காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தை ஆக்கிரமித்த மாணவர்களை பேர்லின் போலீசார் கொடூரமாக தாக்கினர்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம். 

காஸாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு எதிராகவும், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உடந்தைக்கு எதிராகவும் போராட டசின் கணக்கான மாணவர்கள் புதனன்று ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத் துறையை ஆக்கிரமித்தனர். பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிக்கை ஒன்றின்படி, வியாழன் மாலை 6 மணி வரை ஆக்கிரமிப்பு உத்தியோகபூர்வமாக பொறுத்துக் கொள்ளப்பட்டாலும், போலீசார் ஏற்கனவே மாணவர்களை மிருகத்தனமாக தாக்கியுள்ளனர்.

View post on TikTok

ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு பதாகை பறக்கவிடப்பட்டு, கட்டிடத்தின் பால்கனியில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டபோது, பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு சேவையாளர்கள், யாரும் உள்ளே செல்லவோ அல்லது வெளியே செல்லவோ முடியாதபடி கட்டிடத்தை ஒரு சங்கிலி மற்றும் பூட்டால் பூட்டினர். இதனால் தீ விபத்து ஏற்பட்டால் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.

பொலிசார் இதை நிறுத்தவில்லை, மாறாக அது நடக்க அனுமதித்தனர், பின்னர் கட்டிடத்திற்குள் செல்வதற்கான அனைத்து வழிகளையும் அவர்களே மூடினர். பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலுக்கு முன்னால் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட உள்ளிருப்பு முற்றுகை முன்னதாகவே மிருகத்தனமான பலத்துடன் உடைக்கப்பட்டு, செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவராக இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் ஒருவர் தற்காலிகமாக மயக்கமடைந்தார். சம்பவ இடத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.

ஏற்கனவே ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தின் முந்தைய எதிர்ப்பு முகாமையும் மற்றும் திறந்த பல்கலைக்கழகத்தில் (Free University) மற்றொரு எதிர்ப்பு முகாமையும் மிருகத்தனமாக கலைத்த பேர்லின் பொலிஸின் நடவடிக்கைகள் ஜேர்மன் வரலாற்றின் இருண்ட காலங்களை நினைவூட்டுகின்றன. உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், எக்ஸ் ( ட்விட்டர்) இல் பின்வருமாறு கருத்துரைத்தார்:

பேர்லினில், போலிஸ் நாசிக்கள் பாணியில் ஹம்போல்ட் பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பலர் யூதர்களாக இருந்தனர். அவர்கள் #காசா இனப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள். நாசி ஆட்சியின் 1933 புத்தக எரிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இந்த தாக்குதல் நடந்தது. பாசிச அரசு வன்முறையின் இந்த மீள்வருகையால் ஹிட்லர் மகிழ்ச்சியடைவார்.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

மாலையில், பல்கலைக்கழக தலைவர் ஜூலியா வொன் புளூமென்தால் மற்றும் பல்கலைக்கழக வளாகத்தை ஆக்கிரமித்துள்ள மாணவர்களுக்கும் இடையே ஒரு ஆரம்ப கூட்டம் நடைபெற்றது. அப்போது எதிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றிய பேர்லின் மாணவர் கூட்டணி (Student Coalition Berlin) இப்பொழுது பல்கலைக்கழக ஆக்கிரமிப்பு தொடரும் என்று அறிவித்தது. சிறிது நேரத்திற்குப் பின்னர், பல்கலைக்கழக நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை பின்வருமாறு அறிவித்தது: “மே 23 வியாழக்கிழமை மாலை 6 மணி வரை இந்த ஆக்கிரமிப்பு பொறுத்துக் கொள்ளப்படும்.”

ஏனைய விடயங்களுடன் சேர்ந்து, ஹம்போல்ட் பல்கலைக்கழகம் அதன் அரசியல் நடவடிக்கைகளுக்காக தண்டிக்கப்பட்ட மாணவர்களுக்கு அதன் ஆதரவை உறுதியளிக்க வேண்டும் என்றும், காஸாவில் இனப்படுகொலை நடப்பதாக அது அங்கீகரிக்கும் ஒரு அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும், பேர்லின் உயர்கல்விச் சட்டம் (Berlin Higher Education Act) கடுமையாக்கப்படுவதை பகிரங்கமாக நிராகரிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கோருகின்றனர்.

ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் பேச்சாளர் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) ஐரோப்பிய தேர்தல் வேட்பாளர் கிரிகோர் கால், ஆக்கிரமிக்கப்பட்ட வளாகத்திற்கு முன்னால் வெளியிட்ட ஒரு அறிக்கையில் பின்வருமாறு விளக்கினார்:

மாணவர்களை அப்படியே விட்டுவிட்டால், அவர்களால் தங்கள் ஜனநாயக உரிமைகளை பாதுகாக்க முடியாது. தொழிலாளி வர்க்கம் அவர்களின் உதவிக்கு வர வேண்டியது அவசியம். கலிபோர்னியாவில் கல்வித்துறை தொழிலாளர்கள் செய்வதைப் போல், மாணவர்களை பாதுகாக்க வேலைநிறுத்தம் செய்யுமாறு நாங்கள் அனைத்து பல்கலைக்கழக தொழிலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கிறோம். இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விநியோகிப்பதை நிறுத்துமாறும், எல்லைகளைத் திறக்குமாறும், காஸா மக்களைப் பாதுகாக்குமாறும், ஒட்டுமொத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்துக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.

Loading