2023: ஒரு நிதிக் கொந்தளிப்பு ஆண்டு

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

நிதிய அமைப்புமுறைக்கு பங்குச் சந்தையானது ஒரு கொந்தளிப்பானதாக இருந்த பிறகு, அமெரிக்க பங்குச் சந்தை இந்த ஆண்டு வரலாறு காணாத உச்சத்தில் அல்லது அதற்கு மிக நெருக்கமாக முடிவடைந்திருக்கிறது.

டிசம்பர் 13ல் நடந்த கூட்டத்தில் அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மேற்கொண்ட “தளர்வான” திருப்பத்தால் ஊக்குவிக்கப்பட்ட வோல் ஸ்ட்ரீட்டின் உயர்வு, 2024 ஆம் ஆண்டில் குறைந்தது மூன்று மற்றும் ஆறு வட்டி விகிதக் குறைப்புகளின் சந்தை எதிர்பார்ப்புகளால் எரியூட்டப்படுகிறது.

நியூயோர்க் பங்குச் சந்தை [AP Photo/Richard Drew]

இந்த எழுச்சியானது அனைத்துப் பகுதிகள் முழுவதும் விரிவடைந்து வருகிறது. டோவ் (The Dow) பங்குச் சந்தை குறியீட்டெண் இந்த மாதத்தில் ஏழு சாதனை உச்சங்களை எட்டியுள்ளது மற்றும் எஸ்&பி 500 (S&P 500) கடந்த ஆண்டு அதன் குறைந்தபட்சத்திலிருந்து 34 சதவீத உயர்வைப் பதிவு செய்த பின்னர் ஜனவரி 2022 இல் எட்டப்பட்ட அதன் சாதனை உயர்வை விட சற்றே குறைவாக உள்ளது. “பொண்ட் கார்னிவல்” (“bond carnival”) என்று வர்ணிக்கப்படும் உலகின் மிகப் பெரிய கடன் சந்தையான அமெரிக்க கருவூலங்களைப் பொறுத்தவரை, அதன் இரண்டு மாத மிகப் பெரிய இலாபத்தை அடையும் பாதையில் உள்ளது.

டாட் கம் (dot.com) குமிழியின் நெருக்கடி உச்சத்தில், 1999 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாரிய தொழில்நுட்பம் நிறைந்த நாஸ்டாக் 100 குறியீடு (NASDAQ 100) அதன் மிகப் பெரிய உயர்வைப் பதிவு செய்திருக்கிறது. இது இந்த ஆண்டு 55 சதவீதம் உயர்ந்துள்ளது, இது செயற்கை நுண்ணறிவிலிருந்து (artificial intelligence) இலாபத்திற்கான வாய்ப்புகளால் தூண்டப்பட்டுள்ளது.

ஆனால் ஆண்டு முழுவதும் வெளிப்படும் நிதிய அமைப்புமுறையின் தீவிர ஏற்ற இறக்கத் தன்மையானது, ஒரு நெருக்கடியாக இல்லாவிட்டாலும், பெரிய பிரச்சினைகளைத் தூண்டக்கூடும் என்ற கவலையின் வெளிப்பாடுகளுடன் சந்தை வெறியும் சேர்ந்து கொண்டிருக்கிறது.

“இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் ஒரு ‘விரிவான சந்தை ஏற்றத்தில்’ இருக்கிறோம். இதன் அளவு பிரமிக்க வைக்கிறது” என்று பிரிட்டனின் மிகப் பெரிய சொத்து மேலாளர் லீகல் & ஜெனரல் இன்வெஸ்ட்மென்ட்டின் (Legal & General Investment) தலைமை முதலீட்டு அதிகாரி சோன்ஜா லாட் பைனான்சியல் டைம்ஸிடம் (FT) தெரிவித்தார். “அதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். தவறுக்கு இடமில்லை” என்றார்.

மேலும், வட்டி விகிதக் குறைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து சந்தைகளில் உற்சாகம் இருந்தபோதிலும், கடந்த 18 மாதங்களின் விகிதங்களில் ஏற்பட்ட கடுமையான உயர்வின் விளைவுகள் — ஒரு தசாப்தத்திற்கும் மேலாக பூஜ்ஜியத்திற்கு அருகில் இருந்த மத்திய வங்கியின் விகிதம் (Fed rate) இப்போது 5 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது — இன்னும் அமைப்பு முழுவதும் பாய்ந்து கொண்டிருக்கிறது மற்றும் திடீர் அதிர்ச்சிகளை ஏற்படுத்தக்கூடும்.

எடுத்துக்காட்டாக, இந்த உயர்வுகள் மார்ச் மாதத்தில் அமெரிக்க வரலாற்றில் நான்கு மிகப் பெரிய வங்கித் தோல்விகளில் மூன்றிற்கு இட்டுச் செல்லும் என்று யாரும் கணிக்கவில்லை, இது வரலாற்றில் காணப்பட்ட வைப்புத் தொகைகளில் மிக விரைவான வெளியேற்றத்தால் குறிக்கப்படுகிறது, மேலும் நிதியச் சரிவைத் தடுக்க மத்திய வங்கி மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஒரு பெரிய தலையீடு தேவைப்படும்.

அரசாங்கக் கடன் வாங்கப்பட்டு விற்கப்படும் அமெரிக்க கருவூலச் சந்தை மிகவும் கவலைக்குரிய துறைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது 27 டிரில்லியன் டாலர்களை நெருங்குகிறது மற்றும் இது அமெரிக்க மற்றும் உலக நிதிய அமைப்புமுறையின் அடித்தளமாக இருக்கிறது.

இது அதிகரித்த ஏற்ற இறக்கத்தின் அறிகுறிகளைக் காட்டுகிறது. ஆண்டின் நடுப்பகுதியில், 10 ஆண்டு பத்திரங்கள் விற்றுத் தீர்ந்ததாலும், மத்திய வங்கி தனது நாணயக் கொள்கையை கடுமையாக்கும் நிலைப்பாட்டைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பில் பத்திர விலைகள் எதிர் திசைகளில் நகர்ந்ததாலும், பத்திரங்களின் வருவாய் அதிகரித்துக் கொண்டே வந்தது.

ஆனால் பணவீக்க எண்கள் குறையத் தொடங்கியதாலும், ஊதியக் கோரிக்கைகள் தொழிற்சங்க இயந்திரங்களால் தொடர்ந்து ஒடுக்கப்பட்டதாலும், சந்தைகளில் விகிதக் குறைப்புக்கான கூக்குரல் அதிகரித்தது. முதலில் மத்திய வங்கி இந்த கோரிக்கைகளை எதிர்த்ததாகத் தோன்றியது. ஆனால் டிசம்பர் கூட்டத்தில் மத்திய வங்கித் தலைவர் ஜெரோம் பவல் முந்தைய நோக்குநிலை பராமரிக்கப்படும் என்று வலியுறுத்திய இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஒரு குறிப்பிடத்தக்க மாற்ற முன்னெடுப்பை மேற்கொண்டார்.

இதன் விளைவாக, அக்டோபரில் வெறும் 5 சதவீதத்தைத் தொட்ட 10 ஆண்டு பத்திரத்தின் இலாபம் இப்போது சுமார் 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஒரு சதவீதத்திற்கும் குறைவான சிறிய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கதாக இருக்கக்கூடிய சந்தையில் இதுபோன்ற விரைவான நகர்வுகள் நிலையற்ற தன்மையைக் குறிக்கின்றன.

இந்த ஆண்டு எழுந்துள்ள மற்றொரு கவலைக்குரிய காரணம் அடிப்படை வர்த்தகம் என்று அழைக்கப்படுபவைகளானது, பத்திர விலைகளுக்கும் (bond prices) எதிர்காலச் சந்தைகளில், அவற்றுக்கு என்ன கிடைக்கும் என்பதற்கும் இடையிலான சிறிய வித்தியாசத்தைப் பயன்படுத்தி பெரிய பந்தயங்கள் நடத்தப்படுவதாகும். ஏனெனில் வேறுபாடுகள் மிகவும் சிறியதாக இருப்பதால், சிறிய முதலீட்டாளர்கள் செயற்பாட்டை இலாபகரமாக மாற்ற அதிக அளவிலான கடனை வாங்க வேண்டும்.

தனது Chartbook வலைத் தளத்தில் ஒரு சமீபத்திய இடுகையில், பொருளாதார வரலாற்றாசிரியர் ஆடம் டூஸ் (Adam Tooze), ஒரு ஹெட்ஜ் ஃபண்ட் (hedge fund) அதன் சொந்த பணத்தின் குறைந்தபட்சத்தையும் அதிகபட்சம் கடன் வாங்கிய பணத்தையும் பயன்படுத்தும் வர்த்தகத்தின் ஊகத் தன்மை குறித்து கட்டுப்பாட்டாளர்கள் “குறிப்பாக அக்கறை கொண்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

இதில் சம்பந்தப்பட்ட தொகைகள் பெரியவையும், அரை டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமானவைகளாகும்.

“ஒரு தொகுப்பு மதிப்பீடுகளின்படி, 2022 டிசம்பரில் ஹெட்ஜ் நிதிகள் (hedge funds) வர்த்தகக் கடன் அடிப்படையில் 553 பில்லியன் டாலர்கள் பாக்கிகள் செலுத்த வேண்டியிருந்தன, மேலும் அவைகள் 56 க்கு 1 என்ற விகிதத்தில் பயன்படுத்தப்பட்டன என்று Tooze எழுதியுள்ளார். “ இது கடன் அமைப்பில் பரவலான இழப்புகள் அல்லது பெரிய ஹெட்ஜ் ஃபண்ட் (hedge funds) தோல்விக்கான சாத்தியத்தை உருவாக்குகிறது.”

சம்பந்தப்பட்ட எண்கள் கிட்டத்தட்ட இந்த ஆண்டு நிச்சயமாக உயர்ந்துள்ளன, இது ஒரு நிதியின் தோல்வியும் கூட “உடனடியாக பணமாக மாற்றுதல்” (“dash for cash”) மற்றும் 2022 அக்டோபரில் பிரிட்டனில் உருவான “கீழ்நோக்கிய சரிவு” (“doom loop”) போன்றவற்றை உருவாக்குகிறது, அப்போது பத்திர விலைகள் வீழ்ச்சியடைந்தபோது ஓய்வூதிய நிதிகள் பணத்தைத் திரட்ட பத்திரங்களை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இதனால் விலைகள் இன்னும் குறைந்துவிட்டன.

ஆனால், கட்டுப்பாட்டாளர்கள் தலையிட முயன்றாலும், அவர்கள் பெருமளவு சவால்களை எதிர்கொள்ளுகின்றனர், ஏனெனில் “கருவூலச் சந்தை மற்றும் அதன் செயற்பாடுகள் எப்படி இருக்கலாம் என்பது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது” என்று டூஸ் குறிப்பிட்டார்.

அவைகள் குறையத் தொடங்கினாலும் கூட, வட்டி விகிதங்கள் 2008 நிதிய சரிவுக்குப் பிறகு வீழ்ச்சியடைந்த பூஜ்ஜிய மட்டத்திற்கும் மேலாக இருக்கக்கூடும், மேலும் அரசாங்கக் கடனை வாங்கியபோது டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவழிப்பதை மத்திய வங்கியின் ஒரு நாணயக் கொள்கைக் கருவியை (quantitative easing) உள்ளடக்கியதாக இருந்தது.

அமெரிக்க அரசாங்கக் கடனானது, போர் மற்றும் இராணுவத்திற்கான அதிகரித்த அரசாங்க செலவினங்களால் அதிகரிக்கப்பட்டு, புதிய சாதனை உச்சங்களை அடைந்து வருகிறது— அது இப்போது 33 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக உள்ளது. ஆனால் இந்தக் கடனுக்கான வட்டித் தொகை அளவு வேகமாக உயர்ந்து வருகிறது மற்றும் இப்போது மருத்துவப் பாதுகாப்பு (Medicare) மற்றும் சமூக பாதுகாப்பிற்குப் (Social Security) பிறகு அரசாங்க செலவினங்களில் மூன்றாவது பெரிய தொகையாக இது உள்ளது.

இராணுவச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது சமூக செலவினங்களின் முக்கிய பகுதிகளில் வெட்டுக்களுக்கான அழைப்புகளை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலை மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தப்பட வேண்டும். இதனால் அதிகரித்து வரும் போர் செலவினங்களுக்கு நிதியளிக்கப்பட்டு, கருவூலக் கடன் (Treasury debt) வைத்திருப்பவர்களுக்கு பணம் செலுத்தப்பட வேண்டும்.

பங்குச் சந்தையின் சமீபத்திய ஏற்றமும், அது மேலும் உயரக்கூடும் என்ற எதிர்பார்ப்பும் ஒரு உற்சாகமான சூழலை உருவாக்கியுள்ளது. ஆனால் நெருக்கமான பகுப்பாய்வு இது மிகவும் நிலையற்றது என்பதைக் காட்டுகிறது.

1960 மற்றும் 1970 களில் வோல் ஸ்ட்ரீட் “நிஃப்டி 50” (nifty fifty) என்று அழைக்கப்பட்டது, இது நல்ல இலாபகரமான வருமானத்தைக் கொடுத்த உயர் மதிப்புள்ள பங்குகளாகும்.

அந்த நாட்கள் காணாமல் போய்விட்டன, சந்தையில் இப்போது “அற்புதமான ஏழு” (magnificent seven) என்று அழைக்கப்படுபவைகள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆப்பிள், மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் (கூகுள் உரிமையாளர்), அமேசான், டெல்சா, மெட்டா (பேஸ்புக் உரிமையாளர்) மற்றும் என்விடியா ஆகிய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பெயர்கள் அதில் அடங்கும்.

இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இந்தப் பங்குகளின் விலை 40 சதவீதம் முதல் 180 சதவீதம் வரை உயர்ந்தன மற்றும் அந்த ஆண்டில் S&P 500 குறியீட்டில் ஏற்பட்ட அனைத்து உயர்வுக்கும் காரணமாக இருந்தது, மற்ற அனைத்துப் பங்குகள் ஒப்பீட்டளவில் மாற்றமின்றி இருந்தன. அப்போதிருந்து, மற்றயவைகள் “பரந்த மற்றும் ஒரே நேரத்தில் அதிகரிப்பில்” (“everything rally”) சேர்ந்துள்ளது, ஆனால் Mag7 (”அற்புதமான ஏழு”) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது மற்றும் S&P உயர்வில் 64 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

FT (Financial Times) சமீபத்தில் குறிப்பிட்டது போல: “அவைகளின் அளவு இப்போது மிகவும் தெளிவாக உள்ளன, அவைகள் அமெரிக்க பங்குகளில் மட்டுமல்ல, உலகளாவிய பங்குச் சந்தைகளின் செயல்திறனிலும் ஒரு பெரிய பகுதியை ஆதிக்கம் செலுத்துகின்றன.”

இந்த ஆண்டு விரைவுபடுத்தப்பட்டுள்ள இந்த அதிக அளவிலான நிதியச் சக்தியின் ஒன்றுகுவிப்பு, வங்கித் துறையிலும் பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், ஒரு தொழில்துறை கண்காணிப்பாளரால் தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் FT ஆல் மேற்கொண்ட பகுப்பாய்வின்படி, JPMorgan Chase அமெரிக்க வங்கி இலாபங்களில் கிட்டத்தட்ட 20 சதவீதத்தை எடுத்துக் கொண்டது. இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதம் அதிகமாகும்.

அதன் வருவாய் அதன் போட்டியாளர்களான பாங்க் ஆப் அமெரிக்கா மற்றும் சிட்டிகுரூப் ஆகியவற்றின் மொத்த வருவாயை விட அதிகமாக உள்ளது, மேலும் வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo) பகுப்பாய்வாளரின் வார்த்தைகளில் கூறுவதானால் “ JPMorgan Chase ஆனது இராட்சத வங்கிகளின் மிகப் பெரும் சக்திவாய்ந்த இராட்சத வங்கியாக” (Goliath of Goliaths) இருக்கிறது.”

எவ்வாறெனினும், வோல் ஸ்ட்ரீட் மற்றும் பொதுவாக நிதி மூலதனம், மலிவான பணத்திற்கான சாத்தியக்கூறுகளில் உமிழ்வதால், அடிப்படை பொருளாதாரத்தில் பலவீனத்தின் அறிகுறிகளாக உள்ளன. வணிகரீதியான ரியல் எஸ்டேட் அதிக வட்டி விகிதங்களின் விளைவுகளை உணரத் தொடங்கியுள்ளது, ஊதியங்கள் தொடர்ந்து பின்தங்கியுள்ளதால் நுகர்வோர் செலவினங்கள் பணவீக்கத்தால் பாதிக்கப்படுகின்றன, பெருநிறுவனங்கள் திவாலாகி வருகின்றன, ஒரு வருடத்திற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது, குறிப்பாக உயர் தொழில்நுட்பத்தில் வெகுஜன பணிநீக்கங்கள் நடைபெறுகின்றன.

நிதிச் சந்தைகளில் தற்போதைய கொண்டாட்டங்களின் மேற்பரப்பிற்கு அடியில் 2023 ஆம் ஆண்டின் கொந்தளிப்புக்கு வழிவகுத்த அனைத்து நிலைமைகளும் நீங்கவில்லை, ஆனால் அவைகள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றன.