பிரெஞ்சு கோவிட்-19 இறப்புக்கள் 2021 குளிர்காலத்தில் இருந்து மிக உயர்ந்த மட்டத்தை எட்டுகின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

கடந்த வாரத்தில் பிரான்சில் இரண்டு சந்தர்ப்பங்களில் நாளாந்த இறப்புக்கள் 650 க்கு அதிகமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, பிப்ரவரி 8 அன்று 691 இறப்புக்களும், பிப்ரவரி 10 அன்று மேலும் 655 இறப்புக்களும் பதிவாகின. 7 நாள் சராசரி இறப்பு எண்ணிக்கை 324 என்பது ஏப்ரல் 1 ஆம் தேதிக்குப் பின்னைய உச்சபட்ச எண்ணிக்கையாகும், இன்று 77 சதவீத மக்களுக்கு மேலாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில், அந்த சமயத்தில் வெறும் 4.4 சதவீத மக்களுக்கே வைரஸூக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டிருந்தது.

இறப்புக்களின் நிலை, கிட்டத்தட்ட ஒரு வருட காலமாக காணப்படாத மட்டத்திலும் மற்றும் ஒட்டுமொத்த தொற்றுநோய் காலத்தில் பதிவான உச்சபட்ச எண்ணிக்கையாகவும் இருந்தாலும், எந்தவொரு பிரதான பிரெஞ்சு செய்தியிதழ்களிலோ அல்லது அரசாங்கத்தாலோ இந்த எண்ணிக்கை பற்றி குறிப்பிடப்படவில்லை.

ஜனவரி 13, 2022, வியாழக்கிழமை அன்று, வடக்கு பிரான்சின் லீல் இல் நடைபெற்ற போராட்டத்தின் போது ஆசிரியர்கள் கூடினர். பள்ளிகளில் வைரஸ் நிலைமையை அரசாங்கம் கையாளும் விதம், குழப்பமான விதிகள் மற்றும் தொலைதூரக் கற்றல் ஆகியவற்றின் மீதான தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக பிரெஞ்சு ஆசிரியர்கள் வியாழக்கிழமை நடந்த தேசிய அளவிலான வேலைநிறுத்தத்தின் போது வெளிநடப்பு செய்தனர். (AP Photo/Michel Spingler)

தினசரி நோய்தொற்றுக்கள் சராசரியாக 100,000 ஐ தாண்டி தொடர்ச்சியான ஐந்து வாரங்களுக்குப் பின்னர் நாட்டில் இறப்புக்களின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சராசரி நாளாந்த நோய்தொற்றுக்களின் எண்ணிக்கை ஜனவரி 26 அன்று 365,000 ஆக உச்சத்தில் இருந்தது இப்போது குறைந்து வந்தாலும், தற்போதைய 7 நாள் சராசரி இன்னும் 100,000 க்கு மேலாகவே உள்ளது. டிசம்பர் 31, 2021 முதல் பிரான்சில் ஓமிக்ரோன் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியதிலிருந்து, நாட்டில் 11.5 மில்லியன் மக்கள் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் பொருள், ஒரு மாதத்திற்கு சற்று கூடுதலான காலத்தில் தொற்றுநோயின் எஞ்சிய காலத்தில் பதிவான மொத்த நோய்தொற்றுக்களை விட அதிகமான தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளன என்பதாகும்.

நோய்தொற்றுக்கள் குறைவதை மேற்கோள் காட்டி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்தில் ஏற்கனவே செய்ததைப் போல, மக்ரோன் அரசாங்கமும் கோவிட்-19 க்கு எதிரான அனைத்து கட்டுப்பாடுகளையும் அகற்றுவதற்கு முன்னேறுகிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி முதல், பெரும்பாலான உட்புற அமைப்புக்களில் முகக்கவசம் அணியும் தேவை இருக்காது. பிப்ரவரி 12 அன்று, தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் பிரான்சுக்கு வந்து சேர்ந்தவுடன் தங்களுக்கு நோய்தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் பரிசோதனை முடிவை காண்பிப்பதற்கான தேவையும் நீக்கப்பட்டுவிட்டது.

இளைய போக்குவரத்து மந்திரி Jean Baptiste Djebbari இன் கூற்றுப்படி, பொது போக்குவரத்தின் போதான முகக்கவசம் அணியும் தேவையை முடிவுக்குக் கொண்டுவர இந்த வார பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

டிசம்பர் நடுப்பகுதியிலிருந்து நிகழும் கடுமையான நோய்தொற்று வெடிப்புக்கள், பிரெஞ்சு அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் மக்களைப் பாதுகாக்க ஒருபோதும் போதுமானதாக இல்லை என்பதையே காட்டுகிறது. எவ்வாறாயினும், ஆக குறைந்த பொது சுகாதார நடவடிக்கைகளின் முடிவானது மக்கள்தொகை முழுவதும் மேலும் வைரஸ் வெடித்துப் பரவ அனுமதிக்கும் என்பதுடன், பிரான்ஸ், ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் பரவலாக புழக்கத்தில் இருக்கும் பிற மாறுபாடுகளின் மற்றும் ஓமிக்ரோன் துணைப் பரம்பரைகளின் எழுச்சியையும் அனுமதிக்கும்.

தற்போதைய இறப்பு நிலைக்கு அப்பால், கோவிட்-19 இன் நீண்டகால விளைவுகளுடன் வாழ கட்டாயப்படுத்தப்படும் மில்லியன் கணக்கான மக்களுக்கு இத்தகைய உச்சபட்ச அளவுகளிலான நோய்தொற்றுக்கள் ஒரு பேரழிவாகும். தொற்றுநோயின் முதல் அலையிலிருந்து நெடுங்கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவம், மில்லியன் கணக்கானவர்கள் மூச்சுத் திணறல், மூளை செயலிழப்பு மற்றும் சோர்வு ஆகிய பாதிப்புகளுக்குள்ளாவார்கள் என்பதைக் காட்டுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, கோவிட்-19 இன் ஆரம்ப அறிகுறிகளில் இருந்து தப்பிய ஆயிரக்கணக்கானோர், வரும் ஆண்டில் காலத்திற்கு முன்னைய முடிவைச் சந்திப்பார்கள். கடந்த 12 மாதங்களில் கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து தப்பிய நபர்களிடையே உயிர் கொல்லும் நோய்கள் மிகப் பொதுவாக காணப்படுகிறது. மேலும், கோவிட்-19 நோய்தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர்கள், நோய்தொற்றுக்குப் பின்னர் 12 மாதங்களில் பக்கவாதம் மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட 20 வகையான இருதய நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு 63 சதவீதம் அதிகமாக இருப்பதாக ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.

இத்தகைய உச்சபட்ச நோய்தொற்று நிலைகள் வைரஸூக்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான ‘இயற்கை’ பாதுகாப்பை உருவாக்கியிருந்தாலும், இது வெகுஜன தொற்று கொள்கையின் விலைகொடுப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும், 15,000 தடுக்கக்கூடிய இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் கோவிட்-19 நோய்தொற்றின் நீண்டகால விளைவுகளால் பாதிக்கப்படுவார்கள்.

மேலும், பெறப்பட்ட ‘பாதுகாப்பு’ புதிய மாறுபாடுகளால் உருவாக்கப்படும் மேலதிக அலைகளுக்கு எதிராக மக்களை பாதுகாக்காது. பிரான்ஸ் மற்றும் உலகளவிலான இத்தகைய பாரிய நோய்தொற்று விகிதங்கள் வைரஸின் அதிகபட்ச பிறழ்வு விகிதத்தை உருவாக்குகின்றன. இயற்கையான மற்றும் தடுப்பூசியால் தூண்டப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை ஓமிக்ரோனை விட தீவிரமாக தவிர்க்கும் புதிய மாறுபாடுகள் தவிர்க்க முடியாமல் ஒட்டுமொத்த மக்களிடையே பரவி, எந்தளவிற்கு பாதுகாப்பைப் பெற்றிருந்தாலும் அதை குறைமதிப்பிற்கு உட்படுத்தும்.

தடுப்பூசி போடப்படாத பள்ளிக் குழந்தைகள் வைரஸின் நீண்டகால சிக்கல்களால் குறிப்பாக ஆபத்தில் உள்ளனர். இவர்கள் சமுதாயத்தில் மிகக் குறைவாக தடுப்பூசி போடப்பட்ட குழுவாக இருப்பதுடன், மிக சமீபத்திய அலையின் சுமைகளைத் தாங்கியுள்ளனர். பிரெஞ்சு பொது சுகாதார நிறுவனம் வழங்கிய சமீபத்திய தரவுகளில், ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய வாரத்தில், 10 முதல் 19 வயதினரிடையே நிகழ்வு விகிதம் ஒவ்வொரு 100,000 பேருக்கு 3,954 ஆக இருந்தது (எந்த வயதினரையும் விட உச்சமாக), மற்றும் 0 முதல் 9 வயதினரிடையே அது 2,707 ஆக இருந்தது. டிசம்பர் 2021 தொடக்கத்தில் இருந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தாலும், 12 வயதிற்குட்பட்ட பிரெஞ்சு குழந்தைகளில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் இன்னும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர்.

ஆயினும்கூட, மக்ரோன் அரசாங்கம் பள்ளிகளுக்கான எந்தவொரு கடைசி கோவிட்-19 நடவடிக்கைகளையும் நீக்குவதில் உறுதியாக உள்ளது. புதிய கோவிட்-19 நெறிமுறை பிப்ரவரி 21 முதல் நடைமுறைக்கு வரும்.

Now children and staff will only be required to show a negative self-test on Day 2 of isolation to return to classrooms. Parents will also no longer be required to pledge that their child has taken a test at all. Relying on single self-tests, which are notoriously unreliable and unfit for tracking and tracing cases, and effectively eliminating the testing rules mean French classrooms will be flooded with even larger numbers of children testing positive for COVID-19.

இப்போது குழந்தைகளும் பணியாளர்களும் மட்டும் வகுப்பறைகளுக்குத் திரும்ப, தனிமைப்படுத்திக்கொண்ட 2 நாளில் தங்களுக்கு நோய்தொற்று இல்லை என்பதை உறுதி செய்யும் சுய பரிசோதனை விபரத்தை காட்டுவது அவசியமாகும். பெற்றோர்களும் இனி தங்கள் குழந்தைகள் பரிசோதிக்கப்பட்டதற்கு உறுதியளிக்க வேண்டியது இருக்காது. மோசமான நம்பகத்தன்மையற்ற மற்றும் நோய்தொற்றுக்களை கண்காணிப்பதற்கும், தொடர்புத் தடமறிவதற்கும் தகுதியற்ற ஒற்றை சுய-பரிசோதனை முறைகளை நம்பியிருப்பது, மற்றும் பரிசோதனை விதிகளை தீவிரமாக நீக்குவது என்பது, பிரெஞ்சு வகுப்பறைகள் இன்னும் ஏராளமான குழந்தை கோவிட்-19 நோய்தொற்றாளர்களால் நிரம்பி வழியும் என்பதையே குறிக்கிறது.

ஆசிரியர் சங்கங்களின் குற்றகரமான பங்கின் காரணமாக மட்டுமே மக்ரோனால் இத்தகைய கொலைகாரக் கொள்கையை பள்ளிகளில் அமல்படுத்த முடிந்தது. தொற்றுநோய்க் காலம் முழுவதும் ஒரு பொலிஸ் படையைப் போல் செயல்பட்ட அவர்கள், பள்ளிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் அரசாங்கத்தின் சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கையை தீவிரமாக செயல்படுத்த அவர்கள் உதவும் அதேவேளையில், சாமானிய கல்வியாளர் பாதுகாப்புக் குழுவின் ஆசிரியர்களின் போராட்டத்தின் அனைத்து வெடிப்புக்களையும் தனிமைப்படுத்தி தணித்தனர். மேலும், மிக சமீபத்திய நெறிமுறையானது, கல்வி மந்திரி ஜோன்-மிஷேல் புளோங்கேரால் பிப்ரவரி 8 அன்று மூடப்பட்ட அறையில் நடத்தப்பட்ட கூட்டத்தில் ஆசிரியர் சங்கங்களால் கையொப்பமிடப்பட்ட பின்னர் தான் அறிவிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும், நூறாயிரக்கணக்கான பிரெஞ்சு குழந்தைகள் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கிய உறுப்புக்களை சேதப்படுத்தக்கூடிய வைரஸின் நீண்டகால விளைவுகளுடன் போராடுவதற்கு ஒரு முழு தலைமுறையும் பலிகொடுக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 நோய்தொற்று குழந்தைகளிடையே நீரிழிவு நோய்க்கான அபாயத்தை அதிகரிக்கிறது என்பதை ஆரம்பகட்ட சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த நீண்டகால விளைவுகளின் உண்மையான அளவு பல ஆண்டுகள் மற்றும் பல தசாப்தங்களில் மட்டுமே தெளிவாகும்.

மக்ரோன் அரசாங்கமும் மற்றும் அதன் சகாக்களும் ஐரோப்பா முழுவதும் பின்பற்றும் பாரிய நோய்தொற்றுக் கொள்கை வரலாற்றில் ஒரு மாபெரும் சமூகக் குற்றமாக உருவெடுக்கும்.

பெரும்பாலான தொற்றுநோய்களின் போது, ஐரோப்பா முழுவதுமான அரசாங்கங்கள் தணிக்கும் உத்தியைப் பின்பற்றின, உலக சோசலிச வலைத் தளம் (WSWS) இதை “வைரஸின் உண்மையான சூழலுக்கும் ஆளும் உயரடுக்கின் நிதிய நலன்களுக்கும் இடையே பேரம் பேச முயற்சிக்கும் நடவடிக்கைகளின் ஒரு அரூப தொகுப்பாகும்” என்றே விவரித்துள்ளது. ஓமிக்ரோன் மாறுபாடு ‘மிதமானது’ என்ற தவறான சாக்கைப் பயன்படுத்தி, இது கடந்த இரண்டு மாதங்களில் வெளிப்படையான சமூக நோயெதிர்ப்பு சக்தி பெருக்கும் கொள்கைக்கு மாறியுள்ளது.

500,000 ஐ எட்டிய நாளாந்த நோய்தொற்று புள்ளிவிபரங்கள் குறித்து பதிலளிக்க அரசாங்கம் ஒரு விரலைக் கூட உயர்த்தாத நிலையில், இந்த மாற்றத்தின் விளைவுகளை எதிர்கொண்ட மிகத் தீவிரமான உதாரணங்களில் பிரான்ஸ் ஒன்றாகும். அதிக தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையே கூட நோய்தொற்றுக்கள் மிக அதிகமாக உள்ளன, மேலும் கடுமையான நோய்த்தன்மை மற்றும் இறப்பின் அளவுகள் பாரிய தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை சாத்தியப்படுவதற்கு முன்னைய அளவை எட்டியுள்ளன.

பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை, மட்டுப்படுத்தப்பட்ட சுகாதார நடவடிக்கைகள் கூட என்ன விலைகொடுத்தும் தவிர்க்கப்பட வேண்டும். இப்போதிருந்து, புதிய நோய்தொற்று எழுச்சிகளையும் மிக ஆபத்தான மாறுபாடுகளையும் எதிர்கொள்ளும் நிலையில் கூட, தொழிலாள வர்க்கத்திடமிருந்து இலாபத்தை பிழிந்தெடுப்பதில் எந்தத் தடையையும் அவர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

சனிக்கிழமை பாரிஸை ஆக்கிரமிக்க முயன்ற பாசிச-ஒழுங்கமைப்பு மற்றும் “சுதந்திர பேரணி” க்கு பதிலளிப்பதில் பிரெஞ்சு ஆளும் வர்க்கம் ஒன்றுபட்டுள்ளது. இந்த சிறிய இயக்கம் பாரிஸ் காவல்துறையால் எளிதில் முறியடிக்கப்பட்டது என்றாலும், கோவிட்-19 க்கு எதிரான நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அதன் கோரிக்கைகள் பாசிச ஜனாதிபதி வேட்பாளர் எரிக் செமூர் முதல் போலி இடது வேட்பாளர் ஜோன் லூக் மெலோன்சோன் வரையிலான ஆளும் வர்க்கத்தின் அனைத்து பிரிவுகளாலும் மற்றும் அதன் பிரதிநிதிகளாலும் அனுதாபத்துடன் வரவேற்கப்பட்டன. மக்ரோன் கூட வெகுஜன தொற்று கொள்கைக்கான அவர்களின் அழைப்புக்கள் “சட்டபூர்வமானது” என்று விவரித்தார்.

பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கம், அடுத்தடுத்து எழும் நோய்தொற்று அலைகளையும் ஆண்டுக்கு ஆண்டு நிகழும் பாரிய மரணங்களையும் ஏற்கக் கூடாது. ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் பின்பற்றப்பட்ட தணிப்பு மூலோபாயத்தின் முறிவானது, வைரஸை ஒழிப்பதற்கும் மில்லியன் கணக்கான உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் ஒரு விஞ்ஞானபூர்வ கொள்கையை அமல்படுத்துவதற்கு போராடும் வகையில், பிரான்ஸ் மற்றும் சர்வதேச அளவில் சாமானிய தொழிலாளர் பாதுகாப்பு குழுக்கள் உருவாக்கப்படுவதன் அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது, முதலாளித்துவ வர்க்கத்தின் சலுகைகள் மீது ஒரு முன்னணித் தாக்குதலையும், தொழிற்சங்கங்கள் மற்றும் போலி இடதுசாரிக் கட்சிகளில் உள்ள அதன் அரசியல் சேவகர்களிடமிருந்து முறிவையும் ஏற்படுத்துகிறது.

Loading