சீனாவுடன் எல்லை மோதலில் இந்தியாவுக்கு நிகழ்நேர ராணுவ உளவுத்தகவலை அமெரிக்கா வழங்கியுள்ளது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

சீனாவுடன் போருக்கு தயார் செய்வதில் அமெரிக்க-இந்திய ஒத்துழைப்பு ஒரு புதிய கட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், பென்டகன் இந்தியாவிற்கு நிகழ்நேர இராணுவ உளவுத்தகவலை வழங்கியுள்ளது. இது டிசம்பர் 2022 எல்லை மோதலில் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவப் படைகளை (PLA) முறியடிக்க உதவியது என்று US News & World அறிக்கை கூறுகிறது. 

கடந்த டிசம்பர். 9 அன்று, நூற்றுக்கணக்கான இந்திய மற்றும் சீன துருப்புக்கள் உண்மையான கட்டுப்பாட்டு எல்லையில் (Line of Actual Control-LAC), மோதிக்கொண்டன. உலகின் இரண்டு அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பிரிக்கும் 3,400 கிமீ கொண்ட இந்த எல்லை பெருமளவில் வரையறுக்கப்படாமல் இருக்கிறது. அங்கே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், இந்த மோதல் பல மணி நேரம் நீடித்ததாகவும், இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் தடியடி மற்றும் பிரம்புகளால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

அதன் பிறகு விரைவில், வடகிழக்கு இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் ட்வாங் பகுதியில் சீன ஊடுருவலை முறியடித்ததாக புது தில்லி பெருமையடித்துக் கொண்டது. இதற்கிடையில், இந்திய துருப்புக்கள் LAC இன் பக்கம் உள்ள பகுதியை மறுபரிசீலனை செய்வதிலிருந்து PLA ஐ தடுப்பதாக பெய்ஜிங் குற்றம் சாட்டியது. 

பிப். 10, 2021 புதன்கிழமையன்று, இந்தியா-சீனா எல்லையில் லடாக்கில் உள்ள பாங்காங் த்சோ ஏரிக்கரை பகுதியில் உள்ள டாங்கிகள். [AP Photo/India Army via AP]

மார்ச் 20 அமெரிக்க செய்தி அறிக்கையின்படி, 'நிகழ்நேரத்தில்' வழங்கப்பட்ட 'செயல்படக்கூடிய' அமெரிக்க செயற்கைக்கோள் உளவுத்துறை மூலம் வரவிருக்கும் PLA ஊடுருவல் குறித்து முன்கூட்டியே இந்தியப் படைகள் எச்சரிக்கப்பட்டிருந்தன. இந்த உளவுத்தகவல்கள் சீன நிலைகள், நகர்வுகள் மற்றும் படை பலம் பற்றி மிகவும் விரிவானதாகக் கூறுகிறது, மேலும் அமெரிக்கா முன்னர் இந்திய இராணுவத்துடன் பகிர்ந்து கொண்டதை விட வேகமாக தகவல்களை வழங்கியது என்று கூறப்படுகிறது.

இந்திய துருப்புக்கள் இத்தகவல்களுக்கு 'காத்திருந்தன' என்று அமெரிக்க அரசாங்க வட்டாரம் US News இடம் தெரிவித்தது. 'அமெரிக்கா, இந்தியாவிற்கு எல்லாவற்றையும் முழுமையாகத் தயாராகக் கொடுத்ததுதான் அதற்குக் காரணம் ஆகும். இரண்டு ராணுவங்களும் இப்போது எப்படி ஒத்துழைத்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதற்கான ஒரு சோதனை நிகழ்வை இது காட்டுகிறது' என்று அது குறிப்பிட்டது.

டிசம்பர் 9 இமாலய எல்லை மோதல் குறித்த இரகசிய அமெரிக்க உளவுத்தகவல் மதிப்பாய்வு பற்றி நன்கு அறிந்த பல அரசாங்க ஆதாரங்கள் இந்தக் கணிப்பை உறுதிப்படுத்தியதாகவும், இந்திய-அமெரிக்க இராணுவ ஒத்துழைப்பில் இது ஒரு புதிய கட்டத்தைக் குறிப்பதாகவும் US News கூறியது. 'இது நிச்சயமாக சீனர்களை அதிர்ச்சியடையச் செய்யும், ஏனெனில் அவர்கள் இதற்கு முன்பு இதை அனுபவித்திருக்க மாட்டார்கள்,' என்று ஒரு உயர்மட்ட ஆதாரம் அமெரிக்க செய்தியிடம் தெரிவித்தது. 'இந்த தடவை அவர்களுக்கு  முன்பு கிடைத்ததை போன்று சாதகமாக இருக்கவில்லை.'

2020 இலையுதிர்காலத்தில் புது தில்லியும் வாஷிங்டனும் கையெழுத்திட்ட அடிப்படை பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் (BECA) கீழ் அமெரிக்காவிற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே 'நிகழ்நேர' உளவுத்தகவல் பகிர்வுக்கான கட்டமைப்பு நிறுவப்பட்டது. எனவே, இந்த ஒப்பந்தம் இந்தியாவின் சொந்த உளவுத்தகவல் மற்றும் இராணுவ நடவடிக்கைகளின் பாதுகாப்பை சமரசம் செய்யக்கூடும் என்று அஞ்சிய  இந்தியாவின் இராணுவ ஸ்தாபன பிரிவுகளின் ஆட்சேபனைகளுக்கு மேலாக இதை செய்யும்படி வாஷிங்டன் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது.

BECA ஆனது நிகழ்நேர புவிசார் நுண்ணறிவை மாற்றுவதற்கும், உயர்நிலை கண்காணிப்பு மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மற்றும் அவற்றைப் பயன்படுத்தும் ஆயுதங்களை வழங்குவதற்கும் உதவுகிறது. இதை இந்தியா ஏற்றுக்கொண்டது என்பது, வெளிநாட்டு ராணுவங்களுடனான கூட்டு நடவடிக்கைகளுக்கான இயங்குநிலையை வளர்ப்பதில் பென்டகன் 'அடிப்படையானது' என்று கருதும் மூன்று ஒப்பந்தங்களிலும் புது தில்லி கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் தேவையான பொருட்களை வழங்குவதற்கு மற்றும் பழுதுபார்ப்பதற்கு  இந்திய துறைமுகங்கள் மற்றும் ராணுவ தளங்களை பயன்படுத்துவது மற்றும்  தகவல் தொடர்பு மற்றும் பிற இணக்கத்தன்மை மற்றும் உளவுத்தகவல் பகிர்வு ஆகியவற்றை அணுகவும் பயன்படுத்தவும் வாய்ப்பளிக்கிறது.

மார்ச் 20 அமெரிக்க செய்திகள் மற்றும் உலக அறிக்கைக் கட்டுரையை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்த மறுத்துவிட்டது, இது டிசம்பர் 9 நிகழ்வுகள் BECA இன் கீழ் வழங்கப்பட்ட புவிசார் நுண்ணறிவின் நிகழ்நேரப் பகிர்வு இப்போது செயல்பாட்டில் உள்ளது என்பதற்கான முதல் உறுதிப்படுத்தல் என்று வலியுறுத்தியது. இருப்பினும், மூலோபாய தகவல் தொடர்புக்கான தேசிய பாதுகாப்பு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி அதை மறுக்கவில்லை. 'அதை என்னால் உறுதிப்படுத்த முடியாது' என்று அவர் வெறுமனே கூறினார்.

இந்தக் 'கசிவு' என்பது இந்திய-அமெரிக்க இராணுவ-மூலோபாயக் கூட்டணி புது தில்லிக்கு, எல்லைத் தகராறு மற்றும் சீனாவுடன் இந்தியாவின் மூலோபாய மோதலில் பரந்தளவில் உறுதியான பலன்களை வழங்குகிறது என்பதை நிரூபிப்பதை தெளிவாக நோக்கமாகக் கொண்டது மற்றும் இந்தியாவின் பெருநிறுவன ஊடகங்களால் விரைவாக அவ்வாறாக ஊக்குவிக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது.

சீனாவிற்கு எதிராக எப்போதும் அதிகரித்து வரும் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ-மூலோபாய தாக்குதலின் ஒரு பகுதியாக, வாஷிங்டன் -முதலில் குடியரசுக் கட்சியின் சர்வாதிகாரியாக இருக்கும் ட்ரம்ப்பின் கீழ், இப்போது ஜனநாயகக் கட்சி ஜோ பைடனின் கீழ்– இந்திய சீனா எல்லை தகராறில் மிகவும் வெளிப்படையான மற்றும் ஆத்திரமூட்டும் பாத்திரத்தை வகிக்கிறது. 

மே 2020 இல் சர்ச்சை வெடித்தபோது, அமெரிக்கா புது டெல்லியை ஒரு கடினமான நிலைப்பாட்டை எடுக்கும்படியும்  அதை ஒரு பெரிய சர்வதேச பிரச்சினையாக மாற்றும்படியும் ஊக்குவித்தது. ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள லடாக் மற்றும் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள அக்சாய் சின் ஆகியவற்றைக் கடக்கும் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் குறைந்தது 20 இந்திய துருப்புக்கள் மற்றும் நான்கு PLA  படையினர் கொல்லப்பட்டனர். மேலும் 1962 இல் அவர்கள் ஒரு குறுகிய எல்லைப் போரை நடத்தியதற்கு பிறகு எந்த சமயத்திலும் இல்லாத வகையில்  இரண்டு அணு ஆயுத நாடுகளையும் முழு அளவிலான போருக்கு  நெருக்கமாக கொண்டு வந்தது. 

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஒவ்வொரு தரப்பிலும் 50,000 துருப்புக்கள் அத்துடன் பீரங்கி, டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் ஆகியவையும் LAC எல்லையில் முன்னணியில் நிறுத்தப்பட்டுள்ளன. இரு தரப்பும் துருப்புக்கள் மற்றும் பொருட்களை விரைவாக நகர்த்துவதற்கு அபாரமான இராணுவ உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்பும் செயல்பாடுகளிலும், புதிய அரண்களை அமைப்பதிலும், விமான ஓடுபாதைகள் மற்றும் சாலை மற்றும் இரயில் இணைப்புகள் அமைப்பதிலும் கூட இறங்கியுள்ளன.

வாஷிங்டன், 2017ல் இந்தியா மற்றும் சீனத் துருப்புக்கள் 10 வாரங்களாக சீனா மற்றும் பூட்டான் இரண்டுமே உரிமை கோரும் இமாலய மலைமுகடான  டோக்லாம் பீடபூமியில் மோதிக்கொண்டபோது எடுத்த அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாக இப்போது நடுநிலைமை என்ற பாசாங்கு எதையும் கைவிட்டுள்ளது. அது பெய்ஜிங்கை 'ஆக்கிரமிப்பாளர்' என்று முத்திரை குத்தியது மற்றும் சர்வதேச மன்றங்கள் மற்றும் அறிக்கைகளில் தென் சீனக் கடல் சர்ச்சையை இந்திய-சீனா எல்லைப் பிரச்சனையுடன் இணைக்க பலமுறை முயன்றது, அங்கு வாஷிங்டன் பல்வேறு நாடுகளை  பெய்ஜிங்கிற்கு எதிராக தங்கள் பிராந்திய உரிமைகோரல்களை எழுப்பும்படி ஆக்கிரோஷமாக தூண்டியது. அவற்றை சீன “ஆக்கிரமிப்புக்கான' உதாரணங்களாக காட்டியது.

1914 ஆம் ஆண்டு சீனாவுடன் எந்த ஆலோசனையும் இல்லாமல் திபெத்தின் மீது பிரிட்டிஷ் பேரரசு திணித்த மக்மஹோன் கோடு எனப்படும் எல்லைக்கோடு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான சரியான எல்லையாக அமைகிறது என்ற இந்தியாவின் கூற்றுக்கு அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தும் இருதரப்பு தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்க செனட் வெளியுறவுக் குழு தற்போது பரிசீலித்து வருகிறது. கூடுதலாக, இது இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நெருக்கமான ஒத்துழைப்பைக் கோருகிறது, இதில் 'மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு தொடர்பு மற்றும் தகவல்-பகிர்வு', மற்றும்  முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில்' அமெரிக்கா-இந்தியா முன்முயற்சி மற்றும் குவாட் -வாஷிங்டனுக்கும் அதற்கு  நெருக்கமான ஆசிய பசிபிக் நட்பு நாடுகளான  ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் புது டெல்லி இடையிலான அரை-மூலோபாய கூட்டணி என்பன அடங்கும்.

சர்ச்சைக்குரிய இந்திய-சீனா எல்லையில் இருந்து வெறும் 100 கிமீ தொலைவில் உள்ள இமயமலையில் 'மிக உயர்வான பகுதியில் போர் நடவடிக்கை' அது யூத் அப்யாஸ் என்றழைக்கப்பட்ட ஆத்திரமூட்டும் இரண்டு வார இராணுவப் பயிற்சியை இந்திய மற்றும் அமெரிக்கத் துருப்புக்கள் முடித்த சில நாட்களுக்குப் பிறகு டிசம்பர் 9 இல் மோதல் ஏற்பட்டது.

டிசம்பர் 2022 இந்தியா-சீனா எல்லை மோதலின்போது அமெரிக்காவினால் வழங்கப்பட்ட நிகழ்நேர புவிசார் இராணுவ உளவுத்தகவல் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியது என்ற அமெரிக்க செய்தி மற்றும் உலக அறிக்கையின் கூற்று உண்மையாக இருக்கலாம். எவ்வாறாயினும், ஆகஸ்ட் 2020 கல்வான் பள்ளத்தாக்கு நடவடிக்கையின் வெற்றியில், ஆயிரக்கணக்கான இந்திய துருப்புக்கள் தொடர்ச்சியான மலையுச்சிகளை தடையின்றி கைப்பற்றியதில் அமெரிக்கா வழங்கிய உளவுத்தகவலின் பங்கு உள்ளது என்று அந்த நேரத்தில் இந்திய அறிக்கைகள் கூறின. இந்திய அதிகாரிகள் பின்னர் இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தாக இருந்தது என்றும், முழு அளவிலான எல்லைப் போராக வெடிக்கவில்லை என்றாலும் அது இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே ஆயுத மோதல்களுக்கு எளிதாக வழிவகுத்திருக்கலாம் என்றும் ஒப்புக்கொண்டனர். அதாவது, போர் தூண்டிவிடப்படலாம் என்ற அறிவுடன் இது மேற்கொள்ளப்பட்டது  இது போரிடுபவர்களின் ஆரம்ப நோக்கங்கள் எதுவாக இருந்தாலும், பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் போன்ற பிற பிராந்திய சக்திகளை உள்ளடக்கிய ஒரு பரந்த மோதலில் சுழலும் அபாயத்தை கொண்டிருந்தது.

புது தில்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையே பதட்டங்களைத் தூண்டுவதன் மூலம், சீனாவிற்கு எதிரான போருக்கு ஸ்திரமின்மை, சுற்றி வளைப்பு மற்றும் தயார் செய்வதற்கான உந்துதலுக்கு இந்தியாவை இன்னும் இறுக்கமாகப் பயன்படுத்த வாஷிங்டன் முயன்று வருகிறது. அது இந்தியாவை அதன் தெற்கு மற்றும் மேற்கு எல்லைகளில் அச்சுறுத்தும் ஒரு வழிமுறையாகக் கருதுகிறது, ஆனால் நெருக்கடி ஏற்பட்டால் இந்தியப் பெருங்கடலுக்கான அணுகலை மறுப்பதன் மூலம் சீனாவை பொருளாதார ரீதியாக கழுத்தை நெரிக்கும் அதன் திட்டங்களின் மையமாகவும் அது கருதுகிறது.

வாஷிங்டனின் போர் தயாரிப்புகள் ஏற்கனவே மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன, தைவானில் இப்போது அமெரிக்கா விரைவாக ஆயுதங்களை குவித்து வருகிறது மற்றும் அதனை ஒரு 'மாபெரும் ஆயுதக் கிடங்காக' மாற்ற முற்படுகிறது. இது ஒரு நீண்ட தொடரான வெடிப்பதற்கு சாத்தியமாக தயார் நிலையிலுள்ள புள்ளிகளில் மிகவும் பிரபலமானதாக உள்ளது. அமெரிக்க இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் இராணுவ மோதலின் தவிர்க்க முடியாத தன்மை பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள், சிலர் 2025 க்குள் அது வெடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இந்திய முதலாளித்துவம், அதன் பங்கிற்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் சேர்ந்து அதன் சீன-விரோத மூலோபாய கூட்டுறவை இரட்டிப்பாக்குகிறது. அதே அமயம் உக்ரேன் மீது வாஷிங்டனின் தூண்டுதல் மற்றும் ரஷ்யாவுடனான போரின் விரிவாக்கம் ஆகியவை எடுத்துக்காட்டுவது என்னவென்றால் அதன் கொள்ளையடிக்கும் பூகோளரீதியான  அபிலாஷைகளை முன்னெடுப்பதற்கு அது ஆபத்தான அணுசக்தி மோதலை நடத்துவதற்கு தயாராக உள்ளது என்பதாகும்.

முழு அரசியல் நிறுவனத்தின் ஆதரவுடன், இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான தீவிர வலதுசாரி பிஜேபி அரசாங்கம், 2020ல் சீனாவுடனான எல்லைப் பதட்டங்களைத் தூண்டுவதைப் பயன்படுத்தி, அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றுடன் இந்தியாவின் இருதரப்பு, முத்தரப்பு மற்றும் நாற்கர இராணுவ-மூலோபாய உறவுகளை மிகப்பெருமளவில் விரிவுபடுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியா. டோக்கியோ மற்றும் கான்பெராவுடன் பரஸ்பர தளவாட விநியோக ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது மற்றும் நான்கு குவாட் கூட்டாளிகளின் கடற்படைகளை உள்ளடக்கிய இந்தியாவின் வருடாந்திர மலபார் கடற்படை பயிற்சியின் விரிவாக்கம் ஆகியவை இதில் அடங்கும். சிறிய மாலத்தீவுகள் முதல் நேபாளம் மற்றும் பங்களாதேஷ் வரையிலான தெற்காசியா முழுவதும் சீன செல்வாக்கை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் அதன் ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

சீனாவின் பொருளாதாரத்தை விட ஐந்தில் ஒரு பங்கு பொருளாதாரத்துடன் இந்திய ஆளும் வர்க்கமும், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் பிற மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளின் திட்டங்களில் இருந்து ஆதாயம் தேடும் நம்பிக்கையுடன் சீனாவை வலுவிழக்கச் செய்து, உள்நாட்டில் இயங்கும் நாடுகடந்த நிறுவனங்களுக்கு உற்பத்தி வசதிகளை இடமாற்றம் செய்து அபிவிருத்தி செய்ய அழுத்தம் கொடுக்கிறது. இதன் மூலம், மாற்று மலிவு-தொழிலாளர் உற்பத்தி சங்கிலி மையமாக இந்தியாவை வளர்ச்சியடைய செய்கிறது. 

அமெரிக்க வர்த்தகச் செயலர் ஜினா ரைமண்டோ, பூகோள ரீதியான தலைமை நிர்வாக அதிகாரிகளின் உயர்மட்டக் குழுவுடன் மார்ச் 7 முதல் 10 வரை இந்தியாவிற்கு வருகை தந்தனர். அது விநியோகச் சங்கிலியின் 'மீள் தன்மை' மற்றும் பல்வகைப்படுத்தல் பற்றி விவாதிக்கவும், மேலும் வெளிநாட்டு முதலீடு மற்றும் முக்கிய பொருளாதார துறைகளில் இலாபத்தைத் திருப்பி அனுப்புவதில் எஞ்சியுள்ள தடைகளை நீக்குமாறு இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கவும் ஆகும். 

முன்னதாக, ஜனவரியில், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது அமெரிக்க சகா பிரதிநிதி ஜேக் சல்லிவன் ஆகியோர் மே 2022 இல் டோக்கியோவில் சந்தித்தபோது பைடனும் மோடியும் அறிவித்த சிக்கலான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கான முன்முயற்சி (ICET) குறித்த முதல் உயர்மட்ட உரையாடலை நடத்தினர். குவாட் அரசாங்கத் தலைவர்களின் முதல் நேருக்கு நேர் உச்சிமாநாட்டின் ஒரு பக்கமாக  செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், 6 ஜி, உயிரியல் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் குறைமின்கடத்திகள் உட்பட அமெரிக்க இராணுவ மற்றும் பொருளாதார மேலாதிக்கம் மற்றும் பூகோள மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதில் முக்கியமானதாகக் கருதப்படும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சியில் இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பை மேம்படுத்துவதை ICET நோக்கமாகக் கொண்டுள்ளது.

வாஷிங்டனின் அபிலாஷைகளின் விசாலத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், நேட்டோவுக்கான அமெரிக்க தூதர் ஜூலியான் ஸ்மித், ஏப்ரல் 1 செய்தி மாநாட்டில், நேட்டோவில் இந்தியா நுழைவதை வாஷிங்டன் வரவேற்கும் என்று கூறினார். 'அது இந்தியாவுக்கு ஏற்கனவே அனுப்பப்பட்ட செய்தி, நேட்டோ கூட்டணி நிச்சயமாக இந்தியாவுடன் அதிக ஈடுபாட்டிற்கு திறந்திருக்கும், அந்த நாடு அதைத் தொடர ஆர்வமாக இருந்தால்' என்று ஸ்மித் கூறினார்,

நேட்டோவில் இந்தியாவின் பங்கேற்பு தற்போது கருதும் பொருளாக இல்லை. அதன் அணுசக்தித் தொழிற்துறைக்கு ஆதரவு உள்ளிட்ட, ஆயுத விநியோகத்திற்காக மாஸ்கோவை தொடர்ந்து சார்ந்திருப்பது உட்பட, அரசியல் மற்றும் மூலோபாய காரணங்களுக்காக, பனிப்போருக்கு முந்தைய நீண்டகால நெருங்கிய உறவுகளைக் கொண்ட ரஷ்யா மீதான நேட்டோ போருக்குப் பின்னால் முழுமையாக அணிதிரள  வேண்டும் என்ற வாஷிங்டனின் அழுத்தத்தை புது டெல்லி எதிர்த்துள்ளது.

ஆனால், இந்திய ஆளும் வர்க்கம், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் கீழ் வாஷிங்டனுடன்  'பூகோள மூலோபாய கூட்டணியை' உருவாக்கியது. அப்போதிருந்து  சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் போர் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக மாற்றி வருகிறது என்ற முழு புரிதலுடன் அபாரமாக விரிவுபடுத்தியுள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு  முக்கிய ஆதரவை வழங்கியுள்ளதன் மூலம் ரஷ்யாவிற்கு எதிராக உலகெங்கிலும் பொறுப்பற்ற ஆக்கிரமிப்புகளை நடத்த அதற்கு  தைரியம் கொடுத்திருக்கிறது. அதே நேரத்தில், புது டெல்லி அதன் சொந்த கொள்ளையடிக்கும் பெரும்-வல்லரசாகும் இலட்சியங்களை தொடர அமெரிக்க மூலோபாய உதவிகளையும் ஆதரவையும் பயன்படுத்தியுள்ளது. இதில் பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான அதன் பிற்போக்கு மூலோபாய மோதல்களும் உட்படும், அவை அணுவாயுத மோதலாக சுழலக்கூடும்.

இந்தோ-அமெரிக்க கூட்டணிக்கு எதிராக இந்திய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது ஒரு பூகோள தொழிலாள வர்க்க, போர் எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்புவதில் ஒரு முக்கிய அம்சமாகும், அது - சோசலிசப் புரட்சி மூலமாக உலகத்தை எப்போதும் விரிவடையும் மற்றும் வெடிப்புத்தன்மை கொண்ட போர் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் உலகை  மூழ்கடித்த உலகின் போட்டி முதலாளித்துவத்தை நிராயுதபாணியாக்கும் 

Loading