மாறாக அவற்றை கரைத்து விடுவதற்காகவே ஆகும். இந்தப் போராட்டங்கள், அரசாங்கத்தையும் புதிய பிரதமரையும் கண்டனம் செய்யும் தொழிற்சங்கத் தலைவர்களின் வாய்வீச்சுக்களில் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தன. சர்வதேச ரீதியில் ஆழமான நெருக்கடியில் மூழ்கிப் போயுள்ள, மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் மீது என்றுமில்லாத பாரிய சுமைகளை திணிக்கின்ற முதலாளித்துவ முறைமையை பற்றி எவரும் பேசவில்லை.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் மற்றும் அனைத்து நிறுவன ஊழியர்களின் சஙகத்தின் தலைவரான வசந்த சமரசிங்க, மே 9 அன்று நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பொறுப்பானவர்கள் மீது வழக்குதொடுக்குமாறு தொழிற்சங்கங்கள் தொடர்து கோரும் என போராட்டக்காரர்கள் முன் புதன் அன்று கூறினார். அவர், தொழிலாளர் வர்க்கம் முகங்கொடுக்கின்ற இன்னல்களுக்கு, அதிகாரத்தில் உள்ள திருடர்கள் மீதே பழிசுமத்தினாரே அன்றி இலாப முறைமை மீது குற்றம் சுமத்தவில்லை.

சுகாதார தொழில் வல்லுனர்கள் கூட்டமைப்பின் தலைவரான ரவி குமுதேஷ், உழைக்கும் மக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற மாயையை பரப்பினார். மக்களின் போராட்டத்தின் காராணமாகவே விக்கிரமசிங்க பதவிக்கு வந்ததாகவும் அவர் ஜனாதிபதி இராஜபக்ஷ உடன் ஒப்பந்தங்கள் செய்துகொண்டு மக்களுக்கு புற முதுகு காட்ட கூடாது எனவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், விக்கிரமசிங்கவை பிரதமராக நியமத்து ஜனாதிபதி இராஜபக்ஷ அதிகாரத்தில் நிலைத்திருக்கு முயற்சி செய்கிறார் என வியாழன் அன்று போராட்டத்தில் தெரிவித்தார். “கோட்டா-ரணில் அரசாங்கம் வீட்டுக்கு போகும் வரை நாம் இந்தப் போராட்டத்தை தொடருவோம்” என் அவர் அறிவித்தார்.

கொடகமவுக்கு அருகில் கொழும்பு-அவிசாவலை பிரதான வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள் [Photo: WSWS media]

மே 6 அன்று நடந்த ஒரு-நாள் பொது வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் அமுல்படுத்தப்பட்ட கொடூரமான அவசரகால சட்டத்தை இரத்துச் செய்யுமாறு தொழிற்சங்கங்கள் கோரவில்லை. ஏற்கனவே ஜனாதிபதி, மக்களை பயமுறுத்தவும் ஊடரங்கை அமுல்படுத்தவும் இராணுவத்தை வீதிகளுக்கு அனுப்பியுள்ளார்.

மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மே 6 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர். ஒரு ஹர்த்தாலில் கிராம மற்றும் நகர்ப்புற ஏழைகள் மற்றும் சிறு வணிகர்களும் தொழிலாளர் வர்க்கத்துக்குப் பின்னால் அணிதிரண்டனர். இது ஏப்ரல் 28 அன்று மேற்கொள்ளப்பட்ட பாரிய ஒரு-நாள் வேலை நிறுத்தத்தை அடுத்து இடம்பெற்றது.

அரசாங்க-எதிர்ப்புப் போராட்டகாரர்கள் மீது ஸ்ரீ.ல.பொ.ஜ.மு. குண்டர் கும்பல் நடத்திய தாக்குதலை அடுத்து, மே 10 அன்று இலட்ச கணக்கான தொழிலாளர்கள் கால வரையறையின்றி வேலை நிறுத்தம் செய்தனர். ஆனால் தொழிலளார்களை எவ்வகையிலும் வேலைக்குச் செல்லுவதைத் தடுத்த 24-மணிநேர ஊரடங்கு நிலைமைகளின் கீழேயே இந்த நடந்தது. மே 11 அன்று வேலை நிறுத்ததங்ளை நிறுத்திக்கொண்ட தொழிற்சங்கங்கள், அதை மட்டுப்படுத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களாக தரம்குறைத்தன.

தொழிலாளர்களின் பாரிய அணிதிரல்வானது அரசாங்கம் மற்றும் அரசியல் ஸ்தாபனத்தை மட்டுமல்லாது இந்த வேலை நிறுத்தங்களுக்கு அழைப்புவிடுத்த தொழிற்சங்கங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தாம் நெருக்கமாக பிணைந்துள்ள முதலாளித்துவ ஆட்சியை அச்சுறுத்தலில் இருந்து காக்க, தொழிலாளர் வர்க்கத்தை கட்டுப்படுத்துவதும் அதன் அணிதிரள்வைக் கலைப்பதுமே தொழிற்சங்கங்களின் பிரதிபலிப்பாக இருந்தது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற 100 நாள் ஆசியர்கள் போராட்டம் மற்றும் சுகாதார ஊழியர்களின் போராட்டம் உட்பட தொழிலாளர்களின் போராட்டங்களைக் காட்டிக்கொடுப்பதில் அனைத்துத் தொழிற்சங்கங்களும் நீண்ட சாதனையை கொண்டுள்ளன.

உழைக்கும் மக்கள் முகங்கொடுக்கும் சமூகப் பேரழிவைத் தணிப்பதற்கு மாறாக, விக்கிரமசிங்க சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகிக்கொண்டிருக்கிறார். இது துன்பங்களை மேலும் மோசமாக்கும். மே 16 அன்று நாட்டுக்கு ஆற்றிய உரையில், வரவிருக்கின்ற மதாங்கள் “எமது வாழ்வில் மிகக் கடினமான காலமாக இருப்பதோடு நாம் அனைவரும் தியாகங்களை செய்யவேண்டி இருக்கும்” என அவர் எச்சரித்தார்.

புதன் அன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக அத்தியவசியமற்ற சேவைகளில் உள்ள அனைத்துப் பொதுத்துறை ஊழியர்களையும் இரு நாட்கள் வேலைக்குச் செல்லே வேண்டாம் என பிரதமர் கேட்டுக்கொண்டார். பாடசாலைகளும் இதே காரணத்துக்காக நேற்றில் இருந்து முடப்பட்டன. வியாழன் அன்று பாராளுமன்றத்தில், ஐ.நா உணவு மற்றும் வேளாண்மை அமைப்பை மேற்கோள் காட்டிய அவர், பாரிய உணவுத் தட்டுப்பாடு மற்றும் பட்டினியை பற்றி எச்சரித்தார்.

அதே நாள் பத்திரிகையாளர் மாநாட்டில், மின்சாரம், தண்ணீர் மற்றும் எரிபொருள்களின் விலைகள் உயர்வடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிஙக்க வலியுறுத்தினார்.

அரசாங்கம் மற்றும் பெரு நிறுவனங்கள் புதிய சுமைகளை சுமத்துகின்ற நிலைமையில் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களின் வகிபாகத்தைப் பற்றி கோபத்தில் உள்ளனர். பல தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தள நிரூபர்களிடம் பேசினார்கள்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ATG நிறுவனத்தின் தொழிலாளி, சுதந்திர வர்த்தக வலயங்கள் அனைத்துக்கும் சமீபத்தில் அரசாங்கம் பாதுகாப்பு படைகளை அனுப்பியிருப்பதை கணடனம் செய்தார்.

“விக்கிரமசிங்க முன்யை நபரான மகிந்த இராஜபக்ஷவைப் போலவே உள்ளார். எரிபொருள் உட்பட பற்றாக்குறைகளை தணிப்பதில் எந்த மாற்றத்தையும் கூறுவது கடினமாகவே உள்ளது” எனத் தெரிவித்த அவர், தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் போராட்டத்துக்குப் போதுமான ஆதரவு வழங்கியதில்லை என வலியுறுத்தினார்.

கண்டி பொது மருத்துவமனையில் இருந்து தாதி ஒருவர், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு தனது சம்பளம் போதாது எனக் கூறினார். “எமது பயணச் செலவு அதிகரிக்கின்றது. சில மாதங்களுக்குள் ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவில் இருந்து 170 ரூபாவாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செவின் தாங்கமுடியாக உயர்வை காட்ட இது மட்டுமே போதுமானது,” என அவர் தெரிவித்தார்.

“எமது உரிமைகளை பாதுகாக்க எங்களிடம் வேலைத்திட்டம் இல்லையெனில்” தொழிற் சங்கங்களின் போராட்டம் பயனற்றது,” என அவர் தொடர்ந்தார். “ஹர்த்தால் மற்றும் மே 6 நடந்த வேலை நிறுத்தமும் தொழிற்சங்கங்கள் எதிர்பார்த்ததை விட மிக வெற்றிகரமாக இருந்ததால், மே 11 திட்டமிட்டிருந்த பொது வேலை நிறுத்தத்தை அவர்கள் கைவிட்டனர். இது அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்திவிட்டதாக நான் நினைக்கின்றேன்.”

சிலாபத்தில் உள்ள உப மின்சார சபையில் இருந்து ஒரு தொழிலாளி “இலங்கை முன்சார சபை நிர்வாகம் அதன் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பாகமாக அதிகமான மேலதிக நேர வேலைகளை இடை நிறுத்தியுள்ளது. எமது தேவைகளை நிறைவு செய்ய போதுமான வருமானத்தை ஈட்டுவதற்கு மேலதிக நேர வேலையை நாம் நம்பியுள்ளோம்,” என கூறினார்.

“எப்போதும் செய்வதைப் போலவே தொழிற்சங்கங்கள், அங்கத்தவர்களுடன் கலந்துரையாடாமல் சமீபத்திய வேலை நிறுத்தங்களை முடித்துக்கொண்டன. நாம் முகங்கொடுக்கின்ற உண்மையான நிலைமை பற்றி புரிந்துகொள்ள மிக தீவிரமான கலந்துறையாடல் அவசியம், ஆனால் அத்தகைய கலந்துறையாடல் அங்கே கிடையாது.”

ஆரம்ப பாடசாலை ஆசிரியை சியாமா கூறியதாவது: “உண்மையில் தொழிற்சங்கங்கள் கேட்டுக்கொண்டதால் இந்தப் போராட்டங்களில் நாங்கள் பங்குபற்றவில்லை. நான் தொழிற்சங்கத்தின் அங்கத்தவராக இருந்தது கிடையாது. இந்த நாட்டில் மக்கள் முகங்கொடுக்கின்ற துன்பங்களுக்கு முடிவுகட்டுவதற்கான போராட்டத்துக்கு எமது ஒத்துழைப்பு பங்களிப்பு செய்யும் என நாம் நினைத்ததன் காரணத்தாலேயே எங்களில் பலர் வேலை நிறுத்தத்துக்கு சென்றுள்ளனர்.”

சோசலிச சமத்துவக் கட்சி வலியுறுத்தியது போல், தொழிற்சங்கங்கள் மற்றும் அனைத்து முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் அவர்களின் அடிவருடிகளிடம் இருந்து சுயாதீனமாகி, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதே தொழிலாளர் வர்க்கத்துக்கு முக்கியமானதாகும். நாடு முழுவதிலும் உள்ள வேலைத் தளங்கள், தொழிற்சாலைகள், பெருந்தோட்டங்கள் மற்றும் தொழிலாளர்-வர்க்க அயல்புறங்களில் அத்தகைய குழுக்களைக் கட்டியெழுப்பவது அவசியமாகும்.

நடவடிக்கைக் குழக்களின் வலையமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம் இலங்கைத் தொழிலாளர்கள் அரசாங்கத்துக்கு எதிராக ஒரு ஐக்கியப்பட்ட தொழிற்துறை மற்றும் அரசியல் போராட்டத்தை ஒழுங்கமைக்கவும் தமது சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான இதே போன்ற தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற தெற்காசியா மற்றும் சர்வதேச ரீதியில் உள்ள தமது வர்க்க சகோதர சகோதரிகளை நோக்கித் திரும்பவும் முடியும்.

அத்தகைய போராட்டமானது உழைக்கும் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்ற சோசலிச கொள்கைகளை செயற்படுத்துவதற்கான தொழிலாளர் அரசாங்கத்துக்காகப் போராடுவதை அடிப்படையாகக் கொள்ளவேண்டும்.

Loading