பெருநிறுவன சார்பு ஊடகங்கள் அசோவ் படைப்பிரிவிற்கு பிரச்சாரம் செய்கின்றன

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்

உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஒரு மாதத்திற்கும் மேலாக, மேற்கத்திய பெருநிறுவன ஊடகங்கள் இப்போது பாசிச அசோவ் படைப்பிரிவில் இருந்து பெறப்பட்ட தகவல்களை விமர்சனமின்றி பரப்புகின்றன.

2014 அமெரிக்க ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சின் ஆட்சிக் கவிழ்ப்பின் போது, கியேவ் மீதான மேற்கத்திய ஊடகங்களின் பொதுவான நிலைப்பாடு, யானுகோவிச் அரசாங்கத்தை வீழ்த்துவதில் பாசிச சக்திகள் ஆற்றிய முக்கிய பங்கை விமர்சிக்காதது, குறைத்து மதிப்பிடுவது அல்லது புறக்கணிப்பதாக இருந்தது.

மரியுபோவில் உள்ள அசோவ் படைப்பிரிவின் கவச வாகனங்கள் [Credit: Wanderer777/CC BY-SA 4.0/Wikimedia] [Photo by Wanderer777 / CC BY-SA 4.0]

அசோவ் படைப்பிரிவு தோன்றிய ஸ்வோபோடா கட்சி மற்றும் வலது பிரிவு (Right Sector) உட்பட இந்த சக்திகள், இரண்டாம் உலகப் போரின் போது யூதர்கள், போலந்துகள் மற்றும் உக்ரேனிய குடிமக்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான மக்களின் படுகொலைகளுக்கு காரணமான OUN-B மற்றும் UPA போன்ற நாஜி ஒத்துழைப்பு அமைப்புகளின் மரபுகளில் வெளிப்படையாக தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றன.

உக்ரேனில் முக்கிய நவ-நாஜிப் படைகள் இருப்பது மிகவும் வெளிப்படையான ஒன்றாகும். 2014 ஆட்சிக் கவிழ்ப்பு மற்றும் கிழக்கு டொன்பாஸ் பிராந்தியத்தில் உள்நாட்டுப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, Time, USA Today, New York Times மற்றும் பிற ஊடகங்கள் உண்மையாகவே உக்ரேனின் ஆயுதப் படைகளில் மிகவும் அர்ப்பணிப்புள்ள துருப்புக்கள் நவ நாஜிக்கள் என்பதை ஒப்புக்கொண்டு செய்திகளை வெளியிட்டன.

2015 USA Today கட்டுரையில் “தன்னார்வ உக்ரேனியப் பிரிவு நாஜிகளை உள்ளடக்கியது” என்ற தலைப்பில் அசோவ் படைப்பிரிவின் செய்தித் தொடர்பாளர் அந்ரே டியாஷென்கோ அசோவின் உறுப்பினர்களில் 10 முதல் 20 சதவீதம் பேர் நவ நாஜிக்கள் என்று ஒப்புக்கொண்டார்.

Time இதழின் ஜனவரி 2021 கட்டுரையில் “வெள்ளை-மேலாதிக்கவாத ஆயுதக்குழு எவ்வாறு முகநூலைப் பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை தீவிரவாதிகளாக்க மற்றும் பயிற்றுவிக்க பயன்படுத்துகிறது” என்பது அசோவின் நவ-நாஜி கருத்தியலையும் வரலாற்றையும் நிராகரிக்க முடியாததாக்குகின்றது.

அசோவ் நிறுவனர் ஆண்ட்ரி பிலெட்ஸ்கி மற்றும் அவரது உக்ரேன் குழுவின் முன்னாள் தேசபக்தர் பற்றி Time இதழ் பிலெட்ஸ்கியின் புனைப்பெயர் Bely Vozhd அல்லது வெள்ளை ஆட்சியாளர் என்பதுடன் அவரது வேலைத்திட்டமானது நாஜி சித்தாந்தத்திலிருந்து நேரடியாகப் எடுக்கப்பட்டது. உக்ரேனிய தேசியவாதிகள், 'யூதர்களின் தலைமையிலான கீழ்த்தரமான மனிதர்களுக்கு எதிரான ஒரு சிலுவைப் போரில் உலகின் வெள்ளை நாடுகளை அவர்களின் உயிர்வாழ்வதற்கான இறுதிப் போரில் வழிநடத்த வேண்டும்' எனக் குறிப்பிட்டது. கீழ்த்தரமான மனிதர்கள் என்பது நாஜி பிரச்சாரத்தில் மூலவேர்களைக் கொண்ட 'கீழ்மனிதர்கள்' என்பதற்கான ஜேர்மன் சொல்லாகும்.'

உக்ரேனின் இராணுவம் மற்றும் துணை இராணுவத்தில் பில்லியன் கணக்கான ஆயுதங்களை அமெரிக்கா செலுத்தி வந்தாலும், அசோவ் தொடர்பான கட்டுரைகள் பெரும்பாலும் அசோவின் ஆதரவில் இருந்து அமெரிக்காவை தூர விலத்திவைக்க முயற்சித்தன. எனவே, உக்ரேனின் தீவிர வலதுசாரி ஆயுதக்குழுக்கள் பற்றிய 2015 நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை, “அசோவ் குழுவின் உறுப்பினர்களுக்கு [இராணுவ] அறிவுரை வழங்குவதில் இருந்து அமெரிக்கர்கள் குறிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளனர்” என்று விமர்சனமின்றி அறிவித்து அதன் வாசகர்களுக்கு உறுதியளிக்க முயன்றது.

அசோவ் படைப்பிரிவின் இணையதளத்தில் நீக்கப்பட்ட இடுகை, 2017 இல் அமெரிக்க மற்றும் கனேடிய இராணுவத்தின் பிரதிநிதிகளுடன் அதன் உறுப்பினர்களைக் காட்டுகிறது

உண்மையில், அசோவ் படைப்பிரிவின் உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிப்பதில் அமெரிக்க அதிகாரிகள் நீண்ட காலமாக ஈடுபட்டு வருவதை படங்கள் காட்டுகின்றன.

இப்போது, உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் பினாமிப் போருடன், ஊடகங்களின் இத்தகைய பாசாங்குகள் அனைத்தும் கைவிடப்பட்டுள்ளன. அசோவ் படைப்பிரிவு உக்ரேனின் தேசிய படைப்பிரிவில் ஒருங்கிணைக்கப்பட்டு, குறிப்பாக முக்கிய மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த தெற்கு உக்ரேனின் ரஷ்ய மொழி பேசும் நகரமான மரியுபோலில் இப்போது போரில் முக்கிய பங்கு வகிக்கிறது.

மேற்கத்திய ஊடகங்கள் போர் பற்றிய ஏகாதிபத்திய பிரச்சாரத்தை முன்னெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அசோவ் படைப்பிரிவில் இருந்து வரும் 'தகவல்கள்' இப்போது நேரடியாக மேற்கத்திய பார்வையாளர்களுக்கு இவர்களால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. பெரும்பாலும் நவ-நாஜிக்களுடன் அதன் உறவுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

NBC இன் தலைமை வெளியுறவுக் கொள்கை நிருபர் ரிச்சர்ட் ஏங்கல், பெப்ரவரி தொடக்கத்தில் அசோவ் படைப்பிரிவிற்கு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கும் முதலுதவி செய்வதற்கும் மரியுபோல் வாசிகளுக்குப் பயிற்சி அளித்ததைக் காட்டியபோதும், இப்போது அசோவை மூடிமறைக்க வழிவகுத்தார். இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் SS உடன் தொடர்புடைய Wolfsangel முத்திரையை அசோவ் பயன்படுத்தியது தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருந்த போதிலும், ஏங்கல் அசோவை பற்றிக் குறிப்பிடத் தவறிவிட்டார்.

மார்ச் 22 அன்று, CBS News அசோவின் இனை பாதுகாக்கும் பின்வரும் தலைப்பில் “அசோவ் படைப்பிரிவு: உக்ரேனில் ‘நாஜிக்களுக்கு’ எதிரான போருக்கு புட்டின் ஒரு தவறான அடித்தளத்தை உருவாக்கினார்” என வெளியிட்டது.

இக்கட்டுரையில், CBS அசோவை பாதுகாப்பதில் நிபுணராக மோதல் புலனாய்வுக் குழுவின் ஆய்வாளரான ருஸ்லான் லெவியேவை மேற்கோள் காட்டியது.

லெவிவ் CBSக்கு 'உக்ரேனில் நாஜி படைப்பிரிவு இல்லை' எனத் திட்டவட்டமாக பொய் கூறினார்.

'அங்கு அசோவ் படைப்பிரிவு உள்ளது ... இந்த படைப்பிரிவில் பல ஆயிரம் பேர் உள்ளனர். இது உண்மையில் தேசியவாத மற்றும் தீவிர வலதுசாரிக் கருத்துக்களைக் கடைப்பிடிக்கும் பல உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவாகும். ஆனால் இது மிகவும் தயாரிக்கப்பட்ட மற்றும் போருக்கு ஏற்ற பிரிவுகளில் ஒன்றாகும் என்பதால் கூடுதலானோர் அதில் இணைகிறார்கள்' என்று லெவிவ் CBSக்கு உறுதியளித்தார்.

பின்னர், ஏப்ரல் 1 அன்று, CNN இன் எரின் பேர்னெட் அறிமுக நிகழ்ச்சியில், அசோவ் படைப்பிரிவு தலைவர் பொக்டான் குரோடேவிச் ரஷ்யப் படைகள் 'தெருக்களில் சடலங்களின் மலைகளை' உருவாக்கியதாகக் கூறியதாகவும், குரோடேவிச் 'தீவிர தேசியவாத தீவிர வலதுசாரி படைப்பிரிவின் ஒரு பகுதி' என்று குறிப்பிட்ட ஒரு ஒளிப்பதிவை காட்டியது.

ஆனால் இந்த வெளிப்படுத்தல் பேர்னெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அவர் குரோடேவிச் மீதான குற்றச்சாட்டுகளை உண்மையானது என மீண்டும் கூறினார். மரியுபோல் குண்டுவெடிப்பு பரவலாக மேற்கோள் காட்டப்பட்ட 300 என்பதைவிட 100 பேர் கூடுதலாக 400பேர் கொல்லப்பட்டதாக குரோடேவிச்சின் கூற்றையும் பேர்னெட் எடுத்துக் கூறினார்.

மார்ச் 29 அன்று, CNN“ஒரு தீவிர வலதுசாரி படைப்பிரிவு உக்ரேனின் எதிர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் நவ-நாஜி வரலாறு புட்டினால் சுரண்டப்பட்டது' என்ற ஒரு செய்தியை வெளியிட்டது. அசோவை ஒரு 'திறமையான போரிடும் சக்தியாக' பாதுகாத்து, அதன் நவ-நாஜி சித்தாந்தத்தை கடந்த கால விஷயமாக குறைத்து மதிப்பிடுகின்றது.

எண்ணற்ற பாசிச வன்முறை சம்பவங்களை எடுத்துக்காட்டிய, அதன் தலைவர்களிடமிருந்து நீண்ட மேற்கோள் காட்டப்பட்ட பின்னர், மரியுபோல் அரங்கம் மீதான குண்டுவெடிப்பு போன்றவற்றை “ரஷ்யாவின் தவறான தகவல்” போன்ற போர் தொடர்பாக அசோவிலிருந்து வரும் தகவல்கள் குறித்து கேள்வி எழுப்பப்படுவதை கட்டுரை கண்டிக்கிறது.

அசோவை சுத்திகரிக்க அதிக முயற்சி எடுத்த போதிலும், உக்ரேனிய முதலாளித்துவத்திற்கு இந்தக் கதை மிகவும் உண்மையானதாக இருந்தது. பாராளுமன்ற உறுப்பினர் சேர்ஹே ராரூட்டா ஒரு பகிரங்கக் கடிதத்தை வெளியிட்டு மற்றும் முகநூலில் CNN 'ரஷ்ய பிரச்சாரத்தை' வெளியிடுவதை நிறுத்துமாறு அழைப்பு விடுத்தார்.

மரியுபோல் அரங்கம் மீதான குண்டுவெடிப்பு தொடர்பாக முக்கியமான கேள்விகள் உள்ளன. உக்ரேனில் பறக்கக் கூடாத பகுதிக்கு ஆதரவைப் பெறுவதற்காக அசோவ் ஒரு தவறான போலி நடவடிக்கையாக உருவாக்கியதாக ரஷ்யா குற்றம் சாட்டியது. குண்டுவெடிப்பின் தன்மை எதுவாக இருந்தாலும், ரஷ்ய-எதிர்ப்பு போர் உந்துதலை தீவிரப்படுத்த அழைப்புவிடுக்க மேற்கத்திய செய்தி ஊடகங்கள் மற்றும் அரசாங்கங்களால் அது விரைவில் கைப்பற்றப்பட்டது.

GrayZone இல் மக்ஸ் புளூம்ன்தால் என்பவர் அறிவித்தபடி, அரங்க குண்டுவெடிப்பின் அசோவ் புகைப்படங்கள் மேற்கத்திய ஊடகங்கள் மூலம் விரைவாகப் பரப்பப்பட்டன. அவை நவ-நாஜி ஆயுதக்குழுக்களால் எடுக்கப்பட்டவை என்பதை எந்தவிதத்திலும் மறுக்கவில்லை.

CNN, NewYorkPost மற்றும் Telegraph ஆகியவற்றால் அசோவ் படைப்பிரிவின் துணைத் தளபதி ஸ்யடோஸ்லாவ் பலாமார் மரியுபோலின் நிலைமை பற்றிய செய்திக்கான ஆதாரமாக பரவலாகப் பயன்படுத்தப்பட்டார். மீண்டும், அசோவின் நவ-நாஜி சித்தாந்தம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.

குண்டுவெடிப்பு குறித்த மேற்கத்திய ஊடக அறிக்கையானது, அசோவ் படைப்பிரிவினால் 'பணிக்கப்பட்டதாக' ஒப்புக்கொண்ட Kyiv Independent நிருபர் இல்லியா பொனோமரென்கோவின் ட்வீட்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் புளூமெண்டல் குறிப்பிட்டார்.

பொனோமரென்கோ ரஷ்யாவின் படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து ட்விட்டரில் ஒரு பெரிய பின்தொடர்பவர்களை உருவாக்கியுள்ளார் மற்றும் மேற்கத்திய பார்வையாளர்களுக்கு உக்ரேனிய போர் பிரச்சாரத்திற்கான ஒரு செய்தி கடத்துபவராக பணியாற்றுகிறார்.

இறந்த ரஷ்ய படையினர் பற்றிய இலியா பொனோமரென்கோவின் ட்விட்டர் பதிவு

உக்ரேனிய தேசியவாதம் மற்றும் போருக்கு ஊக்கமளிக்கும் போனோமரென்கோ, போர்க் கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துவதற்கான ஜெனீவாவை உடன்பாட்டை மீறி இறந்த ரஷ்ய படையினர்களின் கோரமான புகைப்படங்களைத் தொடர்ந்து பதிவிட்டு, உக்ரேனின் சார்பாக போரில் தலையிட நேட்டோவுக்கு அழைப்பு விடுக்கிறார். இதனால் உக்ரேனின் ஆயுதப்படைகள் மற்றும் தீவிர வலதுசாரிகள் நேரடியாக மீறும் சமூக ஊடக பிரச்சாரத்திற்கு உதவுகிறார்.

குறிப்பிடத்தக்க வகையில், பொனோமரென்கோவின் தொழில்வழங்குனரான, புதிதாக உருவாக்கப்பட்ட Kyiv Independent அதன் நிதியுதவியை மேற்கத்திய ஏகாதிபத்தியத்திடமிருந்து பெறுகிறது. இதில் அமெரிக்காவின் ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜனநாயகத்திற்கான ஐரோப்பிய அறக்கட்டளை ஆகியவை அடங்கும்.

மிக சமீபத்தில், புச்சாவில் பொதுமக்கள் கொல்லப்பட்டது பற்றிய புகைப்படங்கள் முதலில் பொனோமரென்கோ மற்றும் தீவிர வலதுசாரி 'செயல்பாட்டாளர்' குண்டர் சேர்ஹே ஸ்ரேர்னென்கோ போன்ற நபர்களின் சமூக ஊடக கணக்குகளில் தோன்றின. புகைப்படங்கள் மற்றும் அறிக்கைகள் பின்னர் மேற்கத்திய ஊடக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. அவை ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அதிகரிக்கவும் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ஒரு போர்க் குற்றவாளியாகத் தொடரவும் அழைப்பு விடுக்க மீண்டும் அவற்றைக் கைப்பற்றின.

மார்ச் 30 அன்று ரஷ்யப் படைகள் நகரத்தை விட்டு வெளியேறிய பின்னர் ஏப்ரல் 2 ஆம் தேதி புச்சாவிற்குள் நுழைந்த முதல் நபர்களில் அசோவ் படைப்பிரிவின் உறுப்பினர்கள் இருந்ததாக நியூ யோர்க் டைம்ஸின் புகைப்படத் தலைப்புகள் குறிப்பிடுகின்றன. இந்த உண்மை இருந்தபோதிலும், ஒரு விரும்பத்தகாத ரஷ்ய படுகொலை பற்றிய கூற்றுக்கள் விமர்சனமின்றி பரப்பப்படுகின்றன. அதே நேரத்தில் இந்த தீர்ப்பு பற்றி விசாரணைக்கு அழைப்புவிடுப்பவர்கள் 'ரஷ்ய முட்டாள்கள்' என்று தூற்றப்படுகின்றனர்.

Loading