ஜேர்மனிக்கான உக்ரேனிய தூதர் ஆண்ட்ரே மெல்னிக் நாஜி ஒத்துழைப்பாளரும் யூத-விரோதியுமான ஸ்டீபன் பண்டேராவை பாதுகாக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

இந்தக் கட்டுரை முதலில் ட்விட்டரில் வெளியிடப்பட்டது.

“Jung & Naiv” போட்காஸ்டில் கடந்த வாரம் ஜேர்மனிக்கான உக்ரேனிய தூதர் ஆண்ட்ரே மெல்னிக் ஒரு நேர்காணலில் மீண்டும் உக்ரேனிய பாசிச, யூத எதிர்ப்பு மற்றும் நாஜி ஒத்துழைப்பாளர் ஸ்டீபன் பண்டேராவை ஆதரித்தார். இதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஏனெனில் மெல்னிக் பண்டேராவின் அபிமானி எனபது நன்கு தெரிந்ததே.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

எவ்வாறாயினும், இந்த முறை மெல்னிக் வழக்கத்தை விட அதிகமாக சென்றார். அவர் பண்டேராவை 'சுதந்திரப் போராளி' என்று புகழ்ந்தது மட்டுமல்லாமல், பண்டேராவின் கட்டுப்பாட்டிலிருந்த OUN (உக்ரேனிய தேசியவாதிகளின் அமைப்பு) பிரிவுகள் பாரிய படுகொலைகளை செய்ததை மறுத்து, 'பண்டேராவின் துருப்புக்கள் நூறாயிரக்கணக்கான யூதர்களை கொன்றதற்கு எந்த ஆதாரமும் இல்லை' என்று கூறினார்.

மெல்னிக் இன் அறிக்கைகள் யூதப்படுகொலை மறுப்பாளர்களினது மட்டத்தில் உள்ளன. படுகொலைகள், யூதர்கள் மீதான பாரிய துப்பாக்கிச் சூடு மற்றும் சோவியத் ஒன்றியத்துக்கு எதிரான நாஜி அழிப்புப் போர் ஆகியவற்றில் பண்டேராவாதிகளின் ஈடுபாடு மறுக்க முடியாத வரலாற்று உண்மையாகும்.

பண்டேரா செய்த குற்றங்களைப் பற்றி பத்திரிக்கையாளர் திலோ ஜுங் (Tilo Jung) மெல்னிக்கை கேட்டபோது, உக்ரேனிய தூதர் தான் முன்னர் கூறியதைப் பாதுகாத்து, “இக்கருத்திலிருந்து நான் விலகவில்லை என்று இன்று உங்களிடம் கூறமாட்டேன். அவ்வளவுதான்' என்றார்.

நாஜி வெயர்மாஹ்ட் லிவிவ் நகரில் நுழைந்தபோது OUN விநியோகித்த ஒரு துண்டுப் பிரசுரத்தை ஜங் முன்பு மேற்கோள் காட்டினார்: 'மக்களே, நீங்கள் இதைத் தெரிந்து கொள்ள வேண்டும்: மாஸ்கோவாதிகள், போலந்துமக்ககள், ஹங்கேரியர்கள் மற்றும் யூதர்கள், இவர்கள் உங்கள் எதிரிகள். அவர்களை அழிக்கவும், அதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உங்கள் தலைமை, உங்கள் தலைவர், ஸ்டீபன் பண்டேரா” என அதில் எழுதப்பட்டிருந்தது.

மெல்னிக்கின் அறிக்கைகள் பண்டேராவையும் மற்றும் OUN இன் இனப்படுகொலை குற்றங்கள் இருந்தபோதிலும் அதனை பாதுகாக்கும் மற்றும் பண்டேராவிற்கு சிலைகளை நிறுவி மற்றும் அவரது நினைவாக தெருக்கள் மற்றும் சதுரங்களை மறுபெயரிடுகின்ற உக்ரேனிய அரசாங்கத்தை மட்டும் அம்பலப்படுத்தவில்லை.

இது ஜேர்மனியில் உள்ள ஆளும் வர்க்கத்தின் அடிப்படையான பாசிசத் தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இது சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பிற்கு 81 ஆண்டுகளுக்கு பின்னர், ரஷ்யாவிற்கு எதிரான உக்ரேனில் நேட்டோ பினாமி போரில் மீண்டும் பாரியளவில் ஆயுதமயமாக்கி முன்னணிப் பாத்திரத்தை வகிக்கிறது.

இதில் மெல்னிக் ஒரு முக்கிய நபராவார். உக்ரேனுக்கு ஜேர்மன் ஆயுத விநியோகத்திற்கு ஆதரவை பெறுவதற்காக பிரச்சாரம் செவதற்காக உரையாடல் நிகழ்ச்சிகளில் அவர் வரவேற்கப்படும் விருந்தினராக உள்ளார். பெப்ரவரி 27 அன்று அதிபர் ஷோல்ஸ் நாடாளுமன்றத்தில் பாரிய ஜேர்மன் மறுஆயுதமயமாக்கலை அறிவித்தபோது, மெல்னிக் அங்கு கௌரவ விருந்தினராக இருந்தார்.

மெல்னிக்கின் சமீபத்திய கருத்துக்கள் பற்றி ஜேர்மன் அரசாங்கம் மௌனம் சாதிப்பது வெறுமனே ஒரு ஊழல் அல்ல. இது பாசிசத்தையும் இறுதியில் ஹிட்லரையும் மறுவாழ்வு செய்வதற்கான திட்டமிட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

2014 இல், தீவிரவலதுசாரி ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஜோர்க் பாபெரோவ்ஸ்கி Der Spiegel இடம் பின்வருமாறு கூறினார்: “ஹிட்லர் மனநோயாளி அல்ல, அவர் தீயவர் அல்ல. யூதர்களை அழிப்பதைப் பற்றி தனது மேசையில் யாராவது பேசுவதை அவர் விரும்பவில்லை”. பார்பெரோவ்ஸ்கியும் அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகத்தால் மரியாதையளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்.

ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சி (SGP) மற்றும் IYSSE ஆகியவை அந்த நேரத்தில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுக் குற்றங்களை குறைத்துமதிப்பிடுவது புதிய போர்களையும் மற்றும் புதிய குற்றங்களையும் தயாரிக்க உதவுகிறது என எச்சரித்தது. இது தற்போது நிரூபணமாகியுள்ளது.

இராணுவவாதம், பாசிசம் மற்றும் போர் ஆகியவற்றின் மீள்வருகையிலிருந்து அவசியமான முடிவுகளை எடுக்கவும், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்திவாய்ந்த சோசலிச போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தில் இணையவும் இதுவே சரியான நேரமாகும்.

Loading