பிரான்சின் முன்கூட்டிய தேர்தல்கள்: நவ-பாசிசவாத தேசிய பேரணிக் கட்சியானது வங்கியாளர் மந்திரிகளுக்கு வாக்குறுதியளிப்பதுடன் வேலைநிறுத்தத்திற்கான உரிமையையும் அச்சுறுத்துகிறது

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

ஜூலை 7 தேர்தல்களின் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுக்கு முன்னதாக, அதிகாரத்தை நெருங்கிவிட்டதாக உணர்ந்து, நவ-பாசிசவாத தேசிய பேரணி (Le Rassemblement national – RN) கட்சி, அதன் பொய்யான ஜனரஞ்சக வார்த்தைப் பிரயோகங்களுடன், நிதிச் சந்தைகளில் வங்கிகளுக்கு சேவை செய்யும் ஒரு பாசிச சர்வாதிகாரமாக இருக்கும் என்பதற்கான வெளிப்படையான அடையாளங்களைச் சேர்த்து வருகிறது.

மரின் லு பென்னின் பரிவாரங்களில் இருந்த ஒரு அநாமதேய உறுப்பினர் FranceInfo செய்திக்கு ஒரு நேர்காணலை வழங்கியதோடு, RN ஆனது தேர்தலில் வெற்றி பெற்றால் அது வங்கியாளர்களை அதிகாரத்திற்குக் கொண்டு வரும் என்று விளக்கினார். அவரைப் பொறுத்தவரை, RN பொருளாதார மந்திரிக்கு “தீவிர வலதுசாரி கட்சியைச் சேராத ஒரு நிபுணரை” நியமிக்கும். பிரெஞ்சு பங்குச் சந்தை குறியீடு CAC-40 பல வாரங்களாக வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், FranceInfo மேலும் கூறியது:

அதே ஆதாரமானது எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை, மாறாக நிதியியல் சந்தைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்க வடிவமைக்கப்பட்ட பல சுயவிவரங்களைக் குறிப்பிடுகிறது, கடந்த கால நிலைப்பாடுகள் மரியாதைக்கான உத்தரவாதங்களாக பார்க்கப்படலாம். இவர்களில் ஒரு முன்னாள் முக்கிய வங்கியாளர் அல்லது பிரெஞ்சு நிதி மந்திரி ஒருவர் அடங்குவர்.

நவ-பாசிசவாதிகள் வேலைநிறுத்த உரிமையையும் அச்சுறுத்துகின்றனர், இது தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இன்றியமையாததாகும்.. 1946 இல், நாசிசத்துடன் ஒத்துழைத்த முதலாளித்துவ அரசை தூக்கி எறியாமல், தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முடியும் என்று நம்ப வைப்பதற்காக, இந்த உரிமை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது. விச்சி ஆட்சி வர்க்கப் போராட்டத்தைத் தடை செய்திருந்ததோடு, 1941 இல் சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி படையெடுப்புக்குப் பின்னர், கம்யூனிச நடவடிக்கையை மரண தண்டனைக்குரியதாக ஆக்கியது.

ஆனால் 1946ல் முதலாளித்துவ அரசியலமைப்பை எதிர்த்த நான்காம் அகிலம் சரியானது என்பதை வரலாறு காட்டுகிறது. முன்கூட்டிய தேர்தலுக்கான மக்ரோனின் அழைப்பு, ஜனநாயக பாசாங்குத்தனங்களை முறித்துக் கொண்டு ஒரு சர்வாதிகாரத்தைத் திணிப்பது என்ற ஆலோசனை குறித்து முதலாளித்துவ வர்க்கத்தில் ஒரு விவாதத்தைப் பிரதிபலிக்கிறது.

மே மாதத்தில், மரீன் லு பென்னின் மருமகள் மரியோன் மரேச்சல் (Marion Maréchal), வேலைநிறுத்தங்களைக் கண்டிக்க பாசிசவாத பில்லியனர் வின்சென்ட் பொல்லோரே (Vincent Bolloré) க்கு சொந்தமான CNews தொலைக்காட்சிக்கு அழைக்கப்பட்டார். “வேலைநிறுத்த உரிமை மீது கடுமையான நிபந்தனைகளுக்கு” அழைப்புவிடுத்த அவர், வேலைநிறுத்தங்கள் பிரெஞ்சுக்காரர்களை “பணயக் கைதிகளாக பிடிக்கிறது” என்று விவரித்தார், “குறைந்தபட்சம், பள்ளி விடுமுறைகள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் வேலைநிறுத்தம் செய்வதற்கான உரிமையை நாம் தடை செய்ய வேண்டும்,” என்றார்.

மக்ரோனின் பொலிசார் பத்தாயிரக்கணக்கான தொழிலாளர்களைக் கைது செய்துள்ளனர் மற்றும் டசின் கணக்கானவர்களை குருடாக்கியுள்ளனர் அல்லது கொன்றுள்ளனர், ஆனால் மரேச்சல் அதிக ஒடுக்குமுறையை இவ்வாறு கோரியிருக்கிறார்:

“நம் நாட்டில் தொழிற்சங்க சீர்திருத்தம் என்ற மாபெரும் பிரச்சினையை எழுப்புவதற்குப் பதிலாக, ஒவ்வொரு முறையும் இந்த மிரட்டலுக்கு அடிபணியும் ஒரு அரசாங்கத்தை நாம் ஏன் கொண்டிருக்கிறோம் என்பது எனக்குப் புரியவில்லை.” “இடதுசாரி அல்லது அதி-இடது” தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களைத் தூண்டாமல் இருக்கும் வகையில், ஆட்சிச் சேவை சட்டப்பிரிவு திருத்தி எழுதப்பட வேண்டுமென்றும் அவர் கோரினார்.

விச்சி ஆட்சியின் ஒரு பாதுகாவலரும், எரிக் சிமோரின் (Eric Zemmour) மீள்வெற்றிகொள்ளல் (Reconquête) கட்சியின் முன்னாள் தலைவருமான மரேச்சல், மீள்வெற்றிகொள்ளல் கட்சியை விட்டு வெளியேறி RN உடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளார்.

ரஷ்யாவுடனான ஒரு போர் குறித்த அதன் தயக்கங்களை RN மென்மையாக்கி வருகிறது. உக்ரேனிய போருக்கு முன்னதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் லு பென் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளை RN இன் சாத்தியமான பிரதம மந்திரி ஜோர்டான் பார்டெல்லா (Jordan Bardella) ஏற்கனவே ஒரு “தவறு” என்று அழைத்துள்ளார்.

இப்போது மக்ரோனுக்கு மிகவும் அமைதியான மாற்றீடாக தன்னைக் காட்டிக் கொள்ள லு பென் செய்யும் முயற்சிகள் பாசாங்குத்தனமான பொய்களாகும். வியாழனன்று, Le Télégramme க்கு அளித்த ஒரு நேர்காணலில், பார்டெல்லா பிரதம மந்திரியானவுடன் ரஷ்யாவுடனான ஒரு போரைத் தடுப்பார் என்று கூறியதுடன், இவ்வாறு பரிந்துரைத்தார்:

ஜனாதிபதியைப் பொறுத்தவரை, ஆயுதப் படைகளின் தலைவர் என்பது ஒரு கௌரவ பட்டமாகும், ஏனெனில் பிரதமரே பணப் பையை வைத்திருக்கின்றார். ஜோர்டானுக்கு அவருடன் சண்டையிடும் எண்ணம் இல்லை. ஆனால், அவர் சில சிவப்பு கோடுகளை வரைந்துள்ளார். உக்ரேன் விவகாரத்தில், ஜனாதிபதியால் படைகளை அனுப்ப முடியாது.

உண்மையில், RN இன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போரைத் தடுக்கும் நோக்கமோ அல்லது அதிகாரமோ இல்லை. அரசியலமைப்பு ஜனாதிபதிக்கு இராணுவத் தலைமையின் கட்டுப்பாட்டை வழங்குவதுடன், விதி 16ன் கீழ், பாராளுமன்றம் மற்றும் மந்திரிசபை இல்லாமல் ஆட்சி செய்யும் அதிகாரத்தையும் வழங்குகிறது. உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்புவதற்கு பாரியளவில் விரோதமாக உள்ள தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே ரஷ்யாவுக்கு எதிரான போர் விரிவாக்கதை நிறுத்த முடியும்.

பிரான்சில் பல தொழிலாளர்களும் RN இன் வாய்வீச்சை, குறைந்தபட்சம் ரஷ்யாவை நோக்கியும், மக்ரோன் மற்றும் ஊடகங்களால் வர்ணிக்கப்படும் “இடது” களை காட்டிலும் குறைந்த போர்வெறி கொண்டதாக இருக்கிறது என்பதைக் கவனித்த பின்னர், RN க்கு வாக்களிக்க தயார் செய்து வருகின்றனர். ஆனால் இவை வரலாற்றுப் பொய்களை அடிப்படையாகக் கொண்ட பிரமைகளாகும். RN ஆனது ரஷ்யாவினதோ, சமாதானத்தினதோ அல்லது அனைத்திற்கும் மேலாக தொழிலாளர்களினதோ நண்பனல்ல.

ரஷ்யாவை நூற்றுக்கணக்கான சிறிய நாடுகளாக துண்டாடுவதற்காக அதன் மீது ஒரு “மூலோபாய தோல்வியை” திணிப்பதற்கு நேட்டோ மற்றும் அதன் தலைவர்கள் வகுத்தளித்த மூலோபாயத்தை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அங்கீகரிக்கிறது. ஏனென்றால் பிரெஞ்சு வங்கிகள் அதிலிருந்து ஆதாயமடைகின்றன. ரஷ்யாவுடனான ஒரு நவ-காலனித்துவ போர், 2003 இல் ஈராக்கின் சட்டவிரோத ஆக்கிரமிப்பையும் விஞ்சும் வகையில், சூறையாடலுக்கு முன்னொருபோதும் இல்லாத வாய்ப்புகளை வழங்கும் என்று அவை நம்புகின்றன. ரஷ்ய எண்ணெய் மற்றும் கனிமங்களைக் கைப்பற்றிய பின்னர், நேட்டோ மத்திய கிழக்கில் அல்லது சீனாவிற்கு எதிராக நவகாலனித்துவ போர்களைத் தொடங்கும் நிலையில் இருக்கும்.

RN இதற்கான ஒரு தடையல்ல, மாறாக, 20 ஆம் நூற்றாண்டில் அதன் மூதாதையர்களைப் போலவே, வெளிநாடுகளில் நவகாலனித்துவ போர்களிலும் மற்றும் உள்நாட்டில் வர்க்கப் போர்களிலும் நிதி மூலதனத்தின் ஒரு சேவகனாக செயற்படும்.

தொழிலாளர்களால் வாக்குப் பெட்டியின் மூலமாக பாசிசவாத அபாயத்தை நிறுத்த முடியாது. மாறாக போர் மற்றும் முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில், ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தில் அணிதிரள்வதன் மூலமாக மட்டுமே முடியும். தொழிலாளர்கள் முதலில் தங்கள் ஆதரவையும் வாக்குகளையும் முதலாளித்துவ ஸ்தாபகத்தில் உள்ள லு பென்னின் போட்டியாளர்களுக்கு வழங்க வேண்டும் என்ற சந்தர்ப்பவாத வாதங்கள் ஒரு பிற்போக்குத்தனமான பொறியாகும்.

ஏற்கனவே 2018 இல் விச்சி சர்வாதிகாரி பெத்தானை ஒரு “மாபெரும் சிப்பாய்” என்று அழைத்த மக்ரோன், முழுமையான போருக்கு தயாரிப்பு செய்து, உக்ரேனுக்கு துருப்புகளை அனுப்ப பிரச்சாரம் செய்து வருகிறார். மேற்கு ஐரோப்பாவின் 88 சதவீதமான மக்கள் மற்றும் 94 சதவீதமான அமெரிக்கர்கள் உக்ரேனில் பேச்சுவார்த்தை மூலம் சமாதானத்தை விரும்புகிறார்கள் மற்றும் போரை எதிர்க்கிறார்கள். மக்கள் எதிர்ப்பையும் மீறி இந்தப் போரை நடத்துவது என்பது மக்களுக்கு எதிராக ஆட்சி புரிவதை அர்த்தப்படுத்துகிறது. அதனால் தான் மக்ரோன் ஒரு சர்வாதிகாரியைப் போல ஆட்சி நடத்த ஷரத்து 16 ஐ கையிலெடுக்க அச்சுறுத்தி வருகிறார்.

சோசலிஸ்ட் கட்சி, பப்லோவாத NPA, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மற்றும் ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியாத பிரான்ஸ் கட்சி ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட புதிய மக்கள் முன்னணி இயந்திரங்களுக்கு இந்த கடுமையான எச்சரிக்கைகள் பொருந்தும். இந்தக் கூட்டணி ரஷ்யாவுடனான போரையும் ஆதரிக்கிறது மற்றும் அதன் திட்டத்தில் “நீல தலைக்கவசங்கள்” என்ற மாறுவேடத்தில் துருப்புக்களை உக்ரேனுக்கு அனுப்ப அழைப்பு விடுக்கிறது. ஆனால் ஏகாதிபத்திய போருக்கான இவர்களின் ஆதரவு பிரான்சில் சர்வாதிகார அபாயத்திற்கு எதிராக போராடப் போவதில்லை என்பதை தெளிவாக காட்டுகிறது.

2022 ஜனாதிபதித் தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் மயிரிழையில் தோல்வியடைந்த பின்னர், மக்ரோன் அல்லது மரின் லு பென்னின் கீழ் பிரதமராக இருப்பதை அவர் ஏற்றுக் கொள்ளப் போவதாக மெலோன்சோன் ஏற்கனவே அறிவித்துள்ளார். இப்போது, ரஷ்யாவுக்கு எதிரான ஒரு பரந்த போர் தொழில்துறைக்கு நிதியாதாரம் வழங்க தேசிய ஐக்கியம் உருவாக்கப்பட வேண்டும் என்று பிரான்சுவா ருஃபன் (François Ruffin) போன்ற அடிபணியாத பிரான்ஸ் இயக்கத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ருஃபன் Le Monde பத்திரிகைக்கு பின்வருமாறு கூறினார்:

மிக எளிமையாக, போர்த் தொழிலிலிருந்து தொடங்குவோம். வெடிமருந்துகள், பீரங்கிகள், விமானங்கள், முழு அளவிலான ஆயுதங்கள், தளவாடங்கள் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றின் மீது ஐரோப்பா அதன் இறையாண்மையை மீண்டும் பெற வேண்டும், அது இனியும் அமெரிக்கர்களை சார்ந்திருக்க கூடாது. அதற்கான வழிவகைகளை தனக்குத்தானே கொடுத்துக் கொள்கிறது... ஒரு போர் முயற்சிக்கு தேசத்தின் ஒற்றுமை உறுதி செய்யப்பட வேண்டும்.

போர் மற்றும் அதிவலதின் வளர்ச்சிக்கு முன்னால் தேசிய ஐக்கியத்திற்கு அழைப்பு விடுக்கும் முதலாளித்துவ-சார்பு ஜனரஞ்சகவாதிகள் பிற்போக்குவாதிகளாவர். 20 ஆம் நூற்றாண்டில், இந்த சுயவிவரம் பெல்ஜியத்தில் ஒரு ஹென்றி டி மேன் (Henri de Man) அல்லது பிரான்சில் ஒரு மார்செல் டெயட் (Marcel Déat) ஒத்துழைப்புக்கு வழிவகுத்தது. 21 ஆம் நூற்றாண்டில், என்னதான் அரசியல்-இராணுவ அபாயங்கள் இருந்தாலும், ருஃபனும் புதிய மக்கள் முன்னணியின் பல அதிகாரத்துவத்தினரும் ஒரு வன்முறையான வலதுசாரி பாதையைப் பின்பற்றுவார்கள்.

20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் ஏன் பாசிசத்திற்கு எதிராக ஒரு பாரிய எதிர்ப்பு இயக்கத்தை கட்டியெழுப்பியது என்பதை நினைவூட்டும் அனுபவங்களை தொழிலாளர்களே பெறுவார்கள். தொழிலாள வர்க்கத்தை இந்த அபாயத்தைக் குறித்து விழிப்படையச் செய்வதும், அதை அதிகாரத்துவங்களில் இருந்து சுயாதீனமாக அணிதிரட்டுவதும், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தையும் ஸ்ராலினிசம் மற்றும் புதிய மக்கள் முன்னணிக்கு எதிராக சோசலிசப் புரட்சிக்கான ஒரு போராட்டத்தை கட்டியெழுப்புவதுமே தீர்மானகரமான கேள்வியாகும்.

Loading