இலங்கையில் சோ.ச.க./IYSSE நடத்தும் பொதுக்கூட்டம்: "உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை விடுதலை செய்!"

இந்த மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கு காணலாம்.

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பும், “உக்ரேனிய சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக் விடுதலை செய்!” என்ற தலைப்பில் ஜூலை 7 ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றன.

ஏப்ரல் 25 அன்று, போக்டன் சிரோடியுக் உக்ரேனிய பாதுகாப்பு சேவையால் (SBU) சோடிக்கப்பட்ட தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவர் உக்ரேன் மற்றும் ரஷ்யா உட்பட முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் செயல்படும் ட்ரொட்ஸ்கிச அமைப்பான போல்ஷிவிக்-லெனினிஸ்டுகளின் இளம் காவலர்கள் அமைப்பின் (YGBL) தலைவர் ஆவார்.

தற்போது நிகோலேவ் (மைகோலாய்வ்) நகரில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் கடுமையான சூழ்நிலையில் அடைக்கப்பட்டுள்ள அவர், பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், ஆயுள் தண்டனைக்கு சமமான மரண தண்டனையை எதிர்கொள்வார்.

வை.ஜி.பி.எல். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் (ICFI) அரசியல் ரீதியாக இணைந்துள்ள அமைப்பாகும். போக்டனை உடனடியாக விடுவிக்கக் கோரி நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினால் முன்னெடுக்கப்படும் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியே கொழும்புக் கூட்டம் ஆகும்.

போக்டன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான உண்மையான காரணம், அவர் ஒரு சோசலிச சர்வதேசியவாதியாக, செலென்ஸ்கி மற்றும் புட்டினின் முதலாளித்துவ ஆட்சிகளையும் மற்றும் இலட்சக் கணக்கான உக்ரேனியர்கள் மற்றும் ரஷ்யர்களின் உயிர்களை காவுகொண்ட, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராக நடந்து வரும் அமெரிக்க-நேட்டோ போரையும் கொள்கை ரீதியாக எதிர்ப்பதே ஆகும். போக்டன் போருக்கு எதிராக ரஷ்யா, உக்ரேன் மற்றும் ஏனைய முன்னாள் சோவியத் குடியரசுகளில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் சோசலிச ஐக்கியத்துக்காகப் போராடுபவர் ஆவார்.

போக்டனுக்கு எதிரான தேசத்துரோக குற்றச்சாட்டுகள் அவர் புட்டின் ஆட்சியின் முகவர் என்ற போலியான கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டவை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அவர் எழுதிய கட்டுரைகள் மற்றும் உரைகளையே அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், அந்த ஆக்கங்களே குற்றச்சாட்டுக்களின் மோசடித் தன்மையை மேலும் அம்பலப்படுத்துகின்றன. உலக சோசலிச வலைத் தளம், வை.ஜி.பி.எல், மற்றும் போக்டனும் புட்டின் ஆட்சியை உறுதியுடன் கொள்கைப் பிடிப்புடன் அரசியல் ரீதியாக எதிர்ப்பது இந்தக் கட்டுரைகளில் நன்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

25 வயதான தோழர் போக்டனுக்கு எதிரான சூழ்ச்சிகள் மற்றும் சிறைவைப்பும் ஒரு தனிநபர் மீதான ஜனநாயக விரோதத் தாக்குதல் மட்டுமன்றி, ஒட்டுமொத்த சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் மீதுமான தாக்குதல் ஆகும்.

போக்டானின் விடுதலைக்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழவின் பிரச்சாரம், உலகம் முழுதும் தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் கலைஞர்களினதும் பரந்த ஆதரவைப் பெற்று வருகிறது. ஜூன் 13 அன்று, அனைத்துலகக் குழுவானது இஸ்தான்புல், லண்டன், பாரிஸ், பேர்லின், வாஷிங்டன் டி.சி., டொராண்டோ, கன்பரா மற்றும் சிட்னியிலும் போக்டன் எதேச்சதிகாரமாக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்தும் அவரை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும் உக்ரேனிய தூதரகங்கள் மற்றும் துணைத் தூதரகங்கள் முன்னால் சர்வதேச அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட மறியல் போராட்டங்களை நடத்தியது.

மாணவர்கள், கல்விமான்கள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களையும் போக்டன் சிரோடியுக்கை பாதுகாப்பதற்காக கொழும்பில் நடைபெறும் இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும், அவரை சிறையில் இருந்து உடனடியாக விடுதலை செய்வதற்கான எங்கள் பிரச்சாரத்தில் இணைந்துகொள்ளுமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

நாள் மற்றும் நேரம்: ஜூலை 7, ஞாயிறு, மாலை 3 மணி.

இடம்: தேசிய நூலக கேட்போர் கூடம்

14 சுதந்திர சதுக்க ஒழுங்கை

கொழும்பு 07

உக்ரேனிய சோசலிஸ்டும் போர்-எதிர்ப்பு செயற்பாட்டாளருமான போக்டன் சிரோட்டியுக்கின் விடுதலையைக் கோருங்கள்!

Loading