இங்கிலாந்து பொதுத் தேர்தலில் ஜெரமி கோர்பின் சுயேச்சையாக போட்டியிடுகிறார்  

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம் 

பிரிட்டன் பொதுத் தேர்தலில் இஸ்லிங்டன் நோர்த் தொகுதியில் தொழிற்கட்சி வேட்பாளர் பிரபுல் நர்குண்டை (Praful Nargund) எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிடப் போவதாக தொழிற்கட்சியின் முன்னாள் தலைவர் ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) அறிவித்துள்ளார். தொழிற்கட்சிக்கு எதிராக போட்டியிடுவது என்பதன்மூலம் 58 ஆண்டுகால உறுப்பினராக இருந்த கோர்பின் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோர்பின் வலதுசாரி, போர்வெறி அமைப்பிலிருந்து வெளியே குதிக்கவில்லை, ஆனால் அவர் வெளியே தள்ளப்பட்டார். உள்ளூர் தொகுதி தொழிலாளர் கட்சி மீது, கட்சித் தலைமையால் இரு நபர்களின் பெயர் பட்டியல் திணிக்கப்பட்டபோது, அதற்கான உரிமை கோரி ஒருமனதாக ஒரு பிரேரணையைத் தொடர்ந்து, அதன் சொந்த வேட்பாளர்களை முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டது. கோர்பின் 1983 முதல் 2021 வரை வடக்கு இஸ்லிங்டனில் தொழிற்கட்சிக்காக போட்டியிட்டிருந்தார்.

பிப்ரவரி 3, 2024 அன்று காஸாவில் நடந்த இனப்படுகொலைக்கு எதிராக லண்டனில் நடந்த போராட்டத்தில் ஜெர்மி கோர்பின் பேசுகிறார். 

இந்த ஏகாதிபத்திய-சார்பு கட்சியான தொழிற்கட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்யும் அவரது வாழ்நாள் பணியை கோர்பின் தொடர்கின்ற நிலையில், அவரை நீக்கியதற்கு கோர்பினின் பதில், தொழிற்கட்சிக்கு எதிரான எந்தவொரு அரசியல் சவாலுக்கும் அவரது ஆழமான எதிர்ப்பைச் சுருக்கமாகக் கூறுகிறது. சூனிய வேட்டையாடப்பட்டு வெளியேற்றப்பட்ட பிறகும், சேர் கெய்ர் ஸ்டார்மரின் (Sir Keir Starmer) “நேட்டோவின் கட்சி” (party of NATO), சியோனிசம் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் இன்னும் ஒரு எதிர்ப்பைக் காட்ட மறுக்கிறார்.

தொழிற்கட்சி தலைமை ஸ்டார்மரிடம் சரணடைந்ததில் இருந்து, “இடது யூத-எதிர்ப்பு” குறித்த போலியான கூற்றுக்கள் அவரது எதிரிகளால் மிகைப்படுத்தப்பட்டிருந்தன என்று பணிவுடன் தெரிவித்த பின்னர், மன்னிப்பு கேட்க மறுத்ததற்காக தொழிற்கட்சி கொறடா நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் நீக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு போலி-இடது அமைப்புகள், கோர்பின் ஒரு புதிய இடது-தொழிற்கட்சியின் தலைவராக முன்னோக்கி அடியெடுத்து வைப்பதற்கான சாத்தியக்கூறை முன்வைத்திருந்தன. காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆதரவு அளித்ததன் காரணமாக மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஸ்டார்மரின் கட்சிக்கு எதிராக கசப்புடன் திரும்பியதால் இது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

ஒவ்வொரு மாதமும், கோர்பின் அதற்கு நேர்மாறாகச் செயல்பட்டுள்ளார். போர்நிறுத்தத்தை ஆதரிக்குமாறு அனைத்துக் கட்சிகளுக்கும் அவர் தெளிவற்ற வேண்டுகோள்களை விடுத்ததன் மூலம் போரை நிறுத்துக் கூட்டணியின் (Stop the War Coalition) மேடைகளில் ஸ்டார்மர் அல்லது தொழிற்கட்சியின் பெயரைக் குறிப்பிட்டு விமர்சிக்க மறுத்தார்.

காஸாவில் பாரிய படுகொலைகள் மற்றும் இன அழிப்புக்கு, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் நடைமுறைப் போருக்கு ஆதரவு அல்லது வேறு எதற்கும் அவரது முன்னாள் தொழிற் கட்சியை ஒருமுறை கூட விமர்சிக்காமல், கோர்பின் இப்போது தொழிற்கட்சிக்கு எதிராக நிற்பதாக அறிவித்துள்ளார். வடக்கு இஸ்லிங்டன் தொகுதி எல்லைக்குள் தவிர, தொழிற்கட்சியுடன் மோதாமல் இருக்க அவர் தனது பிரச்சாரத்தை கவனமாக வடிவமைத்துள்ளார்.

X க்கு இடுகையிடப்பட்ட ஒரு வீடியோ மற்றும் உள்ளூர் இஸ்லிங்டன் ட்ரிப்யூனில் (Islington Tribune) அவர் தனது வேட்புமனுவை அறிவிக்கத் தேர்ந்தெடுத்த ஒரு கட்டுரையில், காஸா என்ற வார்த்தை கோர்பினின் உதடுகளில் வரவில்லை. “அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய பிரச்சினைகளுக்கு” ஆதரவளிப்பதற்கான உறுதிமொழியாக மட்டுமே ஒரு குறிப்பு உள்ளது. பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசிய இரண்டு வினாடி பேச்சு பின்னணியில்தான் அது உச்சரிக்கப்பட்டிருக்கிறது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

தொழிற்கட்சி மீதான எந்தவொரு முறையான விமர்சனத்தையும் நடத்துவதற்குப் பதிலாக,  “வடக்கு இஸ்லிங்டன் உறுப்பினர்களுக்கு தங்கள் சொந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது” என்று கோர்பின் புகார் கூறினார். “எனவே நாங்கள் எழுந்து நிற்க வேண்டும். நாங்கள் எழுந்து நிற்கவேண்டியிருக்கிறது மற்றும் இனி இதை எடுக்க மாட்டோம் என்று சொல்ல வேண்டும். நாங்கள் எங்கள் உரிமையை நிலைநாட்டுவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

2015 ஆம் ஆண்டு தொழிற்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தருணத்தில் தொடங்கப்பட்ட, நீடித்த அரசியல் சூனிய வேட்டையை எதிர்கொண்ட கோர்பின் அவருடைய நூற்றுக்கணக்கான சொந்த ஆதரவாளர்களைக் கொண்ட, அவருடைய நெருங்கிய கூட்டாளிகள் சிலர் உட்பட, “யூத வெறுப்பாளர்கள்” என்று அவதூறு செய்து கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டது இதுவரை கண்டிராத உயிரூட்டப்பட்டிருக்கும் தன்மையாக காணப்படுகிறது.

உறுப்பினர் நீக்கம் அல்லது சிரியாவில் குண்டுவீச்சு, நேட்டோ உறுப்புரிமை மற்றும் பிரிட்டனின் அணுவாயுதத் தடுப்பை புதுப்பித்தல் போன்ற அரசியல் கொள்கையின் முக்கிய கொள்கைப் பிரச்சினைகள் சம்பந்தப்பட்டிருந்தாலும், தனது பிளேயர் (Blairite) எதிர்ப்பாளர்களுக்கு முன்பாக பின்வாங்குவதைத் தவிர, அவர் கட்சிக்கு தலைமை வகித்த ஐந்து ஆண்டுகளாக கோர்பின் எதுவும் செய்யவில்லை. தொழிற்கட்சியானது வணிகம், சிக்கனச் சார்பு மற்றும் போரில் முழுமையாகத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, டோரிகள் மற்றும் பாதுகாப்புச் சேவைகளுடன் அது கூட்டுச் சேர்ந்தபோது, ​​கட்சியின் வலதுசாரிகளுக்கு எதிராக கோர்பின் ஒரு போராட்டத்தை நடத்த எதுவும் தூண்டவில்லை.

ஜெரமி கோர்பின் (இடது) மற்றும் சேர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் 2019 பொதுத் தேர்தலின் போது கோர்பின் கட்சித் தலைவராக இருந்தபோது நடந்த ஒரு நிகழ்வில். [AP Photo/Matt Dunham, File]

இன்று, ஸ்டார்மர் மார்கரெட் தாட்சரைப் புகழ்வது உட்பட, எந்தவொரு அடிப்படைக் கேள்வியிலும் டோரிகளிடமிருந்து பிரித்தறிய முடியாத ஒரு கட்சிக்கு தலைமை தாங்குகிறார். கோர்பின் சேகரிக்கக்கூடிய அனைத்தும் “அதிகாரம் மற்றும் செல்வத்தின் அடிப்படை மறுபகிர்வு, தண்ணீர், அஞ்சல், எரிசக்தி நிறுவனங்கள், வாடகைக் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் விளையாட்டுப் பொருளாக இல்லாத சுகாதார சேவை ஆகியவற்றின் பொது உரிமைக்கான தனிப்பட்ட வேண்டுகோள்” ஆகும். “இந்த அடிப்படைக் கோரிக்கைகள் தற்போது உத்தியோகபூர்வ எதிர்ப்பால்  முன்வைக்கப்படவில்லை” என்று கோர்பின் பணிவுடன் கூறுகிறார்.

கோர்பின் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவரது சொந்த திட்டங்களைப் பொறுத்தவரை, “யாராக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும்,” “அவர்களை பொறுப்புக்கூறக் கேட்பேன்” என்று அவர் இப்பொது கூறுகிறார். மக்கள் சபையில் (House of Commons) வழக்கமான பாதி வெற்றுத்தனமான கேட்கப்படாத வேண்டுகோள்கள் மற்றும் அவ்வப்போது திட்டுதல்கள் போன்ற பல தசாப்தங்களாக பின்வாங்குகளில் இருந்து செயல்பட்ட கோர்பினின் நிகழ்ச்சிகள் நடைமுறையில் இதன் அர்த்தம் என்ன என்பதை தெளிவுபடுத்துகிறது:

அதாவது யார் வெற்றி பெற்றாலும் அவர்களைப் பொறுப்புக் கூற வைப்பது குறித்த கோர்பின் குறிப்பிடுவதன் அர்த்தம், ஒரு ஸ்டார்மர் அரசாங்கம் குறித்த அவரது அணுகுமுறை என்ன, அல்லது அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனுடனான அவரது உறவு என்ன என்பதை அவர் கூற வேண்டியதில்லை என்பதையே அர்த்தப்படுத்துகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அவர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து தொழிற்கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுப்பார், ஸ்டார்மர் அரசாங்கத்தை இடதிற்கு தள்ளும் நம்பிக்கையை கைவிடக்கூடாது என்று தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் முறையீடு செய்வார். 

தனது அரசியல் விசுவாசத்தை தெளிவுபடுத்தும் வகையில், அவர் தனது தேர்தல் அறிக்கையில் “எப்போதும் தொழிற்கட்சியை ஆதரித்து, உண்மையில் தொழிற்கட்சியின் உறுப்பினர்களாக இருப்பவர்கள், வடக்கு இஸ்லிங்டன் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவும், அதே கொள்கையில் நான் எப்போதும் இந்தப் பகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினராக (MP) சேவை செய்யவும் நான் இங்கு வந்துள்ளேன் என்பதை புரிந்துகொள்வார்கள்” என்று தனது “நம்பிக்கையை” வெளிப்படுத்துகிறார். 

இன்னும் தொழிற்கட்சியில் இருக்கும் சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் (SCG) எம்.பி.க்களின் சக உறுப்பினர்கள் எவருக்கும் கோர்பின் தன்னுடன் சேர அழைப்பு விடுக்கவில்லை. மேலும் அவர்களில் எவரும் தங்கள் ஆதரவைக் கொடுப்பதன் மூலம் பாராளுமன்றக் கட்சியின் சொந்த உறுப்புரிமையைப் பணயம் வைக்கவில்லை.

கோர்பினின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவரான டயான் அபோட்டிடம் (Diane Abbott)  இருந்து அநேகமாக மிகவும் குறிப்பிடத்தக்க மௌனம் நிலவுகிறது. இனவாத குற்றச்சாட்டுக்கு ஆளான பின்னர் ஸ்டார்மரால் கட்சி கொறடா திரும்பப் பெறப்பட்டுள்ளார், மேலும் அவர் 37 ஆண்டுகளாக பிரதிநிதித்துவம் செய்து வரும் ஹாக்னி நோர்த் (Hackney North) மற்றும் ஸ்டோக் நியூவிங்டனுக்கான (Stoke Newington) தொழிற்கட்சியின் வேட்பாளராக நிற்க அவர் அனுமதிக்கப்படுவாரா என்பதை மட்டுமே அவர் கண்டுபிடிப்பார். வேட்பாளர் தேர்வு முடிவடையும் நாளாக ஜூன் 4-ம் தேதி இருந்தது.

இதற்கிடையே, கோர்பினின் முன்னாள் நிழல் சான்சிலர் ஜோன் மெக்டொன்னெல் (John McDonnell) மற்றும் அவரது சக சோசலிஸ்ட் பிரச்சாரக் குழுவின் (SCG) உறுப்பினர்கள் அனைவரும் தொழிற்கட்சியின் வெற்றிக்காக பிரச்சாரம் செய்யும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஸ்டார்மர் மற்றும் அவரது வலதுசாரி சிந்தனையாளர்களின் நிழல் அமைச்சரவையை எதிர்ப்பது என்று வரும்போது, தொழிற்கட்சியின் இடதுசாரி மாற்றத்தின் தலைவர்கள் என்று கருதப்பட்ட அனைவராலும் ஒரு தலைப்பட்சமான போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் இது தேர்தல் முழுவதும் எடுத்துக்கொள்ளப்படும் என்று கோர்பின் தெளிவுபடுத்துகிறார். “இது ஒரு பயங்கரமான பிரச்சாரமாக இருக்கும்,” என்று ஒப்புக்கொள்கிறேன். “நாங்கள் கொள்கைகளில், பிரச்சினைகளில் பிரியமாட்டோம்” என்று அவர் உறுதியளிக்கிறார்.

கோர்பின் குறித்து என்ன கூறப்படுகிறதோ, அது முன்னாள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதி ஆண்ட்ரூ ஃபெயின்ஸ்டீன் தலைமையில் புதிதாக உருவாக்கப்பட்ட கூட்டு அமைப்புக்கும் பொருந்தும். உலக சோசலிச வலைத் தளம் கடந்த மாதம், கூட்டாக “தொழிற்கட்சியை இடதுக்கு தள்ளுவது என்ற அதன் கூறப்பட்ட இலக்கின் பரிதாபகரமான தோல்விக்குப் பின்னர் தள்ளாடிக் கொண்டிருந்த கோர்பின் திட்டத்தின் பழைய மற்றும் தேவையற்ற ஒதுங்கிய பொருட்களின் ஒரு தொகுப்பு” என்று விவரித்தது.

“ஒரு கட்சியாக கூட்டு முறைப்படி உத்தியோகபூர்வ தொடக்கம் பொதுத் தேர்தல் முடியும் வரை தாமதப்படுத்தப்பட உள்ளது, இது பெரும்பாலும் கட்சியின் மிகவும் விரும்பப்பட்ட பிரமுகரான கோர்பினுக்கு இடமளிக்கும், அவர் தனது வடக்கு இஸ்லிங்டன் தொகுதியில் ஒரு சுயேச்சையாக போட்டியிட விரும்புகிறார் மற்றும் ஸ்டார்மர் தேர்தல் வெற்றியை சவால் செய்ய விரும்பவில்லை” என்று  நாங்கள் குறிப்பிட்டிருந்தோம்.

வேறு எங்கும் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், “கூட்டு முறைப்படி என்று அழைக்கப்படும் வேட்பாளர்களின் அரசியல் குழுவில் “முன்னாள் தொழிற்கட்சி எம்பி கிளாடியா வெப், ஷமிமா பேகத்தின் வழக்கறிஞர் தஸ்னிம் அகுன்ஜீ மற்றும் ஆண்ட்ரூ ஃபைன்ஸ்டீன்” ஆகியோருடன் கோர்பின் உறுப்பினராக இருக்கிறார்” என்று நியூ ஸ்டேட்ஸ்மேன் (New Statesman), எழுதுகிறது. “நீண்ட காலப்போக்கில் இந்த கூட்டுமுறை ஒரு அரசியல் கட்சியாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று  பத்திரிகை மேலும் கூறுகிறது.

கோர்பினின் அரசியல் கோழைத்தனம், அத்தகைய கட்சியானது, பொதுத் தேர்தல் முடிந்த பிறகு அது அமைக்கப்பட்டால், அது ஒரு “இடது” பேசும் கடையாக இருக்கும். அது தொழிற்கட்சியின் சுற்று வட்டத்தில் இயங்கும். ஆகவே, அதை எப்போதுமே மாற்றுவதற்கான முன்னோக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

பல ஆண்டுகளாக, பிரிட்டனில் உள்ள ஒவ்வொரு போலி-இடதுகளின் போக்கும் கோர்பினை தொழிற்கட்சியை மாற்றும் மனிதராக அறிவித்துக்கொண்டிருக்கிறது. ஸ்டார்மரின் கட்சிக்கு எதிராக தொழிலாளர்களை அணிதிரட்ட மறுப்பதில் அவரது வழியைப் பின்பற்றும் அதே வேளையில், அவர்கள் இன்னும் அவரது காலடியில் மயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சியும் (SEP) அதன் வேட்பாளர்களும் அதன் பங்கிற்கு, இந்த தேர்தல் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி, சிக்கன நடவடிக்கை, சர்வாதிகாரம், இனப்படுகொலை மற்றும் போருக்கு எதிராக ஒரு அரசியல் மற்றும் வர்க்கப் போராட்டத்தை தொழிலாள வர்க்கம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய புதிய தலைமையை கட்டியெழுப்புவதற்கு மிகவும் முன்னேறிய தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை தயார்படுத்துகிறது .

Loading