அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் உள்ள தொழிலாளர்கள், தீவிரமடைந்து வரும் வர்த்தகப் போரில் தத்தமது ஆளும் வர்க்கங்கள் மற்றும் அரசாங்கங்களுக்குப் பின்னால் தங்களை கட்டி வைக்கும் அனைத்து முயற்சிகளையும் உறுதியாக எதிர்க்க வேண்டும்.
கனடாவின் பிரதமர் ட்ரூடோவின் இராஜினாமா, உலகெங்கிலும் முதலாளித்துவ அரசியலின் வலது நோக்கிய வன்முறையான பாய்ச்சலின் பாகமாகும். போட்டி ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் சமகால முதலாளித்துவ சமூகத்தின் தன்னலக்குழுக்களின் தன்மைக்கேற்பவும் மற்றும் உலகளாவிய போரின் மூலமாக உலகை மறுபங்கீடு செய்வதற்கான அவற்றின் உந்துதலுக்கும் ஏற்ப அரசியலை மறுகட்டமைத்து வருகின்றன.
ட்ரம்ப் தனது வர்த்தகப் போர் அச்சுறுத்தல்களைச் செயல்படுத்தினால், அது வட அமெரிக்க மற்றும் உலகப் பொருளாதாரத்தை உலுக்கி விடும். எந்த நேரத்திலும் முழுவீச்சிலான போராக வெடிக்க அச்சுறுத்தும் சீனாவுக்கு எதிரான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய தாக்குதலை ஒரேயடியாக தீவிரப்படுத்துவது குறித்து கூறுவதற்கில்லை.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாயவாதிகள் உக்ரேனில் ரஷ்யாவுடன் அவர்கள் தூண்டிய போரில் நேட்டோ சக்திகளுக்கு ஆதரவளிப்பதில் புது டெல்லி பின்வாங்கியதில் விரக்தியும் கோபமும் கொண்டுள்ளதுடன், உக்ரேனின் இராணுவ நிலை மேலும் மோசமாகிவிட்டதால் அந்த விரக்திகள் அதிகரித்துள்ளன
மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டமை கவனமாக ஆராயப்பட வேண்டிய முக்கிய சர்வதேச நிகழ்வாகும்
யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒரு வலதுசாரி முதலாளித்துவ ஆட்சியாக இருக்கும். இது நாடுகடந்த பெரும் ஆடைத் தொழிலில் நிறுவனங்கள், பிற வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் பங்களாதேஷ் முதலாளித்துவ வர்க்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும்.
திங்கள் கிழமை இராணுவத் தளபதி ஜெனரல் வாக்கர்-உஸ்-ஜமான் தொலைக்காட்சியில் தோன்றி, நாட்டிற்கு வெளியிட்ட அறிக்கையில், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததாக அறிவித்தார்.
ஒரே நேரத்தில், கணக்கிடப்பட்ட ஆத்திரமூட்டல் மற்றும் தீவிர பொறுப்பற்ற செயலில், இஸ்ரேல் கடந்த புதன்கிழமை அதிகாலை ஈரானின் தலைநகரில், ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனாயை படுகொலை செய்துள்ளது.
மோடி அரசாங்கமானது ஒரு தடுத்து நிறுத்த முடியாத சக்தி அல்ல, மாறாக ஒரு அரசியல் மற்றும் சமூக எரிமலையின் மேல் அமர்ந்திருக்கும் ஒரு தீவிர நெருக்கடியில் மூழ்கியுள்ள ஆட்சி என்பதை தேர்தல்கள் கோடிட்டுக் காட்டியுள்ளன.
பெருவணிக காங்கிரஸ் கட்சியும் அதன் இந்தியத் தேர்தல் கூட்டணிக் கட்சிகளும் பதவியேற்றால், அவர்கள் ஒரு வலதுசாரி முதலாளித்துவ அரசாங்கத்தை அமைப்பார்கள். அத்தகைய அரசாங்கம் மோடி மற்றும் அவரது பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியைப் போலவே, தொழிலாளர் விரோத, "முதலீட்டாளர்-சார்பு" சீர்திருத்தம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான புது டெல்லியின் சீன-விரோத போர் கூட்டணிக்கு அர்ப்பணித்துக்கொள்ளும்.
பா.ஜ.க.க்கு வகுப்புவாதத்தை தூண்டி விடுவதிலும் வன்முறையில் ஈடுபடுவதிலும் நீண்ட வரலாறு இருந்த போதிலும் அதன் தற்போதைய தேர்தல் பிரச்சாரம் அதன் பாசிச பிரச்சாரத்தின் தீவிரத்தன்மையினால் தனித்து நிற்கிறது.
1919 இல் இருந்து 1947-48 வரை 3 தசாப்தத்திற்கு தெற்காசியாவை அதிர வைத்த மிகப்பெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், ஒரு தலை சிறந்த விடுதலைக்கான சாத்தியக்கூறைக் கொண்டிருந்தது. ஆனால் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் தலைமையின் கீழ் அது காட்டிக்கொடுக்கப்பட்டு, கருச்சிதைக்கப்பட்டது
வடமேற்கு ஈரானில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.
ஜூன் 1 அன்று முடிவடையவுள்ள ஏழு கட்ட தேசியத் தேர்தலின் முதற்கட்டமாக 100க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகளில் இந்த வெள்ளிக்கிழமை இந்தியர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
ஹைட்டியின் அரசாங்கத் தலைவராக இருந்த ஹென்றியை விரைவாக நீக்கியது, வாஷிங்டன் ஹைட்டியின் அரசியல் தலைவர்களை, தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அல்லது இல்லாவிட்டாலும், அதன் வசதிக்கேற்ப பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதையும், வறிய ஹைட்டிய மக்களை குற்றவியல் அலட்சியத்துடனும் விரோதப் போக்குடனும் நடத்துகிறது என்பதையும் மீண்டும் நிரூபிக்கிறது.
பாதுகாப்புப் படையினருடனான மோதலில் குறைந்தபட்சம் நூறு விவசாயிகள் காயமடைந்துள்ளனர். விவசாயிகளுக்கு எதிராக தடியடி, ரப்பர் தோட்டாக்கள், நீர்-பீரங்கி மற்றும் ஏராளமான கண்ணீர்ப்புகைக் குண்டுகளும் பயன்படுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டக்காரர்களை விரட்டியடிக்க சில கண்ணீர்புகை குண்டுகள் ஆளில்லா விமானங்கள் மூலம் வீசப்பட்டன.
சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பீ.டி.ஐ.யின் வேட்பாளர்கள் சுயேட்சையாக போட்டியிட நிர்ப்பந்திக்கப்பட்ட போதிலும் அவர்கள் அதிக தொகுதிகளை வென்றுள்ளனர்.
கடந்த 28ந் திகதி ஜனவரியில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அவரது ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியானது, காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்தியா (I.N.D.I.A.) தேர்தல் கூட்டணியிலிருந்து விலகி, உடனடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) மீண்டும் நுழைந்துள்ளது.
இந்து மேலாதிக்கவாதியும் படுகொலையாளருமான மோடியை ஏகாதிபத்திய சக்திகள் அரவணைப்பது என்பது, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது தீவிர வலதுசாரி அரசாங்கம் காஸா மீதான இனப்படுகொலைத் தாக்குதலையும், உக்ரேனில் ரஷ்யாவிற்கு எதிராகப் போரை நடத்தும் ஸ்டீபன் பண்டேராவின் பாசிச சீடர்களுடன் கூட்டணி வைத்துள்ள அவர்களின் முழு ஆதரவையும் கொண்டுள்ளது.