தாராளவாத கோழைகள் டிரம்பிற்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பில் இணைந்துள்ளனர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

உச்ச நீதிமன்றம் ஜூன் 30, 2022 முதல் தற்போது வரை. முன் வரிசை, இடமிருந்து வலமாக: இணை நீதிபதி சோனியா சோடோமேயர், இணை நீதிபதி கிளாரன்ஸ் தாமஸ், தலைமை நீதிபதி ஜான் ஜி ராபர்ட்ஸ், ஜூனியர், இணை நீதிபதி சாமுவேல் ஏ. அலிடோ, ஜூனியர் மற்றும் இணை நீதிபதி எலெனா ககன். பின் வரிசை, இடமிருந்து வலமாக: இணை நீதிபதி ஆமி கோனி பாரெட், இணை நீதிபதி நீல் எம். [Photo: Fred Schilling, samling av USAs Høyesterett]

கடந்த திங்களன்று, அமெரிக்க உச்ச நீதிமன்றம் டொனால்ட் டிரம்புக்கு சாதகமாக ஒருமனதாக தீர்ப்பளித்துள்ளது. 2020 தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவர் வழிநடத்திய வன்முறையான சதி முயற்சியை மீறி, 2024 அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வாக்குச் சீட்டில் தோன்றுவதற்கான வழியை அவருக்கு தெளிவாக ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் அதிவலது பெரும்பான்மையினரின் எழுத்துப்பூர்வ முடிவு இன்னும் மேலே சென்று, கொலராடோவின் உச்ச நீதிமன்றத்தால் ட்ரம்பை ஒரு தகுதியற்ற “கிளர்ச்சிவாதி” என்று வாக்குச்சீட்டில் இருந்து நீக்க முடியாது என்பது மட்டுமல்ல, மாறாக காங்கிரஸின் ஒரு புதிய சட்டத்திற்கு குறைவான எதுவும் அவ்வாறு செய்வதற்கான இயங்குமுறையை வழங்க முடியாது என்றும் அறிவிக்கிறது.

இந்த நீதித்துறை வரம்பு மீறல், ட்ரம்பின் தகுதி மீதான எதிர்கால சவால்களில் இருந்து அவரைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல, மாறாக அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியில் ட்ரம்பின் பல உடந்தையாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று வரையில் குடியரசுக் கட்சியில் முன்னணி பதவிகளில் உள்ளனர். இந்த தீர்ப்பு மிகவும் தீவிரமானது, ட்ரம்ப் நியமித்த நீதிபதி ஏமி கோனி பாரெட் கூட அதிலிருந்து விலகி இருப்பதற்கு இணக்கமான கருத்தை எழுத நிர்பந்திக்கப்படும் அளவுக்கு கட்டாயம் ஏற்பட்டது.

அதிவலது பெரும்பான்மையின் கலவை அதன் தீர்ப்புகளின் சட்டவிரோதத்தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது டிரம்ப் நியமித்த மற்ற இரண்டு நீதிபதிகளைக் கொண்டுள்ளது (பிரெட் கவனாக் மற்றும் நீல் கோர்சுச்); 2000 ஆம் ஆண்டின் திருடப்பட்ட தேர்தலுக்குப் பிறகு ஜனாதிபதியாக பதவியேற்ற ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷால் நியமிக்கப்பட்ட இரண்டு நீதிபதிகள் (சாமுவேல் அலிடோ மற்றும் ஜோன் ராபர்ட்ஸ்) மற்றும் ஊழலால் பாதிக்கப்பட்ட மற்றும் இழிபுகழ்பெற்ற ஊழல் நிறைந்த கிளாரன்ஸ் தோமஸ்னுடைய சொந்த மனைவி ஜின்னி தோமஸ், 2020 தேர்தலை முறியடிப்பதற்கான ட்ரம்பின் சதியில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.

பதினான்காவது திருத்தத்தின் பிரிவு 3 இன் பெரும்பான்மையினரின் விளக்கம், உள்நாட்டுப் போருக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட அடிமைகளின் கிளர்ச்சியில் பங்கேற்பவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதைத் தடுக்கிறது. இந்த திருத்தம் என்பது வார்த்தைகளின் தெளிவான அர்த்தத்திற்கு மிகவும் முரணானது. இதன் விளைவாக “அரசியலமைப்புப் பக்கத்திலிருந்து வார்த்தைகளை திறம்பட அழிக்க வேண்டும்” என்று நியூயார்க் டைம்ஸில் டேவிட் பிரெஞ்சின் வார்த்தைகளை கூறுகிறது.

“கிளர்ச்சி” என்ற வார்த்தைக்கு ஏதேனும் அர்த்தம் இருக்குமானால், அது ஜனவரி 6, 2021 அன்று தேர்தலை இரத்து செய்து ட்ரம்பை சர்வாதிகாரியாக அமர்த்துவதற்கான நீண்டகால, கொடிய மற்றும் அதிநவீன சதித்திட்டத்திற்கும் பொருந்தும்.

டிரம்ப், தன் பங்கிற்கு, டெக்சாஸ் கவர்னர் கிரெக் அபோட் உட்பட நவ-கூட்டமைப்பு (neo-Confederate) கூறுகளை வெளிப்படையாக நீதிமன்றத்திற்குத் தொடர்கிறார். அவர் கூட்டாட்சி அரசியலமைப்பை அப்பட்டமாக மீறும் அடிமை மாநிலங்களை முன்மாதிரியாகக் கொண்டு, தனிப்பட்ட முறையில் ஜனவரி 6 கிளர்ச்சி சதியில் உடந்தையாக உள்ளார்.

திங்களன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, நீதிபதிகள் சோனியா சோடோமேயர், எலெனா காகன் மற்றும் கேதன்ஜி பிரவுன் ஜாக்சன் ஆகியோரின் பெயரளவிலான “தாராளவாத” அணியின் நிலைப்பாடுகளுக்கும் சமமானதாக இல்லையென்றாலும் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். அவர்கள் அவ்வாறு செய்யத் தவறினால், அதன் விளைவு ஒரு குழப்பமான “ஒட்டுவேலை” தேர்தலாக இருக்கும் என்ற அடித்தளத்தில் ட்ரம்புக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான அவர்களின் முடிவை அவர்கள் நியாயப்படுத்தினர். ஏனென்றால் குடியரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்கள் அநேகமாக ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை அவற்றின் வாக்குச்சீட்டுகளில் இருந்து நீக்குவதன் மூலமாக ட்ரம்ப் நீக்கப்பட்டதற்கு விடையிறுக்கக்கூடும்.

இது ட்ரம்புக்கு ஆதரவாக தீர்ப்பளிப்பதற்கான ஒரு சட்டபூர்வ காரணம் அல்ல — இது வெறுமனே கூட்டு அரசியல் மற்றும் தனிப்பட்ட கோழைத்தனத்தின் வலியுறுத்தலாகும். அவர்கள் நடைமுறையளவில் பின்வருமாறு குறிப்பிடுகின்றனர்: “நாம் வருங்கால அமெரிக்க ஃபியூரருக்கு (தலைவருக்கு) ஆதரவாக ஆட்சி செய்ய வேண்டும், ஏனென்றால் நாம் அவ்வாறு செய்யாவிட்டால், அவரது கூட்டாளிகள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்நாட்டு போர் அபாயத்தை உருவாக்குவார்கள்.”

உச்ச நீதிமன்ற “தாராளவாதிகளின்” சரணாகதியானது, ட்ரம்பின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சியின் போதும், அதற்குப் பின்னரும் மற்றும் அதற்குப் பின்னரும் ஜனநாயகக் கட்சியின் நடத்தையைப் பிரதிபலிக்கிறது. கிளர்ச்சியின் போது, அப்போதைய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன் அமைதியாக இருந்தார், இறுதியாக அதை நிறுத்துமாறு டிரம்புக்கு வாய்மொழி கோரிக்கையை விடுத்தார். பதவியேற்ற பின்னர், பைடென் காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினருக்கு எதிராகவும் மற்றும் சதியின் பாகமாக இருந்த இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க மறுத்து, ஒரு “வலுவான“ குடியரசுக் கட்சியைப் பராமரிக்க வலியுறுத்தினார்.

மிக சமீபத்தில், தெற்கு எல்லையில் அரசியலமைப்பு சட்டபூர்வத்தன்மையை பகிரங்கமாக மீறி நடந்த அதிவலது ஆத்திரமூட்டல்களுக்கு விடையிறுப்பாக, மற்றும் புலம்பெயர்ந்தோரை இராணுவம் பாரியளவில் சுற்றி வளைப்பதை நியாயப்படுத்த ட்ரம்ப் நவ-நாஜி வாய்வீச்சைப் பயன்படுத்தியதன் மத்தியில், பைடென் தனிப்பட்ட முறையில் எல்லைக்கு பயணித்து, அவரது சொந்த பிற்போக்குத்தனமான புலம்பெயர்ந்தோர்-விரோத மசோதாவுக்கு அதிவலது ஆதரவுக்கு விண்ணப்பித்தார். ட்ரம்பை நேரடியாக நோக்கி, “என்னுடன் சேருங்கள், அல்லது நான் உங்களுடன் இணைவேன்” என்று பைடென் கூறினார்.

உக்ரேன் தொடர்பாக ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-நேட்டோ போர், காஸாவில் அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலை, மற்றும் தாய்வான் விவகாரத்தில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க இராணுவ ஆத்திரமூட்டல்கள் ஆகியவற்றின் பின்னால் இருகட்சி ஒற்றுமையை எட்டும் முயற்சியில், ஜனநாயகக் கட்சியினர் கிளர்ச்சிவாத குடியரசுக் கட்சியினரை எதிர்த்துப் போராட மறுத்துள்ளனர் என்பது மட்டுமல்ல, மாறாக அவர்களை கூட்டாளிகளாக நேசித்துள்ளனர். அவ்வாறு செய்வதன் மூலம், நவம்பர் தேர்தலிலேயே இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு தேர்தல்களில் குடியரசுக் கட்சி வேட்பாளராக வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படும் ட்ரம்பை அவர்கள் பலப்படுத்தி மறுவாழ்வு அளித்துள்ளனர்.

அமசன் செல்வந்த தட்டுக்களின் தலைவர் ஜெஃப் பெஸோஸுக்கு சொந்தமான வாஷிங்டன் போஸ்ட் செவ்வாயன்று வெளியிட்டுள்ள ஒரு ஆசிரியர் குழு அறிக்கையில், ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் கண்ணோட்டத்தை சுருங்கக் கூறுகிறது. அரசியலமைப்பின் கிளர்ச்சி ஷரத்தை ஒரு “விசித்திரமான தந்திரம்” என்றும், உச்ச நீதிமன்றம் “சரியான அழைப்பு” என்று தீர்ப்பளித்துள்ளதாகவும் கூறிய அப்பத்திரிகை, ட்ரம்ப் “ஒரு கிளர்ச்சிவாதியாகவும் கூட” இருந்தாரா என்ற கேள்வியை “உச்ச நீதிமன்றம் கவலைப்படத் தேவையில்லாத” பல “சிக்கல்களில்” ஒன்றாக கையாள்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குச்சீட்டில் ட்ரம்பின் பெயர் இடம்பெறுவதை உறுதிப்படுத்த உச்ச நீதிமன்றம் திங்களன்று ஒருமனதாக அதன் வழியை மீறிச் சென்ற அதேவேளையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் ஆகியோர் இரண்டு ஸ்தாபக கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குப்பதிவு அணுகலைத் தடுக்க வடிவமைக்கப்பட்ட ஜனநாயக-விரோத சட்டங்களின் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் வாக்குச்சீட்டில் இருந்து விலக்கி வைக்கப்படுவார்கள்.

உலக சோசலிச வலைத் தளத்தில் வலியுறுத்தி வந்திருப்பதைப் போல, ஜனவரி 6 ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி ஒரு தடவை, ஒரே ஒரு முறை நடந்த சம்பவம் அல்ல. மாறாக அது ஒரு நீடித்த மற்றும் துரிதப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிப்போக்கின் ஒரு அத்தியாயமாகும். அபாயம் நீங்கவில்லை. இது வளர்ந்து வருகிறது.

ஒரு தனிநபரான டொனால்ட் டிரம்பின் ஆளுமையின் விளைவுதான் பாசிச ஆபத்து என்பது அல்ல என்று, அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குவதை அறிவிக்கும் அவரது சமீபத்திய இணைய உரையில் டேவிட் நோர்த் கூறினார். ஒருகாலத்தில் ஹிட்லர் உரைகள் குறித்த ஒரு புத்தகத்தை தனது படுக்கைக்கு அருகில் வைத்திருந்த பில்லியனரும் ரியாலிட்டி தொலைக்காட்சி பிரபலமுமான ட்ரம்ப் “அமெரிக்க முதலாளித்துவத்தின் குற்றகரத்தன்மையை மட்டுமே வெளிப்படுத்துகிறார்.”

“ஜனவரி 6, 2021 அன்று நடந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதி முயற்சி, ஒரு தனிமைப்படுத்தப்பட்ட அத்தியாயம் அல்ல. உண்மையில், இது ஒரு ஆடை ஒத்திகையின் தன்மையைக் கொண்டிருந்தது. அமெரிக்க ஜனநாயகம் அதன் கடைசி மரபில் உள்ளது. முதலாளித்துவத்தின் அடிப்படையில் அதனால் உயிர்வாழ முடியாது” என்று நோர்த் தெரிவித்தார்.

நோர்த் உரையாற்றி ஒரு வாரத்திற்குள், ஜனவரி 6 கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றத்தின் ஒருமனதான தீர்ப்பு இந்த முன்கணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

போஸ்ட்டின் நிலைப்பாட்டிற்கு மாறாக, பைடனுக்கு வாக்களிப்பது தீவிர வலதுசாரிகள் வேகம் பெறுவதற்கு காரணமான இயக்கவியலை நிறுத்தவோ அல்லது தலைகீழாக மாற்றவோ செய்யாது. ஜனநாயக ஆட்சி வடிவங்களின் நெருக்கடி சமூக சமத்துவமின்மையின் அதீத வளர்ச்சியிலும் தீவிரமடைந்து வரும் உலகளாவிய போரிலும் வேரூன்றி உள்ளது. இதற்கு உள்நாட்டில் எதிர்ப்பை ஒடுக்குவது அவசியமாகிறது. ஆளும் உயரடுக்கில் எந்த ஜனநாயக பிரிவும் இல்லை. ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் முதலாளித்துவ செல்வந்த தட்டுக்களின் இரண்டு பிற்போக்குத்தனமான கன்னைகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

டிரம்பை முதலிடத்திற்கு உருவாக்கிய செயல்பாட்டில் இன்றியமையாத காரணியாக இருந்த ஜனநாயகக் கட்சியுடன் ஒரு தீர்க்கமான முறிவை ஏற்படுத்தாமல், நவம்பரில் “இனப்படுகொலை ஜோ”வுக்கு வாக்களிப்பதன் மூலமாக அதிவலதிலிருந்து வரும் அபாயத்தை தடுத்து நிறுத்த முடியாது. சர்வதேச தொழிலாள வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளில் இருந்து அதன் அரசியல் சுயாதீனத்தை பிரகடனம் செய்து, முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக அதன் தொழில்துறை மற்றும் அரசியல் பலத்தை சுயாதீனமாக அணிதிரட்ட வேண்டும், அத்துடன் நெருக்கடியை தீர்ப்பதற்கான அதன் சொந்த சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

Loading