உலகளாவிய நிதிய அமைப்பு முறையில் சாத்தியப்படும் கொந்தளிப்பின் அறிகுறிகள்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

மார்ச் 2023 இல் மூன்று குறிப்பிடத்தக்க அமெரிக்க வங்கிகளின் தோல்வியால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்த நிதிச் சந்தைகள் கடந்த ஆண்டில் சுமூகமான காலகட்டத்தை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது, அதற்கு நிதி அதிகாரிகளின் மீட்பு நடவடிக்கைகள் தேவைப்பட்டன.

ஆனால் அதன் மேற்பரப்பிற்கு அடியில் கொந்தளிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. உலகளாவிய நிதிய அமைப்புமுறையின் அடிப்படை, நாணய மாறுபாடுகளின் அறிகுறிகள் மற்றும் நிதிய அமைப்புமுறையில் தனியார் கடனின் வளர்ந்து வரும் பங்கு பற்றிய கவலைகள், இவைகளால் 26 டிரில்லியன் டாலர்கள் அமெரிக்க கருவூல சந்தையில் தொடர்ந்து பணப்புழக்க பிரச்சனைகளை மையமாகக் கொண்டிருக்கின்றன.

கடந்த மாதம், 44 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள ஏழு வருட அமெரிக்க கருவூலப் பத்திரங்களுக்கு “நடுங்கும் ஏலம்” என்று வகைப்படுத்தப்பட்டபோது, ​​கருவூலச் சந்தையில் ஒரு அதிர்வு ஏற்பட்டது.
வாங்குவோர் பற்றாக்குறை என்பது முதன்மை விற்பனையாளர்களாக தங்கள் சந்தையின் செயல்பாட்டிற்கு முக்கியமானவை இருக்கும் பெரிய வங்கிகள், அவை பற்றாக்குறையை ஈடுசெய்து 17 சதவீத கடனை வாங்க வேண்டியிருந்தது, இது விதிமுறையை விட சற்றே அதிகமாகும்.

இதைத் தொடர்ந்து இரண்டு மற்றும் ஐந்தாண்டு கடனுக்கான ஏலத்தில் குறைந்த தேவை இருந்தபோதும் நேற்று முன்தினம் ஏலம் நடந்தது.

தேவை குறைவாக இருந்தபோது, கடனின் விலையை குறைத்ததால், 10 ஆண்டு பத்திரத்தின் வட்டி விகிதம் (இரண்டும் எதிர் திசையில் நகர்கிறது), சில வாரங்களில் இருந்ததை விட 4.63 சதவீதத்திற்கு சென்றது.

மத்திய வங்கி (Federal Reserve) எதிர்காலத்தில் வட்டி விகிதங்களில் கணிசமான குறைப்புகளைச் செய்யப் போவதில்லை என்பதை உணர்ந்ததே அதற்கு உடனடி காரணமாக இருந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சந்தைகள் 2024 இல் மத்திய வங்கியால் ஆறு சதவிதக் குறைப்புகளில் விலை நிர்ணயம் செய்தன. இப்போது அந்தக் கணிப்புகள் ஒன்று கூட இருக்காமல் போகலாம்.

நீண்ட காலப் பிரச்சினையாக இருப்பது, எப்போதும் வளர்ந்து வரும் அமெரிக்க அரசாங்கப் பற்றாக்குறைகளுக்கு நிதியளிப்பதற்காக வழங்கப்பட வேண்டிய கடனின் அளவு ஆகும்.

மார்ச் மாதம், பைனான்சியல் டைம்ஸ் (Financial Times - FT) க்கு அளித்த பேட்டியில், காங்கிரஸின் பட்ஜெட் அலுவலகத்தின் இயக்குனர் பிலிப் ஸ்வாகல் (Phillip Swagel), அமெரிக்கக் கடன் “முன் எதிர்பார்த்திராத” பாதையில் இருப்பதாகக் கூறி எச்சரிக்கை விடுத்தார். செப்டம்பர் 2022 இன் லிஸ் டிரஸ் (Liz Truss) அனுபவத்தை அவர் சுட்டிக்காட்டினார், அப்போது அவரது அரசாங்கம் நிதியில்லாத நிலையில் பெரிய வரிக் குறைப்புகளுக்கான ஒரு திட்டத்தால் இங்கிலாந்து பத்திரச் சந்தைகளை நெருக்கடிக்குள் செலுத்தியிருந்ததன் மூலம் இங்கிலாந்து வங்கியின் தலையீடு தேவைப்படுமளவுக்கு நிலைமை ஏற்பட்டிருந்தது.

அமெரிக்க அரசாங்கக் கடன் இப்போது கிட்டத்தட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 100 சதவீதத்திற்குச் சமமாக உள்ளது, இது 33 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருகிறது, மேலும் இது வரும் ஆண்டுகளில் வேகமாக அதிகரிக்கும். வட்டி செலுத்துதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதத்தை எட்டியுள்ளது, இது பெரும் மந்தநிலையைத் தொடர்ந்து 1940 க்குப் பிறகு மிக உயர்ந்த மட்டமாகும்.

பைனான்சியல் டைம்ஸ் இடம் பேசிய நிதி நிறுவனமான லசார்ட் (Lazard) இன் சந்தை மூலோபாய நிபுணர், ரொனால்ட் டெம்பிள் (Ronald Temple), நிதி நிலைமை தான் “அமெரிக்க பொருளாதாரத்திற்கான மிகப் பெரிய கவலை” என்றும் இது மேலும் நீடிக்கும் என்றும் கூறினார்.

“நான் அதை ஒரு லிஸ் ட்ரஸ் தருணமாக பார்க்கவில்லை,” என்று அவர் கூறினார், ஆனால் படிப்படியாக சிக்கல்களை உருவாக்குவது நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.

“இது அதிகமாக கொதிக்கும் பானையில் ஒரு தவளையைப் போட்டதைப் போன்றதாகும். எனக்கு இந்த ஏலத்தைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் சந்தை நடுங்கிக் கொண்டே இருப்பதே தெரிகிறது. ஏலங்கள் அனைவரின் நாட்காட்டிகளிலும் ஆபத்து காரணியாக இருக்கப்போகிறது.

கருவூல அதிகாரிகளும் முன்னணி நிதியாளர்களும் மார்ச் 2020 இன் அனுபவத்தால் கதிகலங்கிப் போயிருக்கிறார்கள், பெருந்தொற்று நோய்களின் தொடக்கத்தில் அமெரிக்க கருவூலச் சந்தை பல நாட்கள் செயலற்றிருந்தபோது, ​​அமெரிக்கக் கடனுக்காக வாங்குபவர்கள் யாரும் முன்வரவில்லை மேலும் நிதிச் சந்தைகளில் கிட்டத்தட்ட அனைவருக்கும் $4 டிரில்லியன் டாலர்கள் அளவிற்கு ஆதரவளிக்க மத்திய வங்கி முன்வர வேண்டியிருந்தது.

அமெரிக்கக் கடன் சந்தையானது வெளிநாட்டு மூலதன வரவுகளை அதிகம் சார்ந்துள்ளது, ஜப்பான், சீனா மற்றும் பிரிட்டன் ஆகியவை முக்கிய வெளிநாட்டுக் கடன்களை வைத்திருக்கின்றன. இந்த நிலையில் மிக முக்கியமான நடவடிக்கை சீன கையிருப்பில் ஏற்பட்ட சரிவு ஆகும். அது 1 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருந்து, கடந்த ஆண்டில் 40 சதவீதம் குறைக்கப்பட்ட பிறகு, 800 பில்லியன் டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. இப்போது 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்த நிலையில் வந்து அமர்ந்துள்ளன.

நாணயச் சந்தைகளும் கவலையை ஏற்படுத்துவதற்கு காரணமாக இருக்கின்றன. அமெரிக்காவில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக மற்ற நாணயங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டாலரின் உயர்வானது, மற்ற நாணயங்களின் மீது, குறிப்பாக ஜப்பானிய யென் மற்றும் யுவான் எனப்படும் சீன ரென்மின்பி ஆகியவற்றின் மீது கீழ்நோக்கி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

கடந்த மாதம் ஜப்பான் யென் மதிப்பை ஆதரிப்பதற்காக 62 பில்லியன் டாலர்கள் செலவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது அமெரிக்க டாலருக்கு எதிராக 34 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

ஜப்பான் வங்கி அதன் ஆதாய வரவு வளைவு கட்டுப்பாடு (yield curve control) என்று அழைக்கப்படும் கொள்கையை முடித்துக் கொண்டது, அதன் கீழ் அது பத்திரங்களின் மீதான வட்டி விகிதத்தைக் குறைத்துக்கொண்டது, மேலும் விகிதங்களை உயர்த்தி மிகவும் இயல்பான நிலைமைக்குத் திரும்ப விரும்புவதாக சமிக்ஞை செய்துள்ளது.

மே மாதம் மேற்கொண்ட இத் தலையீடு யென் சரிவைக் சரி செய்தது. ஆனால் அது ஒரு நீண்ட கால தீர்வாக இல்லை. ஏனெனில் UBS பொருளாதார நிபுணர் மசாமிச்சி அடாச்சி (Masamichi Adachi) குறிப்பிட்டது போல், “வட்டி விகிதங்கள் தீவிரமாக உயரத் தொடங்கும் என்று முதலீட்டாளர்கள் நினைக்கும் வரை” யென் மதிப்பு உயராது.

ஆனால், ஜப்பானிய நிதி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர், ஏனெனில் விகிதங்களின் அதிகரிப்பு பொருளாதாரத்தை மேலும் மெதுவாக நகரவைக்கும், ஏற்கனவே குறைந்த நுகர்வு செலவு காரணமாக “மந்தமானது” என்று விவரிக்கப்பட்டுள்ளது.

ரென்மின்பியின் நிலையும் கவனத்திற்கு வருகிறது. கடந்த வாரம் அமெரிக்க டாலருக்கு எதிராக ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு அது சரிந்தது, மேலும் சரிவை தடுக்க அரசுக்கு சொந்தமான சீன வங்கிகள் தலையிடுகின்றன என்பதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தியிருந்தன. இந்த நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையைத் தடுக்க சீன அதிகாரிகள் விரும்புவதாகத் தெரிகிறது.

ஆனால் அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ள வட்டி விகிதங்களுக்கு இடையிலான வேறுபாடு தொடர்ந்தும் கீழ்நோக்கிய அழுத்தத்தை செலுத்துகிறது.

கடந்த மாதம் சவுத் சைனா மார்னிங் போஸ்ட்டில் ஒரு கட்டுரை, “இன்னொரு ஆசிய நாணய நெருக்கடி வரப்போகிறதா? சீனாவின் யுவான் மீது ஒரு கண் வைத்திருங்கள் என்று தலைப்பிட்டது.

“சரிந்து வரும் யென்” என்பதை விட பெரிய ஆபத்து, “பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள சீனா யுவானின் மதிப்பிழப்பிற்கு தள்ளப்படும் சாத்தியம்” என்று அது கூறியுள்ளது.

கடந்த வாரம் ஒரு கட்டுரையில், பைனான்சியல் டைம்ஸ் (FT), வட்டி விகித வேறுபாடு காரணமாக ரென்மின்பி பலவீனமடைய அனுமதிக்க சீனாவின் மக்கள் வங்கியின் மீது சந்தை அழுத்தம் அதிகரித்துள்ளது, அமெரிக்க 10 ஆண்டு பத்திரங்களின் ஆதாயம் 4.57 சதவீதமாக உள்ளது, இது அவர்களின் சீனாவுக்கு சமமான 2.3 சதவீதத்துடன் ஒப்பிடப்பட்டது.

தற்போது சீனா மக்கள் வங்கி நாணயத்தின் கோட்டைத் தக்க வைத்திருக்கிறது. 2015ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட கொந்தளிப்பை நினைவுபடுத்துகிறது என்பதில் சந்தேகமில்லை.

ரென்மின்பியின் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, மற்ற நாடுகளில் குறிப்பாக சீனச் சந்தையைச் சார்ந்திருக்கும் ஆசியாவில், மேலும் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் மீது சீனா மலிவான பொருட்களைத் திணிப்பதாக ஏற்கனவே குற்றம் சாட்டிய அமெரிக்காவின் நடவடிக்கையை அதிகரிக்க வழிவகுக்கும். சந்தைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். பணமதிப்பு குறைப்பு அமெரிக்கா மற்றும் பிற சந்தைகளில் சீனப் பொருட்களின் விலையை மேலும் குறைக்கும்.

ஆனால் ஷாங்காயை மையமாக கொண்ட ஒரு நாணய வர்த்தகர் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்ததைப் போல, “கடந்த சில மாதங்களாக பாரியளவில் கீழ்நோக்கிய அழுத்தம் அதிகரித்துள்ளது” என்பதால், ஒரேயொரு முறை பண மதிப்பிறக்கம் என்பது சாத்தியமாகும்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற நிதி நிறுவனங்களால் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்ட உறுதியற்ற தன்மைக்கான மற்றொரு சாத்தியமான ஆதாரம் தனியார் கடன் நிதியின் வளர்ச்சியாகும்.

கடந்த வாரம் ஜேபி மோர்கன் சேஸின் (JPMorgan Chase) தலைவரான ஜேமி டிமோன் (Jamie Dimon), இந்தப் பகுதியில் (தனியார் கடன் நிதியில்) உள்ள பிரச்சனைகள் காரணமாக “ கடுமையான விளைவுகள் ஏற்படக்கூடும்” என்று எச்சரித்தார்.

நிதி வழங்குநர்களில் சிலர் “புத்திசாலித்தனமானவர்கள்” ஆனால், மற்றவர்கள் அப்படி இல்லை என்றும் “நல்லவர்கள்” இல்லாதவர்களால் அடிக்கடி பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.

2008 ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்கு முன் உருவான சூழ்நிலையை குறிப்பிடுகையில், அதிக ஆபத்து நிலையை உருவாக்கும் கடன் அடமானச் சந்தைகளில் (sub-prime mortgage markets) மிகவும் ஆபத்தான தயாரிப்புகளுக்கு கடன் தர, மதிப்பீட்டு நிறுவனங்களால் அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டதைப் போன்று, ​​இன்று இதே போன்ற சிக்கல்கள் தோன்றுவதை அவர் சுட்டிக்காட்டினார்.

“மதிப்பீட்டு முகவர்களால் மதிப்பிடப்பட்ட இந்த இரண்டு ஒப்பந்தங்களை நான் பார்த்திருக்கிறேன், மேலும் அவை எப்படி மதிப்பிடப்பட்டன என்பது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பதை நானே ஒப்புக்கொள்ள வேண்டும். இது எனக்கு கொஞ்சம் கடன் அடமானங்களை பற்றியதை நினைவூட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.

Loading